அறிமுகத்திற்கு தயாராகும் புதிய கவாஸாகி இசட்650 ஆர்எஸ்!! ராயல்என்பீல்டு இண்டர்செப்டரின் போட்டியினை சமாளிக்குமா?

கவாஸாகி நிறுவனம் அதன் புதிய இசட்650 ஆர்எஸ் ரெட்ரோ கிளாசிக் மோட்டார்சைக்கிளை சில தினங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த நேரத்தில் இந்திய சந்தையில் இந்த கவாஸாகி ரெட்ரோ கிளாசிக் பைக்கிற்கும், இதற்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கிற்கும் இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ்!! ராயல்என்பீல்டு இண்டர்செப்டர் 650-இன் போட்டியினை சமாளிக்குமா?

கவாஸாகியின் 650சிசி ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிளாக விளங்கும் நிஞ்சா 650-இன் நாக்டு வெர்சனான இசட்650 பைக்கின் அடிப்படையில் புதிய இசட்650 ஆர்எஸ் மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கவாஸாகி பைக்கிற்கு இந்திய சந்தையில் ராயல் என்பீல்டின் 650 இரட்டை பைக்குகளுள் ஒன்றான இண்டர்செப்டர் 650 முக்கியமான போட்டியாக விளங்கவுள்ளது.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ்!! ராயல்என்பீல்டு இண்டர்செப்டர் 650-இன் போட்டியினை சமாளிக்குமா?

இன்னும் சொல்ல போனால் புதிய இசட்650 ஆர்எஸ் பைக்கை இந்தியாவில் விற்பனை செய்வதில் கவாஸாகி நிறுவனத்திற்கு இந்த ராயல் என்பீல்டு பைக் பெரிய தலைவலியாக விளங்கக்கூடும். ஏனெனில் ஒரே மாதிரியாக ரெட்ரோ-ஸ்டைலில் தோற்றத்தை கொண்டிருப்பது மட்டுமின்றி, விலையில் ராயல் என்பீல்டு மாடல் மலிவானதாக விளங்குகிறது.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ்!! ராயல்என்பீல்டு இண்டர்செப்டர் 650-இன் போட்டியினை சமாளிக்குமா?

இதனால் விலை நிச்சயம் ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கிற்கு அனுகூலமாக இருக்கும். புதிய கவாஸாகி இசட்650 ஆர்எஸ் மற்றும் இண்டர்செப்டர் 650 இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான 650சிசி 2-சிலிண்டர் என்ஜினே வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இசட்650 ஆர்எஸ் பைக்கில் பொருத்தப்பட உள்ள 649சிசி, இணையான-இரட்டை என்ஜின் தான் இசட்650 மற்றும் நிஞ்சா 650 மோட்டார்சைக்கிள்களிலும் வழங்கப்படுகின்றன.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ்!! ராயல்என்பீல்டு இண்டர்செப்டர் 650-இன் போட்டியினை சமாளிக்குமா?

அதிகப்பட்சமாக 67.3 பிஎச்பி மற்றும் 64 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. அதுவே, இண்டர்செப்டர் 650-இல் ராயல் என்பீல்டு நிறுவனம் பொருத்தும் 648சிசி, இணையான-இரட்டை, 4-ஸ்ட்ரோக், சிங்கிள் ஓவர்ஹெட் காம், ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் 47 பிஎச்பி மற்றும் 52 என்எம் டார்க் திறன் வரையில் பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ்!! ராயல்என்பீல்டு இண்டர்செப்டர் 650-இன் போட்டியினை சமாளிக்குமா?

இதனுடன் டிரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கான்ஸ்டெண்ட் மெஷ் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், கவாஸாகி இசட்650 ஆர்எஸ் பைக்கில் ஹேண்டில்பாருக்கு மத்தியில் எல்சிடி டேஸ் உடன் இரட்டை-பேட் அனலாக் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த பைக்கை சுற்றிலும் முழு-எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ்!! ராயல்என்பீல்டு இண்டர்செப்டர் 650-இன் போட்டியினை சமாளிக்குமா?

