2022 கவாஸாகி டபிள்யூ800 பைக் உலகளவில் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது?

புதிய 2022 கவாஸாகி டபிள்யூ800 மோட்டார்சைக்கிள் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய அறிமுகம் உள்ளிட்ட கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

2022 கவாஸாகி டபிள்யூ800 பைக் உலகளவில் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது?

புதிய கவாஸாகி டபிள்யூ800 மோட்டார்சைக்கிள் சில வாரங்களுக்கு முன்பு தான் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 2022 டபிள்யூ800 மோட்டார்சைக்கிள் பற்றிய விபரங்கள் ஐரோப்பாவிலும் வெளியிடப்பட்டுள்ளன.

2022 கவாஸாகி டபிள்யூ800 பைக் உலகளவில் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது?

2022ஆம் ஆண்டிற்கான அப்டேட்டின்படி, சில காஸ்மெட்டிக் மாற்றங்களை இந்த ரெட்ரோ-ஸ்டைல் கவாஸாகி மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது. இந்த காஸ்மெட்டிக் மாற்றங்களில் புதிய நிறத்தேர்வு, கவர்ச்சிகரமான உடல் கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்தியாவில் 2022 கவாஸாகி டபிள்யூ800 மாடல் அடுத்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.

2022 கவாஸாகி டபிள்யூ800 பைக் உலகளவில் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது?

மெட்டாலிக் டயாப்லோ கருப்பு உடன் கேண்டி சிவப்பு என்ற இரட்டை-நிறத்தில் உலகளவில் 2022 கவாஸாகி டபிள்யூ800 பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மெட்டாலிக் ஷேட் ஆகும். அதாவது பெயிண்ட் பளபளப்பானதாக காட்சியளிக்கிறது. ஆனால் இந்தியாவில் தற்சமயம் விற்பனைக்கு கிடைக்கும் கவாஸாகி டபிள்யூ800 மாடல் மேட் ஷேடில், அதாவது சொரசொரப்பான ஷேடில் வழங்கப்படுகிறது.

2022 கவாஸாகி டபிள்யூ800 பைக் உலகளவில் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது?

பெட்ரோல் டேங்க் பகுதியில் வெள்ளை நிற ஸ்ட்ரிப் உடன் ஏகப்பட்ட க்ரோம் தொடுதல்களை இந்த அப்டேட் செய்யப்பட்ட ரெட்ரோ கிளாசிக் மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது. பைக்கின் பக்கவாட்டு பேனல்கள் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள், முன்பக்க & பின்பக்க ஃபெண்டர்கள், ஹெட்லேம்ப் வளையம் மற்றும் எக்ஸாஸ்ட் குழாய் உள்ளிட்டவை அனைத்தும் க்ரோமில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன.

2022 கவாஸாகி டபிள்யூ800 பைக் உலகளவில் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது?

இவை தவிர்த்த மற்ற இயந்திர பாகங்கள் அனைத்தும் அப்படியே தான் தொடர்கின்றன. அப்டேட் செய்யப்பட்ட 2022 கவாஸாகி டபிள்யூ800 மோட்டார்சைக்கிளில் 773சிசி, செங்குத்தான-இரட்டை, ஏர்-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 6,500 ஆர்பிஎம்-இல் 48 பிஎஸ் மற்றும் 4800 ஆர்பிஎம்-இல் 62.9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் & உதவி க்ளட்ச் இணைக்கப்படுகிறது.

2022 கவாஸாகி டபிள்யூ800 பைக் உலகளவில் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது?

ஆனால் உண்மையில் இதன் என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் சற்று குறைக்கப்பட்டுள்ளன. ஏனெனில் இந்திய டபிள்யூ800 பைக்கின் என்ஜின் 52 பிஎஸ் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இரட்டை-தொட்டில் ஃப்ரேமின் அடிப்படையில் கவாஸாகி டபிள்யூ800 பைக் தயாரிக்கப்படுகிறது.

2022 கவாஸாகி டபிள்யூ800 பைக் உலகளவில் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது?

சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் இரட்டை சுருள்-லோடு ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்படுகின்றன. ப்ரேக்கிங் பணியை கவனிக்க இந்த கவாஸாகி பைக்கில் 320மிமீ மற்றும் 270மிமீ டிஸ்க் ப்ரேக்குகள் இரு சக்கரங்களிலும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு இரட்டை-சேனல் ஏபிஎஸும் வழங்கப்படுகிறது.

2022 கவாஸாகி டபிள்யூ800 பைக் உலகளவில் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது?

இந்திய சந்தையில் தற்சமயம் கவாஸாகி டபிள்யூ800 மோட்டார்சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.26 லட்சமாக உள்ளது. அடுத்த 2022இன் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் 2022 டபிள்யூ800 பைக்கின் விலை இதனை காட்டிலும் சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

2022 கவாஸாகி டபிள்யூ800 பைக் உலகளவில் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது?

முன்னதாக கடந்த செப்டம்பர் மாத இறுதியில் கவாஸாகி நிறுவனம் இசட்650 ஆர்எஸ் என்ற பெயரில் புதிய ஸ்ட்ரீட் பைக்கை உலகளவில் வெளியீடு செய்திருந்தது. வழக்கமான கவாஸாகி இசட்650 மோட்டார்சைக்கிளை அடிப்படையாக்ல கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய இசட்650 ஆர்எஸ் மோட்டார்சைக்கிளும் இந்தியாவில் அடுத்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 கவாஸாகி டபிள்யூ800 பைக் உலகளவில் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது?

சிகேடி முறையில் நம் நாட்டு சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ள இசட்650 மாடலின் இந்த சிறப்பு பதிப்பின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.7 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம். இந்த ஏற்கக்கூடிய விலையினாலும், கவர்ச்சிகரமான தோற்றத்தினாலும் இந்தியர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படும் புதிய இசட்650 ஆர்எஸ் பைக்கினை "புரட்சியின் காய்ச்சப்பட்ட வடிவம்" என கவாஸாகி நிறுவனம் அழைக்கிறது.

2022 கவாஸாகி டபிள்யூ800 பைக் உலகளவில் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது?

இதற்கிடையில் பெட்ரோல் & மின்சாரம் என இரண்டிலும் இயங்கக்கூடிய மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணியிலும் கவாஸாகி நிறுவனம் தற்சமயம் ஈடுப்பட்டு வருகிறது. இந்த ஜப்பானிய மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2035ஆம் ஆண்டிற்குள் தனது மொத்த தயாரிப்பு வரிசையையும் எலக்ட்ரிக்காக மாற்ற இருப்பதாக முன்னதாக அறிவித்திருந்தது.

2022 கவாஸாகி டபிள்யூ800 பைக் உலகளவில் வெளியீடு!! இந்திய அறிமுகம் எப்போது?

உலகளவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை சாலையில் தற்சமயம் அதிகளவில் பார்க்க முடிகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் தான் பெட்ரோல் & மின்சாரம் மூலமாக இயங்கக்கூடிய மோட்டார்சைக்கிளை கவாஸாகி நிறுவனம் வடிவமைத்து வருகிறது.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2022 Kawasaki W800 Officially Revealed Globally.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X