மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பஜாஜ் பல்சர் 180 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.1,04,768

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பஜாஜ் பல்சர் 180 பிஎஸ்6 பைக் ரூ.1,04,768 என்ற விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பல்சர் பைக்கை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பஜாஜ் பல்சர் 180 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.1,04,768

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் பிரபலமான பல்சர் வரிசை பைக்குகளுள் ஒன்றான பல்சர் 180-ன் விற்பனையை கடந்த 2019ல் புதிய மாசு உமிழ்விற்கு இணக்கமானதாக அப்டேட் செய்யாததால் நிறுத்தி இருந்தது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பஜாஜ் பல்சர் 180 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.1,04,768

பிரபலமான பல்சர் 220எஃப் பைக்கில் இருந்து வடிவமைக்கப்பட்ட பல்சர் 180எஃப் பைக் மட்டுமே விற்பனையில் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு பிஎஸ்6 என்ஜின் உடன் பல்சர் 180 பைக் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பஜாஜ் பல்சர் 180 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.1,04,768

ரூ.1,04,768 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த பிஎஸ்6 பைக்கை தற்போதைக்கு கருப்பு- சிவப்பு என்ற நிறத்தில் மட்டுமே வாடிக்கையாளர் வாங்க முடியும். இரட்டை டிஆர்எல்களுடன் சிங்கிள்-பேட் ஹெட்லைட்டை பெற்று வந்துள்ள புதிய பல்சர் 180 பைக்கில் முன்பக்கத்தில் டூமிற்கு மேலே கருப்பு நிற விஸர் பொருத்தப்பட்டுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பஜாஜ் பல்சர் 180 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.1,04,768

காக்பிட்டில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் செமி-டிஜிட்டல் தரத்தில் வழங்கப்பட்டுள்ளது. மற்ற டிசைன் ஹைலைட்களாக கவசத்துடன் பருத்த பெட்ரோல் டேங்க், என்ஜின் கௌல், பிளவுப்பட்ட-ஸ்டைலில் இருக்கை அமைப்பு மற்றும் இரு துண்டுகளாக தலையணை க்ராப் ரெயில் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பஜாஜ் பல்சர் 180 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.1,04,768

மெக்கானிக்கல் மற்றும் இயந்திர பாகங்களில் பல்சர் 180எஃப் பைக்கை தான் புதிய பல்சர் 180 பைக்கும் ஒத்து காணப்படுகிறது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த புதிய பல்சர் பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 178.6சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பஜாஜ் பல்சர் 180 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.1,04,768

அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 16.7 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-ல் 14.52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்பாக முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் வாயு மூலமாக சார்ஜ் செய்யக்கூடிய இரட்டை சுருள்களும் பொருத்தப்படுகின்றன.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பஜாஜ் பல்சர் 180 பைக் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.1,04,768

பிரேக்கிங் அமைப்பாக முன் சக்கரத்தில் 280மிமீ-ல் சிங்கிள் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 230மிமீ-ல் சிங்கிள் ரோடாரும் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் பயணிகளின் பாதுகாப்பிற்கு சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்-ஐயும் பைக் பெற்றுள்ளது. புதிய பஜாஜ் பல்சர் 180 பிஎஸ்6 பைக்கிற்கு போட்டியாக ஹோண்டா ஹார்னெட் 2.0 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்குகள் உள்ளன.

Most Read Articles

English summary
Bajaj Pulsar 180 BS6 Launched In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X