மீண்டும் புத்துயிர் பெற்ற ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ்!! புதிய என்ஜின் உடன் வெளியீடு!

ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக் அதிகாரப்பூர்வமாக படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஹார்லி-டேவிட்சன் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் புத்துயிர் பெற்ற ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ்!! புதிய என்ஜின் உடன் வெளியீடு!

அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான மோட்டார்சைக்கிள் பிராண்டான ஹார்லி-டேவிட்சன் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதன் புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் தொடர்பான டீசர்களையும், அதனை விளம்பரப்படுத்தும் பணிகளிலும் ஈடுப்பட்டு வந்தது.

மீண்டும் புத்துயிர் பெற்ற ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ்!! புதிய என்ஜின் உடன் வெளியீடு!

இந்த நிலையில் தற்போது ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் உலகளவில் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ்டர் பைக்குகள் கிட்டத்தட்ட 10 வருடங்களாக அமெரிக்கா உள்பட சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ளன.

மீண்டும் புத்துயிர் பெற்ற ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ்!! புதிய என்ஜின் உடன் வெளியீடு!

ஆனால் அவற்றில் எல்லாம் ஏர்-கூல்டு பரிணாம என்ஜின்களே வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மாடல் புதிய கட்டமைப்பினால், கூடுதல் செயல்திறன்மிக்க முற்றிலும் புதிய என்ஜினையும், அதிநவீன எலக்ட்ரானிக் தொகுப்புகளையும் பெற்றுவந்துள்ளது.

மீண்டும் புத்துயிர் பெற்ற ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ்!! புதிய என்ஜின் உடன் வெளியீடு!

தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் மாசு உமிழ்வு தரநிலைகளினால் ஸ்போர்ட்ஸ்டர் மோட்டார்சைக்கிளின் விற்பனையை ஐரோப்பாவில் இந்த 2021ஆம் ஆண்டில் தான் இந்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனம் நிறுத்தி இருந்தது.

மீண்டும் புத்துயிர் பெற்ற ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ்!! புதிய என்ஜின் உடன் வெளியீடு!

ஹார்லி-டேவிட்சனின் இந்த பின்வாங்கலால் ஸ்போர்ட்ஸ்டருக்கு விற்பனையில் போட்டியாக இருந்த இந்தியன் ஸ்காட் மற்றும் ட்ரையம்ப் பாப்பர் பைக்குகள் பிரிவில் ஆதிக்கத்தை செலுத்த துவங்கின. ஆனால் தற்போது மீண்டும் புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கின் மூலமாக ஹார்லி-டேவிட்சன் தனது பழைய இடத்திற்கு திரும்பியுள்ளது.

மீண்டும் புத்துயிர் பெற்ற ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ்!! புதிய என்ஜின் உடன் வெளியீடு!

புதிய ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கில் ரிவால்யூஷன் மேக்ஸ் 1250டி என்ற பெயர் கொண்ட 1,252சிசி, நீர்-குளிர்விப்பான் & 60-கோண வி-இரட்டை என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக்கிலும் இதே என்ஜின் தான் வழங்கப்பட்டது.

மீண்டும் புத்துயிர் பெற்ற ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ்!! புதிய என்ஜின் உடன் வெளியீடு!

ஆனால் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கில் என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவு 120 பிஎச்பி-ஆக குறைந்துள்ளது. ஏனெனில் பான் அமெரிக்காவில் இந்த என்ஜின் 150 பிஎச்பி வரையில் வழங்கும் வகையில் பொருத்தப்படுகிறது. டார்க் திறன் 125 என்எம் வரையில் வழங்குகிறது.

மீண்டும் புத்துயிர் பெற்ற ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ்!! புதிய என்ஜின் உடன் வெளியீடு!

ஆனால் முந்தைய ஸ்போர்ட்ஸ்டர் பைக்குடன் ஒப்பிடுகையில் 120 பிஎச்பி என்பதே அதிகமாகும். பைக்கின் கெர்ப் எடை குறைக்கப்பட்டதினாலும், ஹேண்ட்லிங் மேம்படுத்தப்பட்டுள்ளதினாலும், இவை எல்லாவற்றையும் விட புதிய ரிவால்யூஷன் (புரட்சிக்கர) என்ஜின் வழங்கப்பட்டுள்ளதினாலும், புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கின் இயக்க ஆற்றல் அதிகரித்துள்ளது.

மீண்டும் புத்துயிர் பெற்ற ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ்!! புதிய என்ஜின் உடன் வெளியீடு!

சாலை, ஸ்போர்ட் மற்றும் மழை என்ற மூன்று ரைடிங் மோட்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிளின் விலை 13,999 யூரோவாக (ரூ.14.44 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற வெளிநாட்டு சந்தைகளை தொடர்ந்து இந்தியாவிலும் புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
New Harley-Davidson Sportster S cruiser revealed.
Story first published: Wednesday, July 14, 2021, 23:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X