மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இன்னும் சூப்பரான டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக்!

நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் படங்கள், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இன்னும் சூப்பரான டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக்!

உலகின் நம்பர்-1 மோட்டார் பந்தயமாக கருதப்படும் மோட்டோ ஜீபி பந்தய பைக்குளுக்கு இணையான தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் வேகத்தை பெற்றிருக்கும் வகையில் டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், உலக அளவில் இந்த பைக்கிற்கு தனி வாடிக்கையாளர் வட்டமும், பெரும் ரசிக பட்டாளமும் உள்ளது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இன்னும் சூப்பரான டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக்!

இந்த நிலையில், கால மாற்றத்திற்கு தக்கவாறு தற்போது மீண்டும் பல்வேறு கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கிறது. 2022 மாடலாக வெளிவர இருக்கும் இந்த சூப்பர் பைக் கையாளுமையிலும், வேகத்திலும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இன்னும் சூப்பரான டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக்!

முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது தோற்றத்தை பொறுத்தவரையில் பெரிய அளவிலான மாறுதல்கள் இல்லை. பைக்கின் விங்லெட் அமைப்பு சிறிதாக மாற்றம் கண்டுள்ளது. அதேநேரத்தில், இந்த விங்லெட் 270 கிமீ வேகத்தில் பைக் செல்லும்போது 30 கிலோ அளவுக்கு டவுன்ஃபோர்ஸ் விசையை வழங்கி நிலையாக செல்ல உதவும். பெல்லிபேன் இரண்டு துளைகளை பெற்றிருப்பதால் குளிர்விப்பு தொழில்நுட்பத்திற்கு அதிக வலுசேர்த்து எஞ்சின் வெப்பத்தை சிறப்பாக கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இன்னும் சூப்பரான டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக்!

புதிய டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக்கில் 1,103சிசி வி4 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய எஞ்சின் அதிகபட்சமாக 212 பிஎச்பி பவரையும், 124 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டாப் கியர் ரேஷியோவில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதால், இதன் டாப் ஸ்பீடு மேலும் அதிகரித்துள்ளதுடன், குறைவான வேகத்தில் வளைவில் செல்லும்போது பைக் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்பை வழங்கும்.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இன்னும் சூப்பரான டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக்!

இந்த பைக்கின் எடை 195.5 கிலோவாக குறைந்துள்ளது. பெட்ரோல் டேங்க் மற்றும் சேஸீயிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதால், வளைவுகளிலும், பிரேக் பிடிக்கும்போது கையாளுமை சிறப்பாக இருக்கும். பனிகாலே வி4 மாடலில் 43 மிமீ முழுவதும் அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் ஷோவா பிக் பிஸ்டன் ஃபோர்க்குகளும், பனிகாலே வி4 எஸ் மாடலில் 125 மிமீ டிராவல் கொண்ட ஓலின்ஸ் என்பிஎக்ஸ் 25/30 செமி ஆக்டிவ் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும் உள்ளன. பின்புற சஸ்பென்ஷன்களில் மாற்றம் இல்லை.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இன்னும் சூப்பரான டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக்!

புதிய டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக்கில் 5 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. எளிதாக படிக்கும் வகையில் லே அவுட் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில், பைக் வேகம், பாதுகாப்பு அம்சங்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும். புதிய டுகாட்டி பனிகாலே வி4 பைக்கில் 6 ஆக்சிஸ் இனர்ஷியல் மெசர்மென்ட் யூனிட் உள்ளது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இன்னும் சூப்பரான டுகாட்டி பனிகாலே வி4 சூப்பர் பைக்!

வரும் டிசம்பர் மாதம் முதல் புதிய டுகாட்டி பனிகாலே வி4 மற்றும் பனிகாலே வி4 எஸ் ஆகிய இரண்டு மாடல்களும் உலக அளவில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவிலும் இந்த புதிய மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati has unveiled new Panigale V4 with more updates globally.
Story first published: Friday, November 26, 2021, 15:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X