புதிய பஜாஜ் பல்சர் 250 vs யமஹா எஃப்.இசட்25 vs சுஸுகி ஜிக்ஸெர்250!! 250சிசி-யில் எந்த பைக்கை தேர்வு செய்யலாம்?

இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் புதிய 250சிசி பல்சர் பைக்குகளாக என்250 & எஃப்250 மோட்டார்சைக்கிள்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதில் என்250 ஆனது பல்சர் என்.எஸ்200-ஐ போல் நாக்டு வெர்சனாகும். அதுவே எஃப்250 பைக்கானது சற்று பேனல்களால் நிரப்பப்பட்ட செமி-ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிளாகும்.

புதிய பஜாஜ் பல்சர் 250 vs யமஹா எஃப்.இசட்25 vs சுஸுகி ஜிக்ஸெர்250!! 250சிசி-யில் எந்த பைக்கை தேர்வு செய்யலாம்?

இந்திய சந்தையில் விற்பனையில் பல்சர் 250 பைக்குகளுக்கு யமஹா எஃப்.இசட்25 மற்றும் சுஸுகி ஜிக்ஸெர் 250 நேரடி போட்டி மாடல்களாக விளங்குகின்றன. ஏனெனில் 250சிசி பைக்குகளான இவை இரண்டில் எஃப்.இசட்25 நாக்டு மோட்டார்சைக்கிளாகும். எனவே இது பல்சர் என்250 பைக்கிற்கு சரியான போட்டியாக விளங்குகிறது.

புதிய பஜாஜ் பல்சர் 250 vs யமஹா எஃப்.இசட்25 vs சுஸுகி ஜிக்ஸெர்250!! 250சிசி-யில் எந்த பைக்கை தேர்வு செய்யலாம்?

பல்சர் எஃப்250 பைக்கிற்கு போட்டியாக மற்றொரு செமி-ஃபேர்டு பைக்கான ஜிக்ஸெர் எஸ்.எஃப்250 உள்ளது. பஜாஜ் பல்சர் 250, யமஹா எஃப்.இசட்25 மற்றும் சுஸுகி ஜிக்ஸெர் 250 இவை மூன்றிற்கும் இடையேயான வித்தியாசங்களையும், ஒற்றுமையையும் பற்றி தான் இனி இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். வாருங்கள் செய்திக்குள் போவோம்.

புதிய பஜாஜ் பல்சர் 250 vs யமஹா எஃப்.இசட்25 vs சுஸுகி ஜிக்ஸெர்250!! 250சிசி-யில் எந்த பைக்கை தேர்வு செய்யலாம்?

தோற்றத்தை பொறுத்தவரையில் பல்சர் என்250- எஃப்.இசட்25-க்கும், எஃப்250- ஜிக்ஸெர் எஸ்.எஃப்250-க்கும் இடையே தான் போட்டி. பல்சர் 250 பைக்குகளின் முழுமையான பரிமாண அளவுகள் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை. இந்த புதிய பல்சர் பைக்குகள் 1351மிமீ நீளத்தில் வீல்பேஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. வீல்பேஸ் என்பது முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரமாகும்.

புதிய பஜாஜ் பல்சர் 250 vs யமஹா எஃப்.இசட்25 vs சுஸுகி ஜிக்ஸெர்250!! 250சிசி-யில் எந்த பைக்கை தேர்வு செய்யலாம்?

இந்த வகையில் பார்த்தோமேயானால், எஃப்.இசட் (1340மிமீ) மாடலுக்கும், ஜிக்ஸெர் (1360மிமீ) மாடலுக்கும் இடைப்பட்ட நீளத்தில் வீல்பேஸை பல்சர் 250 பெற்று வந்துள்ளது. அதேபோல் போட்டி மாடல்களுடன் ஒப்பிடுகையில் பல்சர் 250 பைக்குகள் எடைமிக்கதாக உருவாக்கப்பட்டுள்ளன. பல்சர் என்250-இன் எடை 162 கிலோ மற்றும் எஃப்250-இன் எடை 164 கிலோ ஆகும். குறைவான எடையில் 250சிசி பைக்கை பெற விரும்புபவர்கள் யமஹா எஃப்.இசட்25 பைக்கை தேர்வு செய்யலாம்.

புதிய பஜாஜ் பல்சர் 250 vs யமஹா எஃப்.இசட்25 vs சுஸுகி ஜிக்ஸெர்250!! 250சிசி-யில் எந்த பைக்கை தேர்வு செய்யலாம்?

க்ரவுண்ட் க்ளியரென்ஸில் பல்சர் 250 & சுஸுகி ஜிக்ஸெர் மாடல்கள் சிறப்பானவைகளாக விளங்குகின்றன. ஏனெனில் இவற்றில் எஃப்.இசட்25 பைக்கை காட்டிலும் 5மிமீ அதிகமாக 165மிமீ அளவில் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை இவை நான்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக 795மிமீ-இல் இருந்து 800மிமீ வரையில் கொண்டுள்ளன.

புதிய பஜாஜ் பல்சர் 250 vs யமஹா எஃப்.இசட்25 vs சுஸுகி ஜிக்ஸெர்250!! 250சிசி-யில் எந்த பைக்கை தேர்வு செய்யலாம்?

இவற்றிற்கு இடையே முக்கியமான வித்தியாசம் எதுவென்றால், பல்சர் 250 பைக்குகள் குழாய் ஃப்ரேமின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால் மற்ற இரண்டும் டைமண்ட் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ளன. மற்றப்படி தொழிற்நுட்ப அம்சங்களில், யுஎஸ்பி சார்ஜிங், எல்இடி ஹெட்லைட் & டெயில்லைட், டிஆர்எல்கள் உள்ளிட்டவற்றை இந்த 250சிசி பைக்குகள் அனைத்தும் கொண்டுள்ளன.

