இந்தியாவில் இப்படிப்பட்ட டுகாட்டி பைக் விற்பனைக்கு வருகிறதா?! இத்தாலியில் தயாராகிறது!

இந்திய சந்தைக்கான 2021 டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 எஸ் பைக்கின் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. இந்த புதிய டுகாட்டி பைக்கை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் இப்படிப்பட்ட டுகாட்டி பைக் விற்பனைக்கு வருகிறதா?! இத்தாலியில் தயாராகிறது!

டுகாட்டியின் புதிய சூப்பர்ஸ்போர்ட் 950 எஸ் பைக்கின் தோற்றம் கடந்த 2020 நவம்பர் மாதத்தில் உலகளவில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து இத்தாலி நாட்டில் போலோக்னா நகரத்தில் உள்ள டுகாட்டியின் தொழிற்சாலையில் இந்த சூப்பர்ஸ்போர்ட் பைக்கின் தயாரிப்பு பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இப்படிப்பட்ட டுகாட்டி பைக் விற்பனைக்கு வருகிறதா?! இத்தாலியில் தயாராகிறது!

2021ஆம் ஆண்டிற்காக சூப்பர்ஸ்போர்ட் 950 பைக்கில் மிக முக்கியமான அப்கிரேட்களை டுகாட்டி நிறுவனம் கொண்டுவந்துள்ளது. டுகாட்டியின் பிரபலமான பனிகளே பைக்குகளை போன்றதான தோற்றத்தை கொண்ட சூப்பர்ஸ்போர்ட் 950 பைக்கில் பாதி பாகங்களை பேனல்களே மறைத்திருக்கும்.

இந்தியாவில் இப்படிப்பட்ட டுகாட்டி பைக் விற்பனைக்கு வருகிறதா?! இத்தாலியில் தயாராகிறது!

விளக்குகள் அனைத்தும் முழு எல்இடி தரத்தில் வழங்கப்படவுள்ளன. புத்துணர்ச்சியான தோற்றம் மட்டுமின்றி புதிய எலக்ட்ரானிக்ஸ் தொகுப்பையும் 2021 சூப்பர்ஸ்போர்ட் 950 பைக்கிற்கு தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்தியாவில் இப்படிப்பட்ட டுகாட்டி பைக் விற்பனைக்கு வருகிறதா?! இத்தாலியில் தயாராகிறது!

இந்த வகையில் இந்த பைக்கில் வழங்கப்படவுள்ள 6-அச்சு ஐஎம்யு தொழிற்நுட்பமானது பைக்கின் அகலம், பிட்ச் மற்றும் விலகலை கண்காணித்து புதிய கார்னரிங் ஏபிஎஸ், வீலிங் மற்றும் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை கண்ட்ரோல் செய்யும்.

இந்தியாவில் இப்படிப்பட்ட டுகாட்டி பைக் விற்பனைக்கு வருகிறதா?! இத்தாலியில் தயாராகிறது!

இவற்றுடன் புதிய சூப்பர்ஸ்போர்ட் 950 எஸ் பைக் மூன்று ரைடிங் மோட்கள் மற்றும் 4.3 இன்ச் டிஎஃப்டி திரை உள்ளிட்டவற்றையும் பெற்றுவரவுள்ளது. மற்றப்படி இந்த பைக் மாடலின் 937சிசி, டெஸ்டாஸ்ட்ரெட்டா என்ஜின் அமைப்பிலோ அல்லது இந்த என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளிலோ எந்த மாற்றமும் இருக்காது.

இந்தியாவில் இப்படிப்பட்ட டுகாட்டி பைக் விற்பனைக்கு வருகிறதா?! இத்தாலியில் தயாராகிறது!

என்ஜின், யூரோ 5/ பிஎஸ்6 தரத்திற்கு கொண்டுவரப்படும். சூப்பர்ஸ்போர்ட் 950 பைக்கின் டாப் வேரியண்ட்டான எஸ் வெர்சனில் ஓஹ்லின்ஸ் சஸ்பென்ஷன் அமைப்புடன் பைக் முழுவதும் கவர்ச்சிகரமான சிவப்பு & வெள்ளை நிறத்தில் வழங்கப்படவுள்ளது.

இந்தியாவில் இப்படிப்பட்ட டுகாட்டி பைக் விற்பனைக்கு வருகிறதா?! இத்தாலியில் தயாராகிறது!

இந்திய சந்தையில் வரும் மாதங்களில் வரிசையாக புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த டுகாட்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் சூப்பர்ஸ்போர்ட் 950 பைக்கும் உள்ளது. இதன் 2021 வெர்சனின் அறிமுகம் இந்த ஆண்டின் இறுதியில் நம் நாட்டில் இருக்கலாம்.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
New Ducati Supersport 950 to be launch in India this year.
Story first published: Tuesday, January 26, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X