புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் அறிமுகம் எப்போது தாங்க? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் அறிமுகம் எப்போது தாங்க? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

ராயல் என்பீல்டு நிறுவனம் அடுத்ததாக சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ள மோட்டார்சைக்கிள்களுள் 2021 கிளாசிக் 350-யும் ஒன்றாகும். கிளாசிக் 350, ராயல் என்பீல்டின் சிறந்த விற்பனை மாடலாக விளங்குகிறது.

புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் அறிமுகம் எப்போது தாங்க? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

இதனால் இந்த ராயல் என்பீல்டு பைக்கின் புதிய தலைமுறையின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில், புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் அறிமுகம் எப்போது தாங்க? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக் குறித்த எந்தவொரு அறிவிப்பையும் இதுவரையில் வெளியிடவில்லை. மேலும் புதிய கிளாசிக் 350 பைக்கிற்கான முன்பதிவுகளை சில டீலர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஏற்று கொண்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் அறிமுகம் எப்போது தாங்க? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

அப்டேட் செய்யப்பட்ட கிளாசிக் 350 பைக் கடந்த சில மாதங்களாக பல முறை சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது. அப்போது கிடைக்கும் ஸ்பை படங்களின் மூலம் இந்த புதிய ராயல் என்பீல்டு பைக் பற்றிய பெரும்பான்மையான விபரங்கள் நமக்கு தெரிய வந்துவிட்டன.

புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் அறிமுகம் எப்போது தாங்க? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

பிராண்டின் அதிநவீன ஜே-ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் மற்றொரு மோட்டார்சைக்கிளாக விளங்கவுள்ள புதிய கிளாசிக் 350, புதிய ப்ளாட்ஃபாரத்தின் காரணமாக புதிய பவர்ட்ரெயின், சேசிஸ் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பை கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளில் இருந்து பெற்று வரவுள்ளது.

புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் அறிமுகம் எப்போது தாங்க? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

ஏனெனில் ராயல் என்பீல்டு மீட்டியோர் மாடலும் இதே ஜே-இயக்குதளத்தில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய இயந்திர பாகங்களுடன் 2021 கிளாசிக் 350 பைக் ஏகப்பட்ட புதிய பாகங்களையும், புதிய தோற்றத்தையும் பெற்றுவரவுள்ளதை சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் அறிந்திருந்தோம்.

புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் அறிமுகம் எப்போது தாங்க? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

இந்த வகையில் மீட்டியோர் 350 பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட பிராண்டின் ட்ரிப்பர் நாவிகேஷன் தொழிற்நுட்பத்தை புதிய கிளாசிக் பைக்கிலும் எதிர்பார்க்கின்றோம். ஆனால் சமீபத்தில் இந்த நாவிகேஷனை கொண்டில்லாத புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக் பொது இடத்தில் அடையாளம் காணப்பட்டு இருந்தது.

புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் அறிமுகம் எப்போது தாங்க? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

இதனால் புதிய கிளாசிக் 350 பல்வேறான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கின் தோற்றத்தை முற்றிலுமாக புதுமையானதாக எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் கிளாசிக் மாடலின் ரெட்ரோ தோற்றத்தை ராயல் என்பீல்டு நிறுவனம் விட்டு கொடுக்காது.

புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் அறிமுகம் எப்போது தாங்க? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

பைக்கின் தோற்றத்தில் மாற்றங்களாக, புதிய வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்கள் & ஒருங்கிணைக்கப்பட்ட டிஆர்எல்கள் மற்றும் புதிய ஸ்விட்ச்கியரை எதிர்பார்க்கிறோம். அதேநேரம் பெட்ரோல் டேங்க் மற்றும் பக்கவாட்டு பேனல்களில் வழங்கப்படும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் லோகோவின் டிசைன் சற்று மாற்றியமைக்கப்படலாம்.

புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் அறிமுகம் எப்போது தாங்க? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

எக்ஸாஸ்ட் குழாய் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளது. ஆனால் இவை எல்லாவற்றையும் விட புதிய கிளாசிக் 350 பைக்கில் மிக முக்கிய அம்சமாக, ஏற்கனவே கூறிய ட்ரிப்பர் நாவிகேஷன் தொழிற்நுட்பம் தான் வழங்கப்படவுள்ளது. இந்த தொழிற்நுட்பத்தின் மூலம் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷனை பைக்கில் வழங்கப்படும் சிறிய டிஎஃப்டி வண்ண திரையின் வாயிலாக பெறலாம்.

புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் அறிமுகம் எப்போது தாங்க? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

இதற்கு நீங்கள் உங்களது ஸ்மார்ட்போனை ராயல் என்பீல்டு செயலின் மூலமாக பைக்குடன் இணைக்க வேண்டும். இதனுடன் கிளாசிக் 350 பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பகுதியும் அப்கிரேட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் அறிமுகம் எப்போது தாங்க? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

மீட்டியோர் 350 பைக்கில் வழங்கப்படும் 349சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 6100 ஆர்பிஎம்-இல் 20.2 பிஎச்பி மற்றும் 4,000 ஆர்பிஎம்-இல் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகின்ற இந்த என்ஜின் தான் புதிய கிளாசிக் 350 பைக்கில் வழங்கப்பட உள்ளது.

Most Read Articles

English summary
New royal enfield classic 350 bike india launch date details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X