புதிய பஜாஜ் பல்சர் 250 vs யமஹா எஃப்.இசட்25 vs சுஸுகி ஜிக்ஸெர்250!! 250சிசி-யில் எந்த பைக்கை தேர்வு செய்யலாம்?

ஆனால் தற்கால மாடர்ன் வாடிக்கையாளர்கள் கேட்கும் இணைப்பு வசதி இவற்றில் எந்த மோட்டார்சைக்கிளிலும் வழங்கப்படவில்லை. இத்தனைக்கும், சமீபத்திய பல்சர் 250 பைக்கில் கூட பஜாஜ் நிறுவனம் வழங்கவில்லை. விலையை கருத்தில் கொண்டு மொபைல் போன் இணைப்பு வசதியினை வழங்க இந்த புனே ஆட்டோமொபைல் நிறுவனம் தயக்கம் காட்டியுள்ளது என எண்ணுகிறோம்.

புதிய பஜாஜ் பல்சர் 250 vs யமஹா எஃப்.இசட்25 vs சுஸுகி ஜிக்ஸெர்250!! 250சிசி-யில் எந்த பைக்கை தேர்வு செய்யலாம்?

அதேபோல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றவைகளில் டிஜிட்டல் தரத்தில் வழங்கப்பட, புதிய பல்சர் 250 பைக்குகளில் செமி-டிஜிட்டல் தரத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளன. என்ஜின் அமைப்பிற்கு வந்தோமேயானால், இவை நான்கிலும் ஒரே மாதிரியான 249சிசி சிங்கிள்-சிலிண்டர் SOHC என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் எல்லாவற்றையும் விட அதிகமாக சுஸுகி ஜிக்ஸெர் எஸ்.எஃப்250 பைக்கில் அதிகப்பட்சமாக 26 பிஎச்பி மற்றும் 22.2 என்எம் டார்க் திறன் வரையில் கிடைக்கிறது.

புதிய பஜாஜ் பல்சர் 250 vs யமஹா எஃப்.இசட்25 vs சுஸுகி ஜிக்ஸெர்250!! 250சிசி-யில் எந்த பைக்கை தேர்வு செய்யலாம்?

இதற்கு காரணம் மற்றவைகளின் என்ஜின் அமைப்பில் 2-வால்வு செட்-அப் வழங்கப்படுகிறது. ஆனால் ஜிக்ஸெர் 250 பைக்குகளில் மட்டும் 4-வால்வு என்ஜினை சுஸுகி நிறுவனம் வழங்குகிறது. இவற்றில் குறைந்தப்பட்சமாக யமஹா எஃப்.இசட்25 பைக்கின் என்ஜின் அதிகப்பட்சமாகவே 20.8 பிஎஸ் மற்றும் 20.1 என்எம் டார்க் திறனையே வெளிப்படுத்துகிறது. டிரான்ஸ்மிஷனுக்கு மற்றவைகளில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்க, ஜிக்ஸெர் 250 பைக்கில் மட்டும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

புதிய பஜாஜ் பல்சர் 250 vs யமஹா எஃப்.இசட்25 vs சுஸுகி ஜிக்ஸெர்250!! 250சிசி-யில் எந்த பைக்கை தேர்வு செய்யலாம்?

இவை நான்கிலும் முன்பக்க சஸ்பென்ஷனில் பெரிதாக மாற்றமில்லை. ஆனால் பின்பக்க சஸ்பென்ஷனில் யமஹா எஃப்.இசட்25 பைக் மட்டும் 7-வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோக்ராஸை கொண்டுள்ளது. இதனால் மற்றவைகளுடன் ஒப்பிடுகையில் இந்த 250சிசி யமஹா பைக்கில் பயண அனுபவம் நிச்சயம் வித்தியாசப்படும். பயணிகளின் பாதுகாப்பிற்கு ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எஃப்.இசட்25 மற்றும் ஜிக்ஸெர் மாடல்களில் கூட ட்யுல்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது.

புதிய பஜாஜ் பல்சர் 250 vs யமஹா எஃப்.இசட்25 vs சுஸுகி ஜிக்ஸெர்250!! 250சிசி-யில் எந்த பைக்கை தேர்வு செய்யலாம்?

ஆனால் புதிய பல்சர் 250 பைக்குகளில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் தான் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்சர் 250 பைக்குகளின் தொழிற்நுட்ப அம்சங்களில் பஜாஜ் நிறுவனம் கை வைத்திருப்பதற்கு முக்கிய காரணம், பெரும்பாலான மக்கள் வாங்கக்கூடிய விலையில் தயாரிப்பை கொண்டுவர வேண்டும் என்ற எண்ணமே. இதனால் தான் பல்சர் 250 பைக்குகளின் விலைகளை ரூ.1.38 லட்சத்தில் இருந்து ரூ.1.40 லட்சம் வரையில் நிர்ணயிக்க முடிந்துள்ளது. எஃப்.இசட்25 பைக்கின் விலை ரூ.1.36 லட்சம் -ரூ.1.42 லட்சம். ஜிக்ஸெர் 250-இன் விலை ரூ.1.71 லட்சம் -ரூ.1.84 லட்சம்.

Most Read Articles
English summary
New Bajaj Pulsar 250 Vs Yamaha FZ25 Vs Suzuki Gixxer 250
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X