2021 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.61 லட்சம்

கவாஸாகி நிறுவனம் இந்திய சந்தையில் அதன் 2021 நிஞ்சா 650 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கவாஸாகி பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.61 லட்சம்

ஜப்பானை சேர்ந்த பிரபல மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் கவாஸாகி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்டேட் செய்யப்பட்ட நிஞ்சா 650 பைக்கை சில வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகப்படுத்தியது.

2021 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.61 லட்சம்

அதனை தொடர்ந்து தற்போது 2021 கவாஸாகி நிஞ்சா 650 இந்திய வாடிக்கையாளர்களுக்காக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 650சிசி கவாஸாகி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.61 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிஞ்சா 650 பைக்கின் இந்திய விலையில் எந்தவொரு மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

2021 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.61 லட்சம்

அதாவது முந்தைய தலைமுறை நிஞ்சா 650 பைக்கும் இதே விலையில் தான் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தியாவில் இந்த கவாஸாகி ஸ்போர்ட்ஸ் ரக பைக்கிற்கு சிஎஃப் மோட்டோவின் பிஎஸ்6 650ஜிடி என்ற பைக் மாடல் மட்டுமே போட்டியாக உள்ளது.

2021 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.61 லட்சம்

இந்த சிஎஃப் மோட்டோ பைக்கின் விலை கவாஸாகி நிஞ்சா 650-ஐ காட்டிலும் கிட்டத்தட்ட 1 லட்சம் குறைவு தான் என்றாலும், தொழிற்நுட்ப அம்சங்களிலும், செயல்படுதிறனிலும் நிஞ்சா 650 அடுத்த கட்டத்தில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் கவாஸாகி பிராண்டில் பைக் வாங்க நினைப்பவர்கள் இந்த 1 லட்ச வித்தியாசத்தை எல்லாம் பெரியதாகவே கருத்தில் எடுத்து கொள்ள மாட்டார்கள் என்பது எனது கருத்து.

2021 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.61 லட்சம்

ஆனால் இவ்வாறான ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிளை வேண்டாம் என நினைக்கிறீர்கள். உங்களுக்காகவே கவாஸாகி இசட்650, டிரையம்ப் ட்ரைடெண்ட் 660 உள்ளிட்ட பைக்குகள் விற்பனையில் உள்ளன. இதில் கவாஸாகியின் நாக்டு மோட்டார்சைக்கிளான இசட்650-இன் விலை 2021 நிஞ்சா 650-ஐ காட்டிலும் கிட்டத்தட்ட 37,000 குறைவாக உள்ளது.

2021 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.61 லட்சம்

ஆனால் டிரையம்ப் ட்ரைடெண்ட் 650 பைக்கின் விலை ரூ.34,000 அதிகமாக உள்ளது. நிஞ்சா 650 பைக்கின் தோற்றம் கடந்த 2020ஆம் ஆண்டில் மறுசீரமைக்கப்பட்டதால், 2021ஆம் ஆண்டிற்கான அப்கிரேடாக புதிய நிறத்தேர்வை மட்டுமே கவாஸாகி நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

2021 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.61 லட்சம்

பேர்ல் ரோபோடிக் வெள்ளை என்கிற பெயரில் 2021 நிஞ்சா 650 பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ள இந்த புதிய நிறத்தேர்வில், பைக் க்ரே மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த படங்களில் உள்ளதாற் போன்று பெயிண்ட் செய்யப்பட்டு வழங்கப்படும்.

2021 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.61 லட்சம்

கவாஸாகியின் அடையாளமே அடர் பச்சை நிறம் என்பதால், பச்சை நிறத்தையும் பெட்ரோல் டேங்கிற்கு கீழ்பகுதியில், அலாய் சக்கர ரிம்களில் புதிய நிஞ்சா 650 கொண்டுள்ளது. நிஞ்சா 650 பைக்கிற்கு கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட புதிய தோற்றம் நம் இந்தியர்கள் பலரை கவர்ந்துவிட்டது.

2021 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.61 லட்சம்

இந்த நிலையில் புதியதாக வழங்கப்பட்டுள்ள இந்த பெயிண்ட் தேர்வு நிச்சயம் பல தரப்பட்ட வாடிக்கையாளர்களை கவாஸாகி நிஞ்சா 650 பைக் பக்கம் இழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய க்ரே-வெள்ளை-பச்சை பெயிண்ட்டை தவிர்த்து 2021 நிஞ்சா 650 பைக்கில் வேறெந்த மாற்றத்தையும் தயாரிப்பு நிறுவனம் வழங்கவில்லை.

இதனால் வழக்கமான 649சிசி, இணையான-இரட்டை என்ஜின் தான் புதிய நிஞ்சா 650 பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 68 பிஎஸ் மற்றும் 65 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

2021 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.61 லட்சம்

அதேபோல் 2021 நிஞ்சா பைக்கிலும் 4.3 இன்ச்சில் டிஎஃப்டி திரை, ஸ்மார்ட்போன் இணைப்பு, எல்இடி விளக்குகள் மற்றும் டூன்லுப் ஸ்போர்ட்மேக்ஸ் டயர்களூம் தான் தொடரப்பட்டுள்ளன. இரும்பு ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் தயாரிக்கப்படும் இந்த கவாஸாகி பைக்கில் சஸ்பென்ஷனுக்கு 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளன.

ப்ரேக்கிங் பணியை கவனிக்க 300மிமீ-இல் பெடல் டிஸ்க்கும், பின்பக்கத்தில் 220மிமீ-இல் சிங்கிள் டிஸ்க்கும் வழங்கப்படுகின்றன. இந்த புதிய நிறத்தேர்வு சிலருக்கு பிடிக்காமலும் போகலாம். அத்தகையவர்களுக்காக 2020 மாடலில் இருந்து கவாஸாகி லைம் பச்சை நிறமும் தொடரப்பட்டுள்ளது.

2021 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.61 லட்சம்

எல்இடி இண்டிகேட்டர்கள் 2021 நிஞ்சா 650 பைக்கிலும் தவிர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும் எந்தவொரு கூடுதல் விலையுமின்றி புதிய பெயிண்ட் தேர்வு வழங்கப்பட்டிருப்பட்டிருப்பது உண்மையில் கவாஸாகி நிஞ்சா 650 பைக்கிற்கு சாதகமான சூழலை உருவாக்கும்.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2022 Kawasaki Ninja 650 India Launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X