2021 ராயல்என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் மிக பெரிய அப்கிரேட் இதுதான்!! விரிவாக தெரிஞ்சிக்கோங்க!

2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் வழங்கப்படவுள்ள மீட்டர் கன்சோலை விவரிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதனை பற்றி இனி தொடர்ந்து பார்க்கலாம்.

2021 ராயல்என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் மிக பெரிய அப்கிரேட் இதுதான்!! விரிவாக தெரிஞ்சிக்கோங்க!

2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்துவதற்காக ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் புதிய மோட்டார்சைக்கிள்களை தயார்படுத்தி வருகிறது. இதில் புதிய 650சிசி க்ரூஸர், 350சிசி ஸ்க்ரம்ப்ளர் பைக்காக ஹண்டர் 350 மற்றும் அப்டேட் செய்