புதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் தனது ஆர் நைன்டி மற்றும் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

 புதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மாடலானது க்ளாஸிக் ரோட்ஸ்டெர் வகை பைக் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லைட், இரட்டை டயல்களுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ள்ஸ்ட்டர், ஸ்போக்ஸ் சக்கரங்கள் ஆகியவை பழமையான டிசைன் அம்சங்களை நினைவூட்டும் அம்சங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

 புதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் மாடலானது ட்வின் கேன் சைலென்சர் கொண்டதாக வந்துள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், நாபி வகை டயர்கள் கொண்ட 5 ஸ்போக் அலாய் சக்கரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் ஒற்றை டயல் அமைப்புடைய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது.

 புதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர்நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் மாடல்களில் ஒரே எஞ்சின்தான் இடம்பெற்றுள்ளது. இதன் 2 சிலிண்டர் அமைப்புடைய 1,170சிசி ஏர்கூல்டு பாக்ஸர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 119 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

 புதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் அறிமுகம்!

இந்த பைக் மாடல்கள் 0 - 100 கிமீ வேகத்தை 3.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்தவையாக இருக்கும். இந்த இரண்டு பைக் மாடல்களிலும் ரெயின் மற்றும் ரோடு என இரண்டு ரைடிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

 புதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் அறிமுகம்!

இந்த பைக்குகளின் முன்புறத்தில் ட்வின் டிஸ்க்குகள் கொண்ட பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் உள்ளன. ஏபிஎஸ் புரோ பிரேக் சிஸ்டம், டைனமிக் பிரேக் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

 புதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் மாடல்கள் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். புதிய ஆர் நைன்டி பைக் மாடலானது ரூ.18.50 லட்சத்திலும், ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் ரூ.16.75 லட்சம் எக்ஸ்ஷோரூ் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

Most Read Articles

English summary
BMW Motorrad has launched R nineT and R nineT Scrambler models in India.
Story first published: Friday, February 26, 2021, 14:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X