இந்தியா வரும் புதிய ஏப்ரிலியா டூவோனோ 660 வெளியீடு... முக்கிய அம்சங்கள் விபரம்!

இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் புதிய ஏப்ரிலியா டூவோனோ 660 பைக் முறைப்படி வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பைக்கின் முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 இந்தியா வரும் புதிய ஏப்ரிலியா டூவோனோ 660 வெளியீடு... முக்கிய அம்சங்கள் விபரம்!

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஏப்ரிலியா ஆர்எஸ்660 ஸ்போர்ட்ஸ் பைக் மாடலின் அடிப்படையிலான நேக்கட் ரக ஸ்ட்ரீட்ஃபைட்டர் மாடலாக இந்த பைக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டுவோனோ 1100 பைக்கின் மினியேச்சர் வெர்ஷனாக இந்த பைக் மாடலை ஏப்ரிலியா குறிப்பிடுகிறது.

ஏப்ரிலியா ஆர்எஸ்660 ஸ்போர்ட்ஸ் பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 660சிசி பேரலல் ட்வின் எஞ்சின்தான் இந்த புதிய மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், பவரை வெளிப்படுத்தும் விதத்தில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

 இந்தியா வரும் புதிய ஏப்ரிலியா டூவோனோ 660 வெளியீடு... முக்கிய அம்சங்கள் விபரம்!

ஏப்ரிலியா ஆர்எஸ்660 பைக் அதிகபட்சமாக 100 எச்பி பவரை அளிக்கும் நிலையில், இந்த எஞ்சின் அதிகபட்சமாக 95 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.

 இந்தியா வரும் புதிய ஏப்ரிலியா டூவோனோ 660 வெளியீடு... முக்கிய அம்சங்கள் விபரம்!

ஏப்ரிலியா ஆர்எஸ்660 பைக்கில் இருக்கும் பிரம்மாண்ட ஃபேரிங் பேனல்கள் நீக்கப்பட்டு, சிறிய ஃபேரிங் பேனலுடன் நேக்கட் ரக மாடலாக காட்சி தருகிறது.

 இந்தியா வரும் புதிய ஏப்ரிலியா டூவோனோ 660 வெளியீடு... முக்கிய அம்சங்கள் விபரம்!

இந்த பைக்கில் க்ளிப் ஆன் ஹேண்டில்பார் அமைப்பு மூலமாக ஓட்டுபவருக்கு நேராக அமர்ந்து ஓட்டும் வாய்ப்பை வழங்குகிறது. இதனால், பயணங்களின் போது சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும். சிறிய விண்ட்ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 இந்தியா வரும் புதிய ஏப்ரிலியா டூவோனோ 660 வெளியீடு... முக்கிய அம்சங்கள் விபரம்!

புதிய டூவோனோ 660 பைக்கில் ஏப்ரிலியா நிறுவனத்தின் ரைடு கன்ட்ரோல் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய 6 ஆக்சிஸ் இனர்ஷியல் மெசர்மென்ட் யூனிட் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று நிலைகளில் மாற்றும் வசதியுடன் கார்னரிங் ஏபிஎஸ், அட்ஜெஸ்ட் வசதியுடன் வீலி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் எஞ்சின் பிரேக் கன்ட்ரோல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 இந்தியா வரும் புதிய ஏப்ரிலியா டூவோனோ 660 வெளியீடு... முக்கிய அம்சங்கள் விபரம்!

இந்த பைக்கில் அப்சைடு டவுன் குயிக் ஷிஃப்டர், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகிய வசதிகளும் உள்ளன. கம்யூட், டைனமிக், இன்டிவிஜூவல், சேலஞ்ச் மற்றும் டைம் அட்டாக் என 5 விதமான ரைடிங் மோடுகள் உள்ளன. டிஎஃப்டி திரை மூலமாக இந்த ரைடிங் மோடுகளை கட்டுப்படுத்தும் வசதி உள்ளது.

 இந்தியா வரும் புதிய ஏப்ரிலியா டூவோனோ 660 வெளியீடு... முக்கிய அம்சங்கள் விபரம்!

இந்த பைக்கின் முன்புறத்தில் 41 மிமீ கயபா அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன. முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் பிரெம்போ ரேடியல் காலிபர்கள் மற்றும் இரண்டு 320 மிமீ டிஸ்க்குகள் கொண்ட பிரேக் சிஸ்டமும், பின்சக்கரத்தில் இரண்டு பிஸ்டன்கள் மற்றும் 220 மிமீ டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டமும் உள்ளன.

 இந்தியா வரும் புதிய ஏப்ரிலியா டூவோனோ 660 வெளியீடு... முக்கிய அம்சங்கள் விபரம்!

புதிய ஏப்ரிலியா டூவோனோ 660 பைக் கான்செப்ட் பிளாக், இரிடியம் க்ரே மற்றும் ஆசிட் கோல்டு ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். வரும் மார்ச் மாதம் வெளிநாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவிலும் இந்த பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #அப்ரிலியா #aprilia
English summary
Aprilia has revealed the all-new Tuono 660 bike globally. The new bike expected to launch in India by second half of this year.
Story first published: Friday, January 8, 2021, 12:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X