மீண்டும் விற்பனைக்கு வரும் கவாஸாகி கேஎல்ஆர்650 அட்வென்ச்சர் பைக்? 2022ல் அறிமுகமாகிறது...

கவாஸாகி நிறுவனம் அதன் ஐகானிக் கேஎல்ஆர் 650 மோட்டார்சைக்கிளை மீண்டும் சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த கவாஸாகி பைக்கை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் விற்பனைக்கு வரும் கவாஸாகி கேஎல்ஆர்650 அட்வென்ச்சர் பைக்? 2022ல் அறிமுகமாகிறது...

2022ஆம் ஆண்டிற்காக கவாஸாகி தயாரித்து வரும் மிடில்-வெய்ட் அட்வென்ச்சர் பைக்குதான் கேஎல்ஆர் 650. கவாஸாகி பைக்குகளின் வடிவமைப்பில் எந்த குறையும் இருக்காது என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும்.

மீண்டும் விற்பனைக்கு வரும் கவாஸாகி கேஎல்ஆர்650 அட்வென்ச்சர் பைக்? 2022ல் அறிமுகமாகிறது...

இருப்பினும் தற்போதைய மாடர்ன் காலக்கட்டதினால் மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளை வழங்க கவாஸாகி நிறுவனம் முனைப்புடன் உள்ளது. அத்தகைய நோக்கத்துடன் தான் கேஎல்ஆர் 650 பைக் உருவாக்கப்படுகிறது.

மீண்டும் விற்பனைக்கு வரும் கவாஸாகி கேஎல்ஆர்650 அட்வென்ச்சர் பைக்? 2022ல் அறிமுகமாகிறது...

இதன் ஒரு பகுதியாக முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டுவருவதற்காக சரியான நிறங்களில் இந்த பைக்கை தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்து விற்பனைக்கு கொண்டுவருகிறது. அதுமட்டுமில்லாமல் கவசம், பக்கவாட்டு கவர் மற்றும் டெயில் கௌல் போன்றவற்றையும் இந்த பைக்கில் புதியதாக வழங்குகிறது.

மீண்டும் விற்பனைக்கு வரும் கவாஸாகி கேஎல்ஆர்650 அட்வென்ச்சர் பைக்? 2022ல் அறிமுகமாகிறது...

கேஎல்ஆர் 650 பைக்கில் ஹெட்லைட்கள், டர்ன் & டெயில் இண்டிகேட்டர்கள் அனைத்தும் எல்இடி தரத்தில் வழங்கப்படவுள்ளன. அதேபோல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் முழு டிஜிட்டல் தரத்தில் வேகமானி, ஓடோமீட்டர், ட்யுல் ட்ரிப் மீட்டர்கள், எரிபொருள் அளவு, நேரம் மற்றும் இண்டிகேட்டர் விளக்குகளின் திசை உள்ளிட்டவற்றை காட்டும் விதத்தில் வழங்கப்பட உள்ளது.

மீண்டும் விற்பனைக்கு வரும் கவாஸாகி கேஎல்ஆர்650 அட்வென்ச்சர் பைக்? 2022ல் அறிமுகமாகிறது...

இதனுடன் இரு பவர் சாக்கெட்களும் இந்த கவாஸாகி பைக்கில் பொருத்தப்படலாம். புதிய கேஎல்ஆர் 650 அதே செமி-டபுள்-க்ராடல் ஃப்ரேமில்தான் தயாரிக்கப்படவுள்ளது. இருப்பினும் கணிசமான அளவிலான அப்கிரேட்கள் வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் விற்பனைக்கு வரும் கவாஸாகி கேஎல்ஆர்650 அட்வென்ச்சர் பைக்? 2022ல் அறிமுகமாகிறது...

ஸ்விங்கார்ம் தற்போது பெரியதாக்கவும், துணை ஃப்ரேம் முக்கிய ஃப்ரேம் உடன் இணைக்கப்பட்டது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேஎல்ஆர்650 பைக்கில் வழங்கப்படும் 652சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு என்ஜின் ஃப்யுல்-இன்ஜெக்‌ஷனை பெற்றுள்ளது.

மீண்டும் விற்பனைக்கு வரும் கவாஸாகி கேஎல்ஆர்650 அட்வென்ச்சர் பைக்? 2022ல் அறிமுகமாகிறது...

இந்த பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்பாக முன்பக்கத்தில் 200மிமீ சஸ்பென்ஷன் ட்ராவல் உடன் 41மிமீ ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 185மிமீ ட்ராவல் உடன் மோனோஷாக்கும் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்க சஸ்பென்ஷனை அட்ஜெஸ்ட் மற்றும் மறு இணைப்பு செய்ய முடியும்.

மீண்டும் விற்பனைக்கு வரும் கவாஸாகி கேஎல்ஆர்650 அட்வென்ச்சர் பைக்? 2022ல் அறிமுகமாகிறது...

ப்ரேக்கிங் பணியினை கவனிக்க முன் மற்றும் பின் சக்கரத்தில் 300மிமீ டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. ஆஃப்-ரோடு திறனிற்காக 21 இன்ச் மற்றும் 17 இன்ச்சில் ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கவாஸாகி கேஎல்ஆர் 650 பைக் ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் அல்லாத என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ளது.

மீண்டும் விற்பனைக்கு வரும் கவாஸாகி கேஎல்ஆர்650 அட்வென்ச்சர் பைக்? 2022ல் அறிமுகமாகிறது..

இதுமட்டுமின்றி அட்வென்ச்சர் மற்றும் ட்ராவலர் வேரியண்ட்களிலும் இந்த பைக் கிடைக்கவுள்ளது. இதில் அட்வென்ச்சர் வேரியண்ட்டில் 21 லிட்டர் கொள்ளளவில் பொருட்களை வைப்பதற்கான பெட்டகம், என்ஜின் பாதுகாப்பான்கள் மற்றும் எல்இடி ஆக்ஸ் விளக்குகளும், ட்ராவலர் வேரியண்ட்டில் 42 லிட்டர்களில் டாப் கேஸும், இரு பவர் சாக்கெட்களும் வழங்கப்படவுள்ளன.

மீண்டும் விற்பனைக்கு வரும் கவாஸாகி கேஎல்ஆர்650 அட்வென்ச்சர் பைக்? 2022ல் அறிமுகமாகிறது..

கவாஸாகி கேஎல்ஆர்650 பைக் இன்னும் சில மாதங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விற்பனையை துவங்கவுள்ளது. இந்தியாவில் கவாஸாகி கேஎல்ஆர் பைக்குகள் விற்பனைக்கு இதுவரை வந்ததே இல்லை. இதனால் புதிய கேஎல்ஆர்650 பைக்கும் நம் நாட்டிற்கு வருகைதர வாய்ப்பில்லை.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki KLR 650 adventure bike makes a comeback!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X