மறைப்புகளுடன் சாலையில் உலாவந்த புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்!! எப்போது அறிமுகப்படுத்தப்படும்?

புதிய கேடிஎம் ஆர்சி200 பைக் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மறைப்புகளுடன் சாலையில் உலாவந்த புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்!! எப்போது அறிமுகப்படுத்தப்படும்?

கேடிஎம் நிறுவனம் அதன் ஆர்சி200 பைக்கின் இந்திய சந்தைக்கான அப்டேட் வெர்சனை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருவது நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். அப்கிரேட், பைக்கின் தோற்றத்தில் மட்டுமில்லாமல், என்ஜின் அமைப்பிலும் கொண்டுவரப்படுகிறது.

மறைப்புகளுடன் சாலையில் உலாவந்த புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்!! எப்போது அறிமுகப்படுத்தப்படும்?

இந்த நிலையில் அறிமுகத்திற்கு முன்னதாக புதிய ஆர்சி200 பைக் புனேக்கு அருகே சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த ஸ்பை படங்கள் வீல்_ட்ரானிக்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.

மறைப்புகளுடன் சாலையில் உலாவந்த புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்!! எப்போது அறிமுகப்படுத்தப்படும்?

இந்த ஸ்பை படங்களில் பைக் முழுவதும் மறைக்கப்பட்டு இருப்பினும் கேடிஎம் ட்யூக் 200 பைக்கில் வழங்கப்படுவதை போன்றதான ஹலோஜன் ஹெட்லேம்ப்கள் எல்இடி டிஆர்எல்களுடன் வழங்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

மறைப்புகளுடன் சாலையில் உலாவந்த புதிய கேடிஎம் ஆர்சி250 பைக்!! எப்போது அறிமுகப்படுத்தப்படும்?

இதனுடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கான டிஎஃப்டி திரையையும் அழகான வடிவில் இந்த சோதனை ஓட்ட பைக் மாதிரி கொண்டுள்ளதை இந்த படங்கள் காட்டுகின்றன. ஆனால் இது கேடிஎம் 390 மாடல்களை வழங்கப்படுவதை போன்று இல்லா விடினும், கேடிஎம் 250 அட்வென்ச்சரை ஒத்திருக்கலாம்.

மறைப்புகளுடன் சாலையில் உலாவந்த புதிய கேடிஎம் ஆர்சி250 பைக்!! எப்போது அறிமுகப்படுத்தப்படும்?

இந்த சோதனை பைக்கின் பின்பக்கத்தில் ரேஸ்-கௌல் வழங்கப்படவில்லை, அதற்கு மாற்றாக வழக்கமான தட்டையான இருக்கை அதற்கு ஏற்ற க்ராப் ஹேண்டில்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி எல்இடி டெயில்லைட்களையும் இந்த பைக்கின் பின்புறத்தில் பார்க்கலாம்.

மறைப்புகளுடன் சாலையில் உலாவந்த புதிய கேடிஎம் ஆர்சி250 பைக்!! எப்போது அறிமுகப்படுத்தப்படும்?

இவற்றுடன் குறுக்க நெடுக்கான ஃப்ரேம்-ஐயும் பெறுகின்ற ஆர்சி200 பைக் ட்யூக்200-ஐ காட்டிலும் சவுகரியமான பயண அனுபவத்தை வழங்குபவையாக விளங்குகின்றது. அதேநேரம் புதிய ஆர்சி200 பைக்கில் அலாய் சக்கரங்கள் புதிய டிசைனிலும் வழங்கப்படலாம்.

மறைப்புகளுடன் சாலையில் உலாவந்த புதிய கேடிஎம் ஆர்சி250 பைக்!! எப்போது அறிமுகப்படுத்தப்படும்?

சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் அமைப்புகளில் அப்கிரேட்கள் கொண்டுவர வாய்ப்புகள் சற்று குறைவே. ஆர்சி200 பைக்கில் 199சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 25 பிஎச்பி மற்றும் 19 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

மறைப்புகளுடன் சாலையில் உலாவந்த புதிய கேடிஎம் ஆர்சி250 பைக்!! எப்போது அறிமுகப்படுத்தப்படும்?

2021 கேடிஎம் ஆர்சி200 பைக் இந்திய சந்தையில் விற்பனையை இந்த ஆண்டு இறுதியில் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் ஆர்சி200 பைக்கிற்கு விற்பனையில் போட்டியாக பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் மற்றும் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்250 உள்ளிட்டவை தற்சமயம் உள்ளன.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
New KTM RC200 Spied Testing In India Ahead Of Launch. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X