ஆகஸ்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இரு அமெரிக்க மோட்டார்சைக்கிள்கள்!! இவைதான்...

அமெரிக்க இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான இந்தியன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் களமிறக்கவுள்ள அதன் புதிய மற்றும் அட்வான்ஸ்டு மோட்டார்சைக்கிள்களை பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஆகஸ்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இரு அமெரிக்க மோட்டார்சைக்கிள்கள்!! இவைதான்...

இந்தியாவிற்கு வருகை தரவுள்ள இந்த இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் அடுத்த-நிலை தொழிற்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்றப்படி பைக்கை மாற்றிக்கொள்ள உதவியாக புதிய ஆக்ஸஸரீஸ் தேர்வுகளை பெற்றுவரவுள்ளன.

ஆகஸ்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இரு அமெரிக்க மோட்டார்சைக்கிள்கள்!! இவைதான்...

இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா (Autocar India) செய்திதளம் மூலம் கிடைத்துள்ள தகவலின்படி பார்க்கும்போது, 2022 இந்தியன் சீஃப் மோட்டார்சைக்கிள்கள், பிஎஸ்6 எஃப்.டி.ஆர் வரிசை மோட்டார்சைக்கிள்கள் உடன் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

ஆகஸ்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இரு அமெரிக்க மோட்டார்சைக்கிள்கள்!! இவைதான்...

மேலும் இந்த செய்திக்குறிப்பில், உலகளவில் விற்பனையில் உள்ள 6 இந்தியன் சீஃப் வரிசை மோட்டார்சைக்கிள்களில் மூன்று மாடல்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இரு அமெரிக்க மோட்டார்சைக்கிள்கள்!! இவைதான்...

சீஃப் டார்க் ஹார்ஸ், சீஃப் பாப்பர் டார்க் ஹார்ஸ் மற்றும் சூப்பர் சீஃப் லிமிடெட் என்ற இந்த மூன்று இந்தியன் சீஃப் பைக்குகள் இயக்க ஆற்றலிற்கு பெரிய தண்டர்ஸ்ட்ரோக் 116 என்ஜினை பெற்றுவரவுள்ளதாக அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளன.

ஆகஸ்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இரு அமெரிக்க மோட்டார்சைக்கிள்கள்!! இவைதான்...

இதே என்ஜின் அமைப்பு தான் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விண்டேஜ், ஸ்ப்ரிங்ஃபீல்டு, சிஃப்டெயின் மற்றும் ரோடு மாஸ்டர் என இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள மோட்டார்சைக்கிள்களிலும் வழங்கப்படுகின்றது.

ஆகஸ்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இரு அமெரிக்க மோட்டார்சைக்கிள்கள்!! இவைதான்...

புதியதாக களமிறக்கப்படும் இந்த சீஃப் மோட்டார்சைக்கிள்களின் விலைகள் ரூ.20.75 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கும் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. எஃப்.டி.ஆர் வரிசையில் எஃப்.டி.ஆர் 1200 எஸ் மற்றும் 1200 எஸ் ரேஸ் எடிசன் என்ற இரு மாடல்கள் வெளிவரவுள்ளன.

ஆகஸ்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இரு அமெரிக்க மோட்டார்சைக்கிள்கள்!! இவைதான்...

இவை இரண்டிலும் பொருத்தப்படுகின்ற 1,203சிசி வி-இரட்டை என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதன் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் & ஸ்லிப்பர் க்ளட்ச் இணைக்கப்படுகிறது.

ஆகஸ்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இரு அமெரிக்க மோட்டார்சைக்கிள்கள்!! இவைதான்...

கடந்த ஆண்டில், 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மோட்டார்சைக்கிள்களின் விலைகளை இந்தியன் நிறுவனம் அறிவித்திருந்திருந்தது. இதன்படி பார்க்கும்போது, மிகவும் குறைவான விலையிலான இந்தியன் மோட்டார்சைக்கிளாக ஸ்காட் ரூ.15.67 லட்சத்தில் அறிமுகமாக உள்ளது.

ஆகஸ்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இரு அமெரிக்க மோட்டார்சைக்கிள்கள்!! இவைதான்...

அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட நூறாண்டு கால வரலாறு உள்ளது. இத்தகைய பழமையான மோட்டார்சைக்கிள் பிராண்டில் இருந்து இனி வரும் மோட்டார்சைக்கிள்கள் அடுத்த-கட்ட தொழிற்நுட்ப தரத்தில் இருக்கும் என்பது மட்டும் உறுதி.

Most Read Articles

English summary
New 2022 Indian Chief Line-Up Expected To Launch In August: Updated FTR Models Might Also Launch!
Story first published: Tuesday, June 1, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X