எதிர்பார்ப்பதற்கு முன்னதாகவே இந்தியா வருகிறது புதிய சுஸுகி ஹயபுசா? - புக்கிங் ரகசியமாக நடப்பதாக தகவல்!

எதிர்பார்ப்புக்கு முன்னதாகவே இந்தியாவில் புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும், ரகசியமாக சில டீலர்களில் முன்பதிவு ஏற்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

எதிர்பார்ப்பதற்கு முன்னதாகவே இந்தியா வருகிறது புதிய சுஸுகி ஹயபுசா? - புக்கிங் ரகசியமாக நடப்பதாக தகவல்!

இந்திய சூப்பர் பைக் மார்க்கெட்டில் சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கிற்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. மேலும், சூப்பர் பைக் மார்க்கெட்டில் குறைவான விலை தேர்வாகவும் இருந்ததால், நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்த நிலையில், விற்பனையில் இருந்து விலக்கப்பட்ட சுஸுகி ஹயபுசா மீண்டும் புதிய தலைமுறை மாடலாக வர இருக்கிறது.

எதிர்பார்ப்பதற்கு முன்னதாகவே இந்தியா வருகிறது புதிய சுஸுகி ஹயபுசா? - புக்கிங் ரகசியமாக நடப்பதாக தகவல்!

சில தினங்களுக்கு முன் உலக அளவில் மூன்றாம் தலைமுறை சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. ஐரோப்பிய மார்க்கெட்டில் முதலாவதாக விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய சூப்பர் பைக் இந்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பதற்கு முன்னதாகவே இந்தியா வருகிறது புதிய சுஸுகி ஹயபுசா? - புக்கிங் ரகசியமாக நடப்பதாக தகவல்!

இந்த நிலையில், புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் எதிர்பார்ப்பதற்கு முன்னதாகவே இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருப்பதாக ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

எதிர்பார்ப்பதற்கு முன்னதாகவே இந்தியா வருகிறது புதிய சுஸுகி ஹயபுசா? - புக்கிங் ரகசியமாக நடப்பதாக தகவல்!

மேலும், இந்தியாவில் உள்ள சில சுஸுகி மோட்டார்சைக்கிள் டீலர்களில், ரூ.2 லட்சம் முன்தொகையுடன் புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கிற்கு ரகசியமாக முன்பதிவு ஏற்கப்படுவதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்போது, இப்போது முன்பதிவு செய்பவர்கள் வரும் ஏப்ரல் மாதத்திலேயே டெலிவிரி வாய்ப்பை பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

எதிர்பார்ப்பதற்கு முன்னதாகவே இந்தியா வருகிறது புதிய சுஸுகி ஹயபுசா? - புக்கிங் ரகசியமாக நடப்பதாக தகவல்!

புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கில் எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய டிசைன் தாத்பரியத்தின் அடிப்படையில் சில மாற்றங்களுடன் புதிய ஹயபுசா வந்துள்ளது.

எதிர்பார்ப்பதற்கு முன்னதாகவே இந்தியா வருகிறது புதிய சுஸுகி ஹயபுசா? - புக்கிங் ரகசியமாக நடப்பதாக தகவல்!

புதிய ஹயபுசா சூப்பர் பைக்கில் அதிக திறன் வாய்ந்த எஞ்சின் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அதே 4 சிலிண்டர்கள் அமைப்புடைய 1,340சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 எச்பி பவரையும், 150 என்எம் டார்க் திரனையும் வழங்கும். பழைய மாடலைவிட பவர் 7 எச்பி வரையிலும், டார்க் திறன் 5 என்எம் வரையிலும் குறைந்துவிட்டது.

எதிர்பார்ப்பதற்கு முன்னதாகவே இந்தியா வருகிறது புதிய சுஸுகி ஹயபுசா? - புக்கிங் ரகசியமாக நடப்பதாக தகவல்!

புதிய சுஸுகி ஹயபுசா பைக்கில் ஏற்கனவே இருந்த அதே இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்புதான் புதிய மாடலிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால், இரண்டு டயல்களுக்கும் நடுவில், பல்வேறு தகவல்களை பெறுவதற்கான டிஎஃப்டி திரை சேர்க்கப்பட்டு இருப்பது முக்கிய மாற்றமாக குறிப்பிடலாம்.

எதிர்பார்ப்பதற்கு முன்னதாகவே இந்தியா வருகிறது புதிய சுஸுகி ஹயபுசா? - புக்கிங் ரகசியமாக நடப்பதாக தகவல்!

புதிய சுஸுகி ஹயபுசா பைக்கில் 10 லெவல் வீலி கன்ட்ரோல் சிஸ்டம், 3 ஸ்டேஜ் எஞ்சின் பிரேக் கன்ட்ரோல், 10 ஸ்டேஜ் டிராக்ஷன் கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன.

எதிர்பார்ப்பதற்கு முன்னதாகவே இந்தியா வருகிறது புதிய சுஸுகி ஹயபுசா? - புக்கிங் ரகசியமாக நடப்பதாக தகவல்!

முந்தைய தலைமுறை சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் ரூ.13.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிய மாடல் ரூ.18 லட்சம் முதல் ரூ.20 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
According to report, The unofficial bookings for new Suzuki Hayabusa have commenced and it is expected to launch next couple of months in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X