பிஎஸ்-6 எஞ்சினுடன் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசையில் 2 புதிய மாடல்கள் அறிமுகம்

பிஎஸ்-6 எஞ்சினுடன் ஸ்க்ராம்ப்ளர் வரிசையில் இரண்டு புதிய பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது டுகாட்டி நிறுவனம். இந்த பைக்குகள் குறித்த பல முக்கிய விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிஎஸ்-6 எஞ்சினுடன் டுகாட்டியின் புதிய ஸ்க்ராம்ப்ளர் ரக பைக் மாடல்கள் அறிமுகம்!

டுகாட்டி நிறுவனத்தின் ஸ்க்ராம்ப்ளர் வரிசை பைக் மாடல்கள் விலை மற்று் சிறப்பம்சங்களில் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில், பிஎஸ்-6 எஞ்சினுடன் ஸ்க்ராம்ப்ளர் வரிசையில் இரண்டு புதிய மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது டுகாட்டி நிறுவனம்.

பிஎஸ்-6 எஞ்சினுடன் டுகாட்டியின் புதிய ஸ்க்ராம்ப்ளர் ரக பைக் மாடல்கள் அறிமுகம்!

நைட்ஷிஃப்ட் மற்றும் டெசர்ட் ஸ்லெட் என்ற பெயர்களில் இந்த இரண்டு புதிய ஸ்க்ராம்ப்ளர் வரிசை மாடல்கள் வந்துள்ளன. இதில், நைட்ஷிஃப்ட் மாடலானது கஃபே ரேஸர் வகைக்குரிய அம்சங்களுடன், டெசர்ட் ஸ்லெட் மாடலானது ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற பல அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் டுகாட்டியின் புதிய ஸ்க்ராம்ப்ளர் ரக பைக் மாடல்கள் அறிமுகம்!

டுகாட்டி நைட்ஷிஃப்ட் மாடலானது தட்டையான இருக்கை, அகலமான ஹேண்டில்பார் பெற்றுள்ளது. ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. ஏவியேட்டர் க்ரே என்ற வண்ணத் தேர்வில்கிடைக்கும். இந்த மாடலில் பைரெல்லி எம்டி60 டயர்கள் மற்றும் ஸ்போக்ஸ் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பக்கவாட்டில் நம்பர் பிளேட் மற்றும் எல்இடி பல்புகள் கொடுக்கப்பட்டு குறிப்பிடத்தக்க விஷயம்.

பிஎஸ்-6 எஞ்சினுடன் டுகாட்டியின் புதிய ஸ்க்ராம்ப்ளர் ரக பைக் மாடல்கள் அறிமுகம்!

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் மாடலானது கருப்பு வண்ண ஃப்ரேம் கொண்டதாகவும், சிவப்பு மற்றும் வெள்ளை வண்ண அலங்காரத்துடன் கூடிய ஸ்பார்க்கிங் புளூ என்ற நீல வண்ணத் தேர்வில் வந்துள்ளது. தங்க வண்ணத்திலான ரிம்கள் கொடுக்கப்பட்டு இருப்பதும் இதன் மிக முக்கிய விஷயம்.

பிஎஸ்-6 எஞ்சினுடன் டுகாட்டியின் புதிய ஸ்க்ராம்ப்ளர் ரக பைக் மாடல்கள் அறிமுகம்!

ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ப முன்புறத்தில் உயர்த்தப்பட்ட அமைப்பில் மட்கார்டு, பின்புறத்தில் நீளமான ஃபென்டர் அமைப்பு, வேரியபிள் க்ராஸ் செக்ஷன் ஹேண்டில்பார் ஆகியவை உள்ளன. அட்ஜெஸ்ட் வசதியுடன் 200 மிமீ டிராவல் கொண்ட கயபா ஃபோர்க்குகளுடன் முன்புற சஸ்பென்ஷன் இடம்பெற்றுள்ளது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் டுகாட்டியின் புதிய ஸ்க்ராம்ப்ளர் ரக பைக் மாடல்கள் அறிமுகம்!

இந்த பைக்கில் முன்புறத்தில் பைரெல்லி ஸ்கார்ப்பியான் ராலி எஸ்டிஆர் 120/70 R19 டயரும், பின்புறத்தில் பைரெல்லி ராலி எஸ்டிஆர் 120/60 R19 டயரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

பிஎஸ்-6 எஞ்சினுடன் டுகாட்டியின் புதிய ஸ்க்ராம்ப்ளர் ரக பைக் மாடல்கள் அறிமுகம்!

இரண்டு பைக்குகளிலும் ஒரே எஞ்சின்தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் மாடல்களில் எல் ட்வின் சிலிண்டர் கொண்ட 803 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 72 பிஎச்பி பவரையும், 66.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் டுகாட்டியின் புதிய ஸ்க்ராம்ப்ளர் ரக பைக் மாடல்கள் அறிமுகம்!

புதிய டுகாட்டி நைட்ஷிஃப்ட் பைக் மாடலானது ரூ.9.80 லட்சத்திலும், டெசர்ட் ஸ்லெட் மாடலானது ரூ.10.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் டுகாட்டியின் புதிய ஸ்க்ராம்ப்ளர் ரக பைக் மாடல்கள் அறிமுகம்!

சென்னை, கொல்கத்தா, கொச்சி, பெங்களூர், ஹைதராபாத், ஆமதாபாத், டெல்லி- என்சிஆர் பிராந்தியம், மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள டுகாட்டி டீலர்களில் புக்கிங் துவங்கப்பட்டுள்ளது. புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக டெலிவிரி கொடுக்கும் பணிகளும் நடைபெற உள்ளது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Italian premium bike maker, Ducati has launched the new Scrambler Nightshift and Desert Sled Bikes in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X