அறிமுகத்திற்கு தயாராக பெனெல்லியின் 250சிசி அட்வென்ச்சர் பைக் - டிஆர்கே251!! கேடிஎம் 250 அட்வென்ச்சருக்கு சவால்

பெனெல்லி டிஆர்கே 251 அட்வென்ச்சர் 250சிசி மோட்டார்சைக்கிளின் புதிய டீசர் வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களையும், இந்த புதிய பெனெல்லி அட்வென்ச்சர் பைக்கை பற்றியும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிமுகத்திற்கு தயாராக பெனெல்லியின் 250சிசி அட்வென்ச்சர் பைக் - டிஆர்கே251!! கேடிஎம் 250 அட்வென்ச்சருக்கு சவால்

2021ஆம் ஆண்டு பெனெல்லி இந்தியா நிறுவனத்திற்கு நல்ல ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் கடந்த ஜனவரி மாதம் டிஆர்கே 502 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை ரூ.4.8 லட்சத்தில் அறிமுகப்படுத்திய பெனெல்லி இந்தியா அதனை தொடர்ந்து அதற்கடுத்த பிப்ரவரி மாதத்தில் லியான்சினோ 500 பைக்கை விற்பனைக்கு கொண்டுவந்தது.

அறிமுகத்திற்கு தயாராக பெனெல்லியின் 250சிசி அட்வென்ச்சர் பைக் - டிஆர்கே251!! கேடிஎம் 250 அட்வென்ச்சருக்கு சவால்

டிஆர்கே 502எக்ஸ் மோட்டார்சைக்கிள் 2021 மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2021 ஜூலை மாதத்தில் பெனெல்லி 502சி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. அதன்பின் எந்த அறிமுகமும் பெனெல்லி நிறுவனத்தில் இருந்து அதன்பின் இல்லை. இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் பெனெல்லி மோட்டார்சைக்கிளாக இம்பீரியல் 400 ஏற்கனவே விற்பனையில் இருந்து வருகிறது.

நாம் இந்த டீசர் வீடியோவில் பார்க்கும் அட்வென்ச்சர் பைக் இம்பீரியல் 400-ஐ காட்டிலும் விலை குறைவானதாக கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் அதன் முதல் பைக்கை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், இந்திய சந்தையில் 250சிசி- 600சிசி இல் மொத்தம் 7 மோட்டார்சைக்கிள்களை புதியதாக அறிமுகப்படுத்த உள்ளதாக பெனெல்லி இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தது.

அறிமுகத்திற்கு தயாராக பெனெல்லியின் 250சிசி அட்வென்ச்சர் பைக் - டிஆர்கே251!! கேடிஎம் 250 அட்வென்ச்சருக்கு சவால்

இதில் 4 பைக்குகள் அறிமுகமாகிவிட்டன. 5வது பெனெல்லி பைக்காகவே இந்த அட்வென்ச்சர் பைக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 5வது அறிமுகத்தை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது இந்த டீசர் வீடியோவை பெனெல்லி வெளியிட்டுள்ளது. மற்றப்படி இந்த புதிய பெனெல்லி பைக்கை பற்றி பெரிய அளவில் எந்த விபரத்தையும் இந்த வீடியோவில் பார்க்க முடியவில்லை.

அறிமுகத்திற்கு தயாராக பெனெல்லியின் 250சிசி அட்வென்ச்சர் பைக் - டிஆர்கே251!! கேடிஎம் 250 அட்வென்ச்சருக்கு சவால்

இந்த வீடியோவை பார்க்கும் சிலருக்கு 2019இல் அறிமுகப்படுத்தப்பட்ட டிஆர்கே 251 பைக் ஞாபகத்திற்கு வரலாம். ஏனெனில் இதேபோன்றதான டீசர் வீடியோ ஒன்று அப்போது வெளியிடப்பட்டு இருந்தது. இந்தியாவில் விலை குறைவான அட்வென்ச்சர் பைக்குகளுக்கு தேவை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ள வரும் பெனெல்லி டிஆர்கே 251 பைக் பெரும்பான்மையாக பெனெல்லியின் டிஆர்கே 502 அட்வென்ச்சர் பைக்கில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

