2021 கேடிஎம் ஆர்சி390 & ஆர்சி200 பைக்குகளுக்கு புக்கிங் துவக்கம்? ஜூலையில் அறிமுகம்!!

அடுத்த தலைமுறை கேடிஎம் ஆர்சி200 மற்றும் ஆர்சி390 பைக்குகளுக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 கேடிஎம் ஆர்சி390 & ஆர்சி200 பைக்குகளுக்கு புக்கிங் துவக்கம்? ஜூலையில் அறிமுகம்!!

தற்போதைய கொரோனா சூழலுக்கு மத்தியிலும் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் இந்திய சந்தையில் அதன் புதிய தலைமுறை ஆர்சி200 மற்றும் ஆர்சி390 பைக்குகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

2021 கேடிஎம் ஆர்சி390 & ஆர்சி200 பைக்குகளுக்கு புக்கிங் துவக்கம்? ஜூலையில் அறிமுகம்!!

முழுவதும் பேனல்களால் நிரப்பப்பட்ட ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிள்களான இவை இரண்டும் ஏற்கனவே பல முறை இந்திய சாலைகளில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் இந்திய அறிமுகம் வருகிற ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 கேடிஎம் ஆர்சி390 & ஆர்சி200 பைக்குகளுக்கு புக்கிங் துவக்கம்? ஜூலையில் அறிமுகம்!!

இந்த நிலையில் தான் தற்போது இந்த கேடிஎம் பைக்குகளுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் சில டீலர்ஷிப் மையங்களில் ரூ.2,000ல் இருந்து ரூ.5,000 வரையிலான டோக்கன் தொகை உடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2021 கேடிஎம் ஆர்சி390 & ஆர்சி200 பைக்குகளுக்கு புக்கிங் துவக்கம்? ஜூலையில் அறிமுகம்!!

எனவே இந்த 2021 கேடிஎம் பைக்குகளை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், அருகில் உள்ள கேடிஎம் டீலரை தொடர்பு கொள்ளவும். புதிய தலைமுறை ஆர்சி390 பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் என்று பார்த்தல், விற்பனையில் இருக்கும் கேடிஎம் 390 ட்யூக்கில் வழங்கப்படும் புதிய டிஎஃப்டி திரை இந்த ஸ்போர்ட்ஸ் பைக்கில் கொடுக்கப்பட உள்ளது.

2021 கேடிஎம் ஆர்சி390 & ஆர்சி200 பைக்குகளுக்கு புக்கிங் துவக்கம்? ஜூலையில் அறிமுகம்!!

அதேபோல் விரைவு ஷிஃப்டரையும் இந்த 2021 பைக் முக்கிய அப்டேட்டாக ஏற்கவுள்ளது. ஆனால் புதிய ஆர்சி200 வழக்கம்போல் முழு-டிஜிட்டல் எல்சிடி திரையையே தொடரவுள்ளது. ஆனால் இந்த 200சிசி கேடிஎம் பைக்கில் வழங்கப்படும் கிராஃபிக்ஸ் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

2021 கேடிஎம் ஆர்சி390 & ஆர்சி200 பைக்குகளுக்கு புக்கிங் துவக்கம்? ஜூலையில் அறிமுகம்!!

இந்த கேடிஎம் ஸ்போர்ட்ஸ் பைக்குகள் இரண்டும் புதிய ஒற்றை பேட் ஹெட்லேம்ப் மற்றும் புத்துணர்ச்சியான தோற்றத்திற்காக புதிய பாடி பேனல்களை பெற்றுள்ளன. புதிய தலைமுறை ஆர்சி390 பைக்கிற்கு வழங்கப்படவுள்ள பெயிண்ட் தேர்வுகள் சமீபத்தில் இணையத்தில் கசிந்திருந்தன.

2021 கேடிஎம் ஆர்சி390 & ஆர்சி200 பைக்குகளுக்கு புக்கிங் துவக்கம்? ஜூலையில் அறிமுகம்!!

இவ்வாறு தோற்றத்தில் மட்டுமே ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக்குகள் அப்டேட்களை பெற்றுவரவுள்ளன. மற்றப்படி இயந்திர பாகங்கள் அப்படியே தான் தொடரப்பட உள்ளன. ஆர்சி390 பைக்கில் 373.3சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.

2021 கேடிஎம் ஆர்சி390 & ஆர்சி200 பைக்குகளுக்கு புக்கிங் துவக்கம்? ஜூலையில் அறிமுகம்!!

ஆர்சி200 பைக்கில் 199.5சிசி, ஏர்-கூல்டு என்ஜின், 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் இணைக்கப்படுகிறது. இவற்றின் என்ஜின்கள் ஏற்கனவே யுரோ 5/ பிஎஸ்6 தரத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டுவிட்டதால், என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளில் எந்த மாற்றமும் இருக்காது.

2021 கேடிஎம் ஆர்சி390 & ஆர்சி200 பைக்குகளுக்கு புக்கிங் துவக்கம்? ஜூலையில் அறிமுகம்!!

வெளிநாட்டு சந்தைகள் மட்டுமின்றி இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் கேடிஎம் ஆர்சி390 பைக்கின் விலை புதிய தலைமுறை அப்கிரேடினால் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் ஆர்சி200 பைக்கின் தற்போதைய ரூ.2.10 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் மிகவும் குறைவான அளவில் தான் அதிகரிப்பு கொண்டுவரப்படும்.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
New-gen KTM RC200 & RC390 unofficial bookings started ahead of launch.
Story first published: Friday, May 28, 2021, 8:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X