முன்பதிவு செய்தால் போதும், இ-சைக்கிள் வீட்டிற்கு வரும்!! நஹக் மோட்டார்ஸின் ஹோம் டெலிவிரி!

நஹக் மோட்டார்ஸ் என்ற சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் அதன் கருடா மற்றும் ஜிப் எலக்ட்ரிக் சைக்கிள்களுக்கான முன்பதிவுகளை ஏற்க துவங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

முன்பதிவு செய்தால் போதும், இ-சைக்கிள் வீட்டிற்கு வரும்!! நஹக் மோட்டார்ஸின் ஹோம் டெலிவிரி!

நஹக் மோட்டார்ஸ் நிறுவனம் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கும் இந்த கருடா & சிப்பி எலக்ட்ரிக் சைக்கிள்களின் விலைகள் ரூ.31,999 மற்றும் ரூ.33,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

முன்பதிவு செய்தால் போதும், இ-சைக்கிள் வீட்டிற்கு வரும்!! நஹக் மோட்டார்ஸின் ஹோம் டெலிவிரி!

கடந்த ஜூலை 2ஆம் தேதியில் இருந்து துவங்கிய இந்த எலக்ட்ரிக் சைக்கிள்களுக்கான முதற்கட்ட முன்பதிவுகள் வருகிற ஜூலை 11ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் www.nahakmotors.eco இணையத்தள பக்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்தால் போதும், இ-சைக்கிள் வீட்டிற்கு வரும்!! நஹக் மோட்டார்ஸின் ஹோம் டெலிவிரி!

இந்த இணைய பக்கத்தில் சைக்கிள்களை முன்பதிவு செய்வது மிக எளிதாகும். விண்ணப்பம் ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டும், ரூ.2999 என்ற டோக்கன் தொகையை செலுத்த வேண்டும், அவ்வளவுதான். இந்த முன்பதிவின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த இ-சைக்கிள்களை முன்பதிவு செய்தால், வாகனம் வீட்டிற்கே வந்தே டெலிவிரி கொடுக்கப்படுமாம்.

முன்பதிவு செய்தால் போதும், இ-சைக்கிள் வீட்டிற்கு வரும்!! நஹக் மோட்டார்ஸின் ஹோம் டெலிவிரி!

கருடா & சிப்பி இ-சைக்கிள்களின் டெலிவிரி பணிகள் வருகிற ஜூலை 13ஆம் தேதியில் இருந்து துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹோம் டெலிவிரி ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தில் இருந்துதான் தொடங்கப்பட உள்ளது.

முன்பதிவு செய்தால் போதும், இ-சைக்கிள் வீட்டிற்கு வரும்!! நஹக் மோட்டார்ஸின் ஹோம் டெலிவிரி!

இந்த இரு சைக்கிள் மாடல்களிலும் நீக்கக்கூடிய பேட்டரி, எல்சிடி திரை மற்றும் பெடல் சென்சார் தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்ய கிட்டத்தட்ட 3 மணிநேரங்கள் தேவைப்படுமாம். இவற்றை வீட்டின் மின்சாரத்தை பயன்படுத்தியே சார்ஜ் செய்யலாம்.

முன்பதிவு செய்தால் போதும், இ-சைக்கிள் வீட்டிற்கு வரும்!! நஹக் மோட்டார்ஸின் ஹோம் டெலிவிரி!

முழு பேட்டரி சார்ஜில் சுமார் 40கிமீ தூரத்திற்கு இயங்கும் திறன் கொண்ட இந்த இ-சைக்கிள்களை சாலையில் ஓட்டி செல்ல எந்தவொரு ஓட்டுனர் உரிமமும் தேவையில்லை. இந்த சைக்கிள்களில் பயணிப்பதற்கு கிலோமீட்டருக்கு வெறும் 10 பைசா மட்டுமே செலவாகும் என நஹக் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

முன்பதிவு செய்தால் போதும், இ-சைக்கிள் வீட்டிற்கு வரும்!! நஹக் மோட்டார்ஸின் ஹோம் டெலிவிரி!

இந்த ஹோம் டெலிவிரி குறித்து நஹக் க்ரூப், சேர்மன் டாக்டர்.பிராவட் நஹக் கூறுகையில், 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமைச்சர் ஸ்ரீ பிரதாப் சந்திர சாரங்கி அவர்களின் முன்னிலையில் எங்கள் எலக்ட்ரிக் சைக்கிள்களை அறிமுகப்படுத்தினோம்.

முன்பதிவு செய்தால் போதும், இ-சைக்கிள் வீட்டிற்கு வரும்!! நஹக் மோட்டார்ஸின் ஹோம் டெலிவிரி!

இருப்பினும் தற்போதைய ஊரடங்கு சூழலை கருத்தில் கொண்டு எலக்ட்ரிக் சைக்கிள்கள் தயாரிப்பை தாமதப்படுத்தியுள்ளோம். இ-சைக்கிள்களுக்கு பெரிய தேவை உள்ளது. இதனாலேயே வாடிக்கையாளர்களை நேரடியாக அவர்களது வீட்டிற்கே சென்று அணுக முடிவு செய்துள்ளோம்.

முன்பதிவு செய்தால் போதும், இ-சைக்கிள் வீட்டிற்கு வரும்!! நஹக் மோட்டார்ஸின் ஹோம் டெலிவிரி!

இந்திய நுகர்வோர் அனைத்து வகையான தயாரிப்புகளையும், இணையத்தில் முன்பதிவு செய்து வாங்கும் அளவிற்கு வந்துவிட்டனர். எங்களிடம் இருந்து இ-சைக்கிள்களை வாங்குவதும் ஆன்லைனில் மற்ற பொருட்களை வாங்குவது போல் எளிதாக இருக்கும். ஆகஸ்ட் 15 முதல் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசல்களில் இ-சைக்கிளை டெலிவிரி செய்வோம் என தெரிவித்தார்.

Most Read Articles

மேலும்... #சைக்கிள் #cycle
English summary
Nahak Motors E-Cycles To Be Delivered To Your Doorstep; Bookings Open.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X