ஹார்லி டேவிட்சன் புதிய 2021 ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் - விரைவில் இந்தியாவில் அறிமுகம்!!

2021 ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிளின் இந்திய அறிமுகம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹார்லி டேவிட்சன் புதிய 2021 ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் - விரைவில் இந்தியாவில் அறிமுகம்!!

ஹார்லி-டேவிட்சன் பிராண்டின் பழமையான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்று ஸ்போர்ட்ஸ்டர் ஆகும். முதன்முதலில் 1957இல் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ்டரின் சமீபத்திய ஸ்போர்ட் கஸ்டம் மோட்டார்சைக்கிள் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் என்கிற பெயரில் முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச சந்தைகளில் வெளியீடு செய்யப்பட்டது.

ஹார்லி டேவிட்சன் புதிய 2021 ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் - விரைவில் இந்தியாவில் அறிமுகம்!!

இந்த மோட்டார்சைக்கிள் தான் தற்போது இந்தியாவில் அறிமுகமாக தயாராகி வருகிறது. புதிய ஸ்போர்ட்ஸ் எஸ் பைக் இந்தியாவில் அடுத்த டிசம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் மஹாராஷ்டிராவில் லோனாவாலா என்கிற பகுதியில் நடைபெறவுள்ள 2021 இந்திய பைக் வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஹார்லி-டேவிட்சன் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் புதிய 2021 ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் - விரைவில் இந்தியாவில் அறிமுகம்!!

ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிளின் இறுதி தயாரிப்பு மாடல் கஸ்டம் கான்செப்ட்டாக கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு முன்பு உலக மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. ஏறக்குறைய இந்த கான்செப்ட்டை ஒத்த தோற்றத்தில் தான் இந்த ஆண்டு துவக்கத்தில் உலகளவில் வெளியீடு செய்யபட்ட ஸ்போர்ட்ஸ்டர் எஸ் உள்ளது. இரட்டை-குழாய் எக்ஸாஸ்ட், பருத்த டயர்கள் மற்றும் ஒற்றை-துண்டாக சிறிய அளவில் இருக்கை உள்ளிட்டவை ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கின் சிறப்பம்சங்களாகும்.

ஹார்லி டேவிட்சன் புதிய 2021 ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் - விரைவில் இந்தியாவில் அறிமுகம்!!

இதில் குறிப்பாக ஒருவர் மட்டுமே அமரக்கூடியதான இருக்கை அமைப்பு கிளாசிக் பாப்பர் தோற்றத்தை ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மாடலுக்கு வழங்குகிறது. என்ஜினிற்கு அடியில் பாதுகாப்பு தட்டு மிகவும் நேர்த்தியாக பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் மிகவும் விசித்திரமாக அளவில் சிறியதாக, மாத்திரை வடிவில் ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் புதிய 2021 ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் - விரைவில் இந்தியாவில் அறிமுகம்!!

தட்டையான பின்பக்க முனைப்பகுதி மற்றும் இரட்டை-குழாய் எக்ஸாஸ்ட் அமைப்பின் தங்க-நிற மஃப்லர் உள்ளிட்டவை ஹார்லி டேவிட்சனின் ஃப்ளாட் டிராக்கர் பைக் ஒன்றால் கவரப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் மாங்கனீசு என்ஜின் கவர்கள் சாக்லெட் சாடின் நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. ஸ்டோன் வாஷ்டு வெள்ளை பேர்ல், மிட்நைட் க்ரிம்சன் மற்றும் விவிட் கருப்பு என்கிற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் இந்த க்ரூஸர் பைக் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஹார்லி டேவிட்சன் புதிய 2021 ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் - விரைவில் இந்தியாவில் அறிமுகம்!!

ஒட்டுமொத்தமாக தனிநபர் ஒருவர் கஸ்டமைஸ்ட் செய்த மோட்டார்சைக்கிள் போன்றதான தோற்றத்தை இது வழங்கும் என ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் புதிய ஸ்போர்ட்ஸ் எஸ் பைக்கில் சேசிஸையும் ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. இதன் விளைவாக தற்போது பைக்கின் என்ஜின் அமைப்பு தரையை நோக்கிய அழுத்தலுக்கு பங்களிக்கும் பாகங்களுள் ஒன்றாக மாறியுள்ளது.

ஹார்லி டேவிட்சன் புதிய 2021 ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் - விரைவில் இந்தியாவில் அறிமுகம்!!

மேலும் இந்த சேசிஸ் அப்டேட் நடவடிக்கையால், எடை குறைவான பாகங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் பைக்கின் எடையும் குறைந்துள்ளது. இதனால் உகந்த எடை-ஆற்றல் விகிதம் தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் கடினமான சேசிஸ் மோட்டார்சைக்கிளின் ஹேண்ட்லிங்கையும் மேம்படுத்தியுள்ளதாக ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் புதிய 2021 ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் - விரைவில் இந்தியாவில் அறிமுகம்!!

சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 43மிமீ தலைக்கீழான ஷோவா ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ஷோவா பிக்கிபேக் மோனோ-ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதில் முன்பக்க சஸ்பென்ஷன் யூனிட்டை முழுவதுமாக அட்ஜெஸ்ட் செய்யலாம். பின்பக்க சஸ்பென்ஷன் யூனிட் ஹைட்ராலிக் ப்ரீலோடு அட்ஜெஸ்ட்மெண்ட்டை கொண்டுள்ளது. புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கில் முன்பக்கத்தில் 17 இன்ச்சிலும், பின்பக்கத்தில் 16 இன்ச்சிலும் காஸ்ட்-அலுமினியம் சக்கரங்கள் 5-ஸ்போக் டிசைனில் பொருத்தப்படுகின்றன.

ஹார்லி டேவிட்சன் புதிய 2021 ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் - விரைவில் இந்தியாவில் அறிமுகம்!!

பிரேக்கிங் பணியை கவனிக்க முன் சக்கரத்தில் மோனோப்ளாக் ப்ரெம்போ காலிபர் உடன் 320மிமீ டிஸ்க்கும், பின்பக்கத்தில் இரட்டை-பிஸ்டன் ப்ரெம்போ காலிபர் உடன் 260மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளன. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 2021 ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மாடலில் 1250சிசி ரெவால்யூஷன் மேக்ஸ் 1250டி என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஹார்லி டேவிட்சன் புதிய 2021 ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் - விரைவில் இந்தியாவில் அறிமுகம்!!

ஹார்லி-டேவிட்சனின் முதல் அட்வென்ச்சர் பைக்கான பான் அமெரிக்கா 1250-விலும் வழங்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 121 பிஎச்பி மற்றும் 125 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆனால் இந்த என்ஜின் பான் அமெரிக்கா மாடலில் 30 எச்பி கூடுதலாக வழங்குகிறது. இந்த என்ஜின் அமைப்பில் வெவ்வேறான வால்வு நேரம் மற்றும் இரட்டை ஓவர்ஹெட் காம்ஷாஃப்ட்ஸ் போன்ற மாடர்ன் தொழிற்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஹார்லி டேவிட்சன் புதிய 2021 ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் - விரைவில் இந்தியாவில் அறிமுகம்!!

அமெரிக்க சந்தையில் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் 14,999 அமெரிக்கன் டாலர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.11.18 லட்சமாகும். ஆனால் இந்தியாவில் இந்த புதிய ஹார்லி-டேவிட்சன் பைக்கின் விலை ரூ.15- 20 லட்சத்தில் நிர்ணயிக்கப்படவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Most Read Articles

English summary
Harley Davidson 2021 Sportster S India Launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X