மறுப்பக்கம், ராயல் என்பீல்டு நிறுவனம் இண்டர்செப்டர் 650-இல் சில MiY தேர்வுகளை வழங்குகிறது. இந்த தேர்வுகளில் இருக்கைகள், பெட்ரோல் டேங்க் பாதுகாப்பான், தொலைத்தூர பயணங்களுக்கான கண்ணாடிகள், முன்பக்க எதிர்காற்று தடுப்பு கண்ணாடி உள்பட ஏகப்பட்டவை அடங்குகின்றன. ஆனால் இத்தகைய ஆக்ஸஸரீஸ் தேர்வுகள் கவாஸாகி மாடலில் அதிகளவில் வழங்கப்படவில்லை.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ்!! ராயல்என்பீல்டு இண்டர்செப்டர் 650-இன் போட்டியினை சமாளிக்குமா?

புதிய கவாஸாகி இசட்650 ஆர்எஸ் பைக்கில் ஒற்றை துண்டாக, அதாவது இடையில் பிளவுப்படாமல் இருக்கை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுவே கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2021 இண்டர்செப்டர் 650 பைக்கில் டூரிங் இரட்டை இருக்கை மற்றும் குறுக்கு நெடுக்காக தையலுடன் டூரிங் இருக்கை என்ற இரு விதமான இருக்கை தேர்வுகளை பெறலாம். ஸ்போக் சக்கரங்களில் இந்த புதிய கவாஸாகி ரெட்ரோ கிளாசிக் பைக் இயங்குகிறது.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ்!! ராயல்என்பீல்டு இண்டர்செப்டர் 650-இன் போட்டியினை சமாளிக்குமா?

2021 இண்டர்செப்டர் 650 பைக்கிலும் ஸ்போக்டு சக்கரங்களை தான் ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கியுள்ளது. அதேபோல், 2021 இண்டர்செப்டர் 650 பைக்கில் எளிமையான, மிகவும் குறிப்பிட்ட விபரங்களை மட்டுமே காட்டக்கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரே வழங்கப்பட்டுள்ளது. ப்ரேக்கிங் பணியினை கவனிக்க இசட்650 ஆர்எஸ்-இல் முன் சக்கரத்தில் 310மிமீ-இல் இரட்டை டிஸ்க்குகளும், பின் சக்கரத்தில் 220மிமீ-இல் ஒற்றை டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளது.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ்!! ராயல்என்பீல்டு இண்டர்செப்டர் 650-இன் போட்டியினை சமாளிக்குமா?

இவற்றுடன் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்காக டபுள்-சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு மாடலிலும் பாதுகாப்பு அம்சமாக டபுள்-சேனஸ் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் இண்டர்செப்டர் 650 பைக்குகளில் சியட் டயர்கள் பொருத்தப்படுகின்றன. முன்பு பைரெல்லி டயர்கள் வழங்கப்பட்டு வந்தன.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ்!! ராயல்என்பீல்டு இண்டர்செப்டர் 650-இன் போட்டியினை சமாளிக்குமா?

2021 ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கிற்கு மார்க் 2, பேக்கர் எக்ஸ்பிரஸ், சன்செட் ஸ்ட்ரிப், டவுன்டவுன் ட்ராக், வெண்டுரா ப்ளூ, கேன்யான் சிவப்பு மற்றும் ஆரஞ்ச் க்ரஷ் என மொத்தம் 7 பெயிண்ட் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் கவாஸாகி இசட்650 ஆர்எஸ் பைக்கிற்கு மிட்டாய் மரகத பச்சை மற்றும் மெட்டாலிக் ஷேடில் நிலவின் க்ரே என்ற இரு நிறத்தேர்வுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ்!! ராயல்என்பீல்டு இண்டர்செப்டர் 650-இன் போட்டியினை சமாளிக்குமா?

இந்த நவம்பர் மாத இறுதியில் இருந்தோ அல்லது அடுத்த டிசம்பர் மாத துவக்கத்தில் இருந்தோ டெலிவிரியை துவங்கலாம் என எதிர்பார்க்கப்படும் 2022 கவாஸாகி இசட்650 ஆர்எஸ் பைக்கின் ஆரம்ப விலை ரூ.6.65 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலையே இண்டர்செப்டர் 650 பைக்கிற்கு வாடிக்கையாளர்களை பெற்று தருவதில் முக்கியமானதாக விளங்குகிறது என ஏற்கனவே கூறிவிட்டோம். ஏனெனில் தற்சமயம் 2021 இண்டர்செப்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.80 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

Most Read Articles
English summary
New Kawasaki Z650 RS compares to popular Royal Enfield Interceptor 650.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X