புதிய இந்தியன் சீஃப் மற்றும் எஃப்டிஆர் மோட்டார்சைக்கிள்கள் இந்திய வருகை விபரம்!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய இந்தியன் சீஃப் மற்றும் எஃப்டிஆர் வரிசை மோட்டார்சைக்கிள்கள் விரைவில் இந்தியா வர இருக்கின்றன. அதன் அறிமுக விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய இந்தியன் சீஃப் மற்றும் எஃப்டிஆர் மோட்டார்சைக்கிள்கள் இந்திய வருகை விபரம்!

இந்தியாவின் மிகவும் உயரிய வகை மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் நிறுவனம் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் சீஃப் மற்றும் எஃப்டிஆர் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியன் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய இந்தியன் சீஃப் மற்றும் எஃப்டிஆர் மோட்டார்சைக்கிள்கள் இந்திய வருகை விபரம்!

இதில், 2022ம் ஆண்டு மாடலாக மேம்படுத்தப்பட்ட 6 சீஃப் வரிசையிலான மோட்டார்சைக்கிள் மாடல்களில் மூன்று மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த மூன்று மாடல்களில் தண்டர்ஸ்ட்ரோக் 116 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

புதிய இந்தியன் சீஃப் மற்றும் எஃப்டிஆர் மோட்டார்சைக்கிள்கள் இந்திய வருகை விபரம்!

இந்த எஞ்சின் ஏற்கனவே விண்டேஜ், ஸ்பிரிங்ஃபீல்டு, சீஃப்டெயின் மற்றும் ரோடுமாஸ்டர் ஆகிய மாடல்களில் இடம்பெற்றுள்ளன. இந்த மாடல்கள் ஏற்கனவே இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டன. இந்த நிலையில், சீஃப் வரிசையில் சீஃப் டார்க் ஹார்ஸ், சீஃப் பாபர் டார்க் ஹார்ஸ் மற்றும் சூப்பர் சீஃப் லிமிடேட் ஆகிய மாடல்கள் வர இருக்கின்றன. இந்த மாடல்கள் ரூ.20.75 லட்சம் விலையிலிருந்து கிடைக்கும்.

புதிய இந்தியன் சீஃப் மற்றும் எஃப்டிஆர் மோட்டார்சைக்கிள்கள் இந்திய வருகை விபரம்!

எஃப்டிஆர் வரிசையில் பிஎஸ்-6 எஞ்சின் கொண்ட மாடல்களும் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. பிஎஸ்-4 எஞ்சினுடன் எஃப்டிஆர் 1200எஸ் மற்றும் 1200 எஸ் ரேஸ் ரெப்லிக்கா ஆகிய மாடல்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த மாடல்களில் 120 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 1,203சிசி வி-ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருந்தன. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருந்தது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 தரத்திற்கு இணையானதாக மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது.

புதிய இந்தியன் சீஃப் மற்றும் எஃப்டிஆர் மோட்டார்சைக்கிள்கள் இந்திய வருகை விபரம்!

கடந்த ஆண்டு 2021 மாடல்களின் விலை விபரத்தை இந்தியன் நிறுவனம் வெளியிட்டது. இதில், ஸ்கவுட் மோட்டார்சைக்கிள் ரூ.15.67 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த மாடலில் 1,133சிசி வி-ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 97என்எம் டார்க் திறனை வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. விண்டேஜ் வரிசை மாடல்களில் 1,890சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 168 என்எம் டார்க் திறனை வழங்கும்.

புதிய இந்தியன் சீஃப் மற்றும் எஃப்டிஆர் மோட்டார்சைக்கிள்கள் இந்திய வருகை விபரம்!

வரும் ஆகஸ்ட் மாதத்தில் சீஃப் மற்றும் எஃப்டிஆர் வரிசையில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது.

Most Read Articles

English summary
According to the latest report by Autocar India, The 2022 Indian Chief line-up will arrive in India in the month of August, along with the return of the FTR model range, in BS6-compliant form. Talking a little about the 2022 Indian Chief line-up, three of the six models in the global 2022 Indian Chief line-up are slated.
Story first published: Tuesday, June 1, 2021, 10:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X