அறிமுகத்திற்கு தயாராக பெனெல்லியின் 250சிசி அட்வென்ச்சர் பைக் - டிஆர்கே251!! கேடிஎம் 250 அட்வென்ச்சருக்கு சவால்

இரும்பு குழாய் ட்ரெல்லிஸ் சட்டகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பெனெல்லி அட்வென்ச்சர் பைக்கில் 17 இன்ச்சில் மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்கள் வழங்கப்படவுள்ளன. இவற்றில் முன்பக்கத்தில் 110/70 அளவிலான டயர்களும், பின்பக்கத்தில் 150/60 அளவிலான டயர்களும் பொருத்தப்பட உள்ளன. சஸ்பென்ஷனுக்கு 41மிமீ-இல் தலைக்கீழான ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 51மிமீ-இல் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன.

அறிமுகத்திற்கு தயாராக பெனெல்லியின் 250சிசி அட்வென்ச்சர் பைக் - டிஆர்கே251!! கேடிஎம் 250 அட்வென்ச்சருக்கு சவால்

பிரேக்கிங் பணியினை கவனிக்க முன் சக்கரத்தில் 4 பிஸ்டன் காலிபர் உடன் 280மிமீ சிங்கிள் டிஸ்க்கும், பின்பக்கத்தில் சிங்கிள் பிஸ்டன் உடன் 240மிமீ டிஸ்க்கும் பொருத்தப்படுகின்றன. எல்இடி ஹெட்லேம்ப்களை முன்பக்கத்தில் கொண்டுள்ள டிஆர்கே 251 அட்வென்ச்சர் பைக்கில் நேர்த்தியான முன்பக்க மட்கார்ட் மற்றும் பெரிய எதிர்காற்று தடுப்பு கண்ணாடியும் பொருத்தப்படுகிறது.

அறிமுகத்திற்கு தயாராக பெனெல்லியின் 250சிசி அட்வென்ச்சர் பைக் - டிஆர்கே251!! கேடிஎம் 250 அட்வென்ச்சருக்கு சவால்

இதன் அகலமான ஹேண்டில்பார் செட்அப் அட்வென்ச்சர் பயணத்தின்போதும் சிறப்பான கண்ட்ரோலை வழங்கும். அத்துடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பயண அனுபவத்தை மேம்படுத்தும். பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு, பின்பக்க முனைப்பகுதியில் நீளமான க்ராப் ஹேண்டில்கள் மற்றும் அளவில் சிறிய எல்இடி டெயில்லேம்ப் உள்ளிட்டவை இந்த ஆஃப்-ரோடு பைக்கின் சிறப்பம்சங்களாகும்.

அறிமுகத்திற்கு தயாராக பெனெல்லியின் 250சிசி அட்வென்ச்சர் பைக் - டிஆர்கே251!! கேடிஎம் 250 அட்வென்ச்சருக்கு சவால்

பெனெல்லி டிஆர்கே 251 பைக்கில் 250சிசி, லிக்யுடு கூல்டு, 4-ஸ்ட்ரோக் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9,250 ஆர்பிஎம்-இல் 26 பிஎஸ் மற்றும் 8,000 ஆர்பிஎம்-இல் 21 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. பெனெல்லி டிஆர்கே 251 பைக்கின் இந்திய அறிமுகத்தை 2022 ஜனவரியில் எதிர்பார்க்கிறோம்.

அறிமுகத்திற்கு தயாராக பெனெல்லியின் 250சிசி அட்வென்ச்சர் பைக் - டிஆர்கே251!! கேடிஎம் 250 அட்வென்ச்சருக்கு சவால்

விற்பனையில் இந்த பெனெல்லி அட்வென்ச்சர் பைக்கிற்கு கேடிஎம் 250 அட்வென்ச்சர் முக்கியமான போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் டிஆர்கே 251 பைக்கின் விலையினை போட்டி கேடிஎம் பைக்கை காட்டிலும் அதிகமாக, ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரையில் பெனெல்லி நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli TRK 251 Adventure 250cc Teased.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X