புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 125 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... குறைவான விலை ஸ்போர்ட்ஸ் பைக்!

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பல்சர் என்எஸ் 125 பைக் மாடலை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்,, விலை விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 125 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... குறைவான விலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்!

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் என்எஸ் வரிசையில் 200சிசி மற்றும் 160சிசி மாடல்கள் விற்பனையில் உள்ளன. போட்டியாளர்களைவிட மிக சவாலான விலையில் கிடை்ககும் சிறந்த ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களாக இருப்பதால், இளம் தலைமுறை வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த இரண்டு மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

 புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 125 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... குறைவான விலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்!

இந்த நிலையில், குறைவான விலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக பல்சர் என்எஸ் பைக்கின் மிக குறைவான பட்ஜெட் கொண்ட மாடலை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

 புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 125 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... குறைவான விலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்!

அதாவது, பல்சர் என்எஸ் பைக்கில் 125சிசி எஞ்சினுடன் விற்பனைக்கு களமிறக்கி உள்ளது பஜாஜ். இந்த புதிய மாடலில் 2 வால்வுகள் கொண்ட 124.4சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 12 எச்பி பவரையும், 11 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

 புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 125 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... குறைவான விலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்!

சாதாரண பல்சர் 125 பைக்கில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின்தான் என்றாலும், பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தும் திறனில் சிறிய வேறுபாடுகள் உள்ளன. இந்த பைக் எஞ்சினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

 புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 125 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... குறைவான விலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்!

புதிய பல்சர் என்எஸ் 125 பைக்கில் பெரிமீட்டர் ஃப்ரேம் அமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளன.

 புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 125 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... குறைவான விலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்!

இந்த பைக் 144 கிலோ எடை கொண்டது. பல்சர் என்எஸ் 160 பைக்கைவிட இந்த மாடல் 7 கிலோ குறைவான எடை கொண்டதாக இருக்கிறது. அத்துடன், தரையிலிருந்து 179 மிமீ அளவில் இருக்கை உயரத்தையும், 805 மிமீ வீல் பேஸ் நீளத்தையும் பெற்றிருக்கிறது.

 புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 125 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... குறைவான விலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்!

பல்சர் என்எஸ் 200 மற்றும் பல்சர் என்எஸ் 160 பைக்குகளின் டிசைனை அப்படியே தக்க வைத்துள்ளது. எந்த பெரிய மாற்றங்களும் இல்லை. நேக்கட் வகையிலான இந்த பைக் மிக வசீகரமான தோற்றத்தை பெற்றிருக்கிறது. ஸ்பிளிட் இருக்கை, 12 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் ஆகியவையும் இதன் குறிப்பிடத்தக்க விஷயங்களாக உள்ளன.

 புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 125 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... குறைவான விலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்!

புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 125 பைக் மாடலானது பீச் புளூ, ஃபியரி ஆரஞ்ச், பர்ன்ட் ரெட் மற்றும் ப்யூடெர் க்ரே ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இதன் பாடி ஹை கிளாஸ் மெட்டாலிக் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் ஃப்ரேம் மற்றும் அலாய் சக்கரங்கள் பித்தளை வண்ணத்தில் இருக்கின்றன.

 புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 125 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... குறைவான விலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்!

புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 125 பைக் ரூ.93,690 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 160சிசி மாடலைவிட ரூ.16,000 குறைவான விலையில் வந்துள்ளது. ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் வாங்க விரும்புவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக அமையும் என்று கூறலாம்.

Most Read Articles

English summary
Bajaj has launched their entry level sports bike model, Pulsar NS125 at a price of Rs. 93,690 (ex-showroom, Delhi).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X