கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ் ஸ்ட்ரீட் பைக்!! 1970களின் டிசைனில் உருவாக்கம்

கவாஸாகி நிறுவனம் இசட்650ஆர்எஸ் என்ற பெயரில் அதன் புதிய ஸ்ட்ரீட் பைக்கை உலகளவில் வெளியீடு செய்துள்ளது. கவர்ச்சிகரமான தோற்றத்தால் இணையத்தில் வைரலாகி வரும் இந்த புதிய கவாஸாகி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ் ஸ்ட்ரீட் பைக்!! 1970களின் டிசைனில் உருவாக்கம்

கவாஸாகி இசட்650 மோட்டார்சைக்கிளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய இசட்650 ஆர்எஸ், இந்திய சந்தையில் அடுத்த 2022ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ் ஸ்ட்ரீட் பைக்!! 1970களின் டிசைனில் உருவாக்கம்

கவாஸாகி இசட்900 ஆர்எஸ் பைக்கை போல் அல்லாமல், பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் வைத்து அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய இசட்650 ஆர்எஸ் பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.7 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம்.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ் ஸ்ட்ரீட் பைக்!! 1970களின் டிசைனில் உருவாக்கம்

இந்த விலையினாலும், அட்டகாசமான தோற்றத்தினாலும் இந்த கவாஸாகி ஸ்ட்ரீட் பைக் இந்தியாவில் பெரிய அளவிலான வாடிக்கையாளர்கள் கூட்டத்தை பெறும் என இப்போதே கணிக்கப்பட்டுள்ளது. கவாஸாகி நிறுவனம் இந்த புதிய மோட்டார்சைக்கிளை "புரட்சியின் காய்ச்சப்பட்ட வடிவம்" என அழைக்கிறது.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ் ஸ்ட்ரீட் பைக்!! 1970களின் டிசைனில் உருவாக்கம்

மேலும் புதிய இசட்650 ஆர்எஸ் பைக் தொடர்பான வீடியோ ஒன்றினையும் இந்த ஜப்பானிய மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் யுடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த வீடியோவின் விளக்கம் பகுதியில் இந்த மோட்டார்சைக்கிள் தொடர்பான சில விபரங்களையும் கவாஸாகி பதிவிட்டுள்ளது.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ் ஸ்ட்ரீட் பைக்!! 1970களின் டிசைனில் உருவாக்கம்

இவற்றின்படியும், வெளியிடப்பட்டுள்ள பைக் தொடர்பான படங்களை வைத்தும் பார்க்கும்போது, கிளாசிக்கான வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லைட், உணர்வு திறன்மிக்க இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 1970களின் ஸ்டைலில் உடற் அமைப்பு & நிறங்கள், இரட்டை-சிலிண்டர் என்ஜின் உள்ளிட்டவற்றை சிறப்பம்சங்களாக புதிய கவாஸாகி இசட்650 ஆர்எஸ் பைக் பெற்றுவரவுள்ளது.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ் ஸ்ட்ரீட் பைக்!! 1970களின் டிசைனில் உருவாக்கம்

இதனை காட்டிலும் பெரிய தோற்றம் கொண்ட கவாஸாகி இசட்900 ஆர்எஸ் பைக்கில் இருந்து தான் புதிய இசட்650 ஆர்எஸ் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஏற்கனவே கூறிவிட்டோம். குறிப்பாக வட்ட வடிவிலான ஹெட்லைட், தையலிடப்பட்ட பேட்டர்னில் தட்டையான இருக்கை, வட்ட வடிவிலான பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் மற்றும் கண்ணீர்த்துளி வடிவிலான பெட்ரோல் டேங்க் முதலியவை நமக்கு இசட்900 ஆர்எஸ் பைக்கை ஞாபகப்படுத்துகின்றன.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ் ஸ்ட்ரீட் பைக்!! 1970களின் டிசைனில் உருவாக்கம்

விற்பனையில் உள்ள இசட்650 பைக்குடன் ஒப்பிடுகையில், இந்த புதிய மாடல் வீல்பேஸ் (சக்கரங்களுக்கு இடையேயான தொலைவு) அளவை 5 மிமீ குறைவாக 1,405மிமீ ஆக கொண்டுள்ளது. ஆனால் நறுக்கப்பட்ட பின்பக்கத்தினால் இந்த புதிய ரெட்ரோ-கிளாசிக் பைக்கை காட்டிலும் வழக்கமான இசட்650 மாடல் 10 மிமீ நீளம் குறைவானதாக உள்ளது.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ் ஸ்ட்ரீட் பைக்!! 1970களின் டிசைனில் உருவாக்கம்

அதேபோல் உயரத்திலும் புதிய இசட்650 ஆர்எஸ் மாடல் முன்னிலையில் உள்ளது. இவ்வாறு உயரம், நீளம் இவை இரண்டையும் அதிகமாக கொண்டிருப்பினும், இசட்650 உடன் ஒப்பிடுகையில் இந்த புதிய மாடல் 1 கிலோ எடை குறைவானதாக உள்ளது. புதிய இசட்650 ஆர்எஸ்-இன் மொத்த கெர்ப் எடை 187 கிலோ ஆகும்.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ் ஸ்ட்ரீட் பைக்!! 1970களின் டிசைனில் உருவாக்கம்

இந்த புதிய கவாஸாகி பைக்கில் தரையில் இருந்து இருக்கையின் உயரம் 820மிமீ ஆகும். 12 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்கை இந்த பைக் கொண்டுள்ளது. குழாய் இரும்பு சட்டகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கவாஸாகி ஸ்ட்ரீட் பைக்கில், இசட்650 மாடலில் பொருத்தப்படும் அதே 649சிசி, லிக்யுடு-கூல்டு, இணையான-இரட்டை என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ் ஸ்ட்ரீட் பைக்!! 1970களின் டிசைனில் உருவாக்கம்

அதிகப்பட்சமாக 8000 ஆர்பிஎம்-இல் 67.3 பிஎச்பி-ஐ வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கவாஸாகி ரெட்ரோ-ஸ்டைல் ஸ்ட்ரீட் பைக் அதிகப்பட்சமாக மணிக்கு 191கிமீ வேகத்தில் இயங்கும் என தகவல்கள் கூறுகின்றன.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ் ஸ்ட்ரீட் பைக்!! 1970களின் டிசைனில் உருவாக்கம்

சஸ்பென்ஷனுக்கு இசட்650 ஆர்எஸ்-இல் வழக்கமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங் பணியை கவனிக்க ஏபிஎஸ் உடன் 300மிமீ டிஸ்க்குகள் முன் சக்கரத்திலும், 200மிமீ ரோடார் பின் சக்கரத்திலும் பொருத்தப்பட்டுள்ளன.

கவாஸாகியின் புதிய இசட்650 ஆர்எஸ் ஸ்ட்ரீட் பைக்!! 1970களின் டிசைனில் உருவாக்கம்

இந்தியாவில் கவாஸாகி பிராண்டில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிய மோட்டார்சைக்கிளாக அப்டேட் செய்யப்பட்ட வல்கன் எஸ், ரூ.6.10 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. முந்தைய கவாஸாகி வல்கன் எஸ் பைக்கும் கிட்டத்தட்ட இதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஏனெனில் அப்டேட்டாக பைக்கில் புதிய நிறத்தேர்வுகள் மட்டும் கொண்டுவரப்பட்டன. இந்த கவாஸாகி க்ரூஸர் பைக்கிற்கு போட்டியாக பெனெல்லி 502சி மோட்டார்சைக்கிள் மட்டுமே இந்தியாவில் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
New Kawasaki Z650RS neo-retro motorcycle revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X