ஹோண்டாவின் 2022 ரெபெல் 250 க்ரூஸர் பைக்!! ஜப்பானில் வெளியீடு!

2022 ஹோண்டா ரெபெல் 250 க்ரூஸர் மோட்டார்சைக்கிள் பற்றிய விபரங்கள், படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய ஹோண்டா பைக் பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டவின் 2022 ரெபெல் 250 க்ரூஸர் பைக்!! ஜப்பானில் வெளியீடு!

உலகளவில் முன்னணி இருசக்கர வாகன பிராண்ட்டாக விளங்கும் ஹோண்டா, வருடத்தோறும் வழங்கும் அப்டேட்டாக 2022 ரெபெல் 250 க்ரூஸர் மோட்டார்சைக்கிளை ஜப்பானில் வெளியீடு செய்துள்ளது. ஜப்பான் நாட்டு சந்தையில் ரெபெல் வரிசையில் ஏகப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் அடங்குகின்றன.

ஹோண்டவின் 2022 ரெபெல் 250 க்ரூஸர் பைக்!! ஜப்பானில் வெளியீடு!

இதில் ரெபெல் 500 மற்றும் ரெபெல் 1100 ஆகியவற்றிற்கு கீழ் ஆரம்ப நிலை ஹோண்டா ரெபெல் மோட்டார்சைக்கிளாக ரெபெல் 250 விளங்குகிறது. 2022ஆம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட ரெபெல் 250 பைக் பேர்ல் ஸ்பென்சர் நீலம் என்ற புதிய நிறத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹோண்டவின் 2022 ரெபெல் 250 க்ரூஸர் பைக்!! ஜப்பானில் வெளியீடு!

இந்த புதிய பெயிண்ட்டின்படி, மெட்டாலிக் நீலம் மற்றும் கருப்பு நிறங்கள் புதிய ரெபெல் 250 பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் நீல நிறமானது, பெட்ரோல் டேங்க், பின்பக்க ஃபெண்டர் உள்ளிட்ட பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர்த்த பைக்கின் மற்ற பகுதிகள் அனைத்தும் முற்றிலும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

ஹோண்டவின் 2022 ரெபெல் 250 க்ரூஸர் பைக்!! ஜப்பானில் வெளியீடு!

இந்த புதிய பேர்ல் ஸ்பென்சர் நீல நிறத்தேர்வு ரெபெல் 250 பைக்கின் டாப் எஸ் எடிசனில் மட்டுமே கிடைக்கும். இந்த பிரத்யேக வெர்சனில் டைமண்ட்-தையலிடப்பட்ட இருக்கை, ஃபோர்க் கெய்டர்கள் மற்றும் ஹெட்லேம்ப் கௌல் போன்றவையும் பொருத்தப்பட்டுள்ளன. இவை எல்லாம் நிலையான அம்சங்களாகவே கொடுக்கப்பட்டுள்ளன.

ஹோண்டவின் 2022 ரெபெல் 250 க்ரூஸர் பைக்!! ஜப்பானில் வெளியீடு!

இவை தவிர்த்து ஹோண்டா ரெபெல் 250 பைக்கின் மற்றவை அனைத்தும் எந்தவொரு மாற்றமும் இன்றி தொடர்கின்றன. ரெபெல் 250 க்ரூஸர் பைக்கில் 249சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 26 பிஎச்பி மற்றும் 22 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

ஹோண்டவின் 2022 ரெபெல் 250 க்ரூஸர் பைக்!! ஜப்பானில் வெளியீடு!

முழு-எல்இடி விளக்குகளை பெறும் இந்த ஹோண்டா பைக்கில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. தற்போதைக்கு ஜப்பான் நாட்டு சந்தையில் மட்டுமே புதிய ரெபெல் 250 பைக் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மற்ற நாட்டு சந்தைகளுக்கும் கொண்டு செல்லப்படலாம்.

ஹோண்டவின் 2022 ரெபெல் 250 க்ரூஸர் பைக்!! ஜப்பானில் வெளியீடு!

ஆனால் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே. ஏனெனில் தற்போதைக்கு இந்தியாவில் எந்தவொரு ஹோண்டா ரெபெல் மோட்டார்சைக்கிளும் விற்பனையில் இல்லை. ஆனால் இந்த நிலை நீண்ட காலத்திற்கு நீடிக்க போவதில்லை. ஏனெனில் 2022ஆம் ஆண்டில் நேரடியாக ரெபெல் 500 க்ரூஸர் பைக்கை ஹோண்டா அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாம்.

ஹோண்டவின் 2022 ரெபெல் 250 க்ரூஸர் பைக்!! ஜப்பானில் வெளியீடு!

2022 ரெபெல் 250 பைக்கிற்கு முன்னதாக ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் கடந்த அக்.21ஆம் தேதி 2022 என்டி1100 மோட்டார்சைக்கிளை உலகளவில் வெளியீடு செய்திருந்தது. ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வின் பைக்குகளின் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள என்டி1100 பைக் ஆனது ஹோண்டாவின் 750சிசி வரிசையில் கோல்டுவிங்கிற்கு முந்தைய இடைவெளியை நிரப்பும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹோண்டவின் 2022 ரெபெல் 250 க்ரூஸர் பைக்!! ஜப்பானில் வெளியீடு!

நேர்த்தியான லைன்கள், கூர்மையான முன்பக்கம் மற்றும் செயல்பாட்டு பின்பகுதி உடன் பக்கா ஹோண்டா தயாரிப்பாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய என்டி1100 பைக்கின் பின்பக்கத்தில் பொருட்களை வைத்து செல்ல பெரிய பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை பைக்கின் மற்ற டிசைன்களுடன் சரியாக பொருந்துகின்றன.

ஹோண்டவின் 2022 ரெபெல் 250 க்ரூஸர் பைக்!! ஜப்பானில் வெளியீடு!

யுகே-வில் ஹோண்டா என்டி1100 பைக் முதலாவதாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வெர்சனின் விலை 11,999 யுரோக்களாகவும் (ரூ.12.39 லட்சம்), டிசிடி வெர்சனின் விலை 12,999 யூரோக்களாகவும் (ரூ.13.42 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கும் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு தான்.

ஹோண்டவின் 2022 ரெபெல் 250 க்ரூஸர் பைக்!! ஜப்பானில் வெளியீடு!

இதனால் இந்திய சந்தைக்கென ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்திடம் எந்த திட்டமும் இல்லை என நினைத்துவிட வேண்டாம். பல தயாரிப்புகளை புதியதாக இந்தியாவில் அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதில் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் அடங்கும்.

ஹோண்டவின் 2022 ரெபெல் 250 க்ரூஸர் பைக்!! ஜப்பானில் வெளியீடு!

இந்திய சந்தையில் முதல் ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2022-23 ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவன தலைவர் அட்சுஷி ஒகடா சமீபத்தில் தெரிவித்திருந்தார். நம் நாட்டில் தற்சமயம், 2019 டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த பென்லி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹோண்டா சோதனை செய்து வருகிறது. இருப்பினும் இந்த மாடல் தான் முதலாவதாக களமிறக்கப்பட உள்ளதா என்பது தெரியவில்லை.

Most Read Articles

English summary
2022 Honda Rebel 250 cruiser breaks cover: Things to note
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X