இப்போதே ஆர்வம் தாங்கல... அதிவேக கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் வெளியீடு!!

கோவாவை சேர்ந்த கபீரா மொபைலிட்டி என்ற எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் புதிய இரு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் விலைகள் உள்பட சில முக்கியமான விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இப்போதே ஆர்வம் தாங்கல... அதிவேக கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் வெளியீடு!!

கபீரா மொபைலிட்டி நிறுவனம் கேஎம்3000 மற்றும் கேஎம்4000 என்ற இரு அதிவேக எலக்ட்ரிக் பைக்குகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்த எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இப்போதே ஆர்வம் தாங்கல... அதிவேக கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் வெளியீடு!!

இந்த இரு மோட்டார்சைக்கிள்களில் கேஎம்3000 பைக்கின் விலை ரூ.1,26,990 ஆகவும், கபீரா கேஎம்4000 பைக்கின் விலை ரூ.1,36,990 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கேஎம்4000 பைக் மாடல் தான் தற்சமயம் அதிவேகமான எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக இந்தியாவில் விளங்குகிறது.

இப்போதே ஆர்வம் தாங்கல... அதிவேக கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் வெளியீடு!!

கேஎம்3000 பைக்கில் 4kWh பேட்டரி தொகுப்பு 6kW ப்ரஷ்லெஸ் டிசி எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்படுகிறது. இவற்றின் உதவியுடன் ஈக்கோ மோடில் சிங்கிள்-முழு சார்ஜில் 120கிமீ தூரம் வரையிலும் ஸ்போர்ட் மோடில் 60கிமீ தூரம் வரையிலும் பைக்கை இயக்கி செல்ல முடியும்.

இப்போதே ஆர்வம் தாங்கல... அதிவேக கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் வெளியீடு!!

ஸ்போர்ட் மோடில் பைக்கின் அதிகப்பட்ச வேகம் 100kmph ஆகும். கேஎம்4000 பைக்கில் 4.4 பேட்டரி தொகுப்பு 8 கிலோவாட்ஸ் மோட்டார் உடன் வழங்கப்படுகிறது. இதன் ரேஞ்ச் ஈக்கோ மோடில் கிட்டத்தட்ட 150கிமீ ஆகவும், ஸ்போர்ட் மோடில் 120கிமீ ஆகவும் உள்ளது.

இப்போதே ஆர்வம் தாங்கல... அதிவேக கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் வெளியீடு!!

அதிகப்பட்சமாக மணிக்கு 120கிமீ வேகத்தில் கேஎம்4000 எலக்ட்ரிக் பைக்கை இயக்க முடியும். ஏற்கனவே கூறியதுதான், இந்த வேகத்தில் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் பைக் எதுவும் தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் இல்லை.

இப்போதே ஆர்வம் தாங்கல... அதிவேக கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் வெளியீடு!!

0-வில் இருந்து 40kmph வேகத்தை கேஎம்3000 பைக்கில் 3.3 வினாடிகளிலும், கேஎம்4000 பைக்கில் 3.1 வினாடிகளிலும் எட்டிவிட முடியும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றின் பேட்டரியை ஈக்கோ சார்ஜரில் 80 சதவீதம் நிரப்ப 2 மணிநேரம் 50 நிமிடங்களும், 100 சதவீதம் நிரப்ப 6 மணிநேரம் 30 நிமிடங்களும் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே ஆர்வம் தாங்கல... அதிவேக கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் வெளியீடு!!

அதேநேரம் பூஸ்ட் சார்ஜரின் மூலம் இவற்றின் பேட்டரி தொகுப்பை வெறும் 50 நிமிடங்களில் 80 சதவீதம் நிரப்பி விடலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த இரு பைக்கிலும் பின் சக்கரத்தில் ஒற்றை டிஸ்க் ப்ரேக் ஆனது சிபிஎஸ் (காம்பி ப்ரேக்கிங் சிஸ்டம்) உடன் வழங்கப்பட்டுள்ளது.

இப்போதே ஆர்வம் தாங்கல... அதிவேக கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் வெளியீடு!!

முன் சக்கரத்தில் கேஎம்3000 பைக்கில் அதே சிங்கிள் டிஸ்க்கும், கேஎம்4000 பைக்கில் டபுள் டிஸ்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது. 138 கிலோ எடை கொண்ட கபீரா கேஎம்3000 பைக்கில் ஓட்டுனரின் இருக்கை தரையில் இருந்து 830மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுளது. அதேநேரம் 147 கிலோ எடை கொண்ட கேஎம்4000 பைக்கில் ஓட்டுனர் இருக்கை 800மிமீ உயரத்தில் வடிவமைக்கபட்டுள்ளது.

Most Read Articles

English summary
Kabira KM3000, KM4000 High-Speed Electric Bikes Prices, Specs Revealed.
Story first published: Tuesday, February 16, 2021, 15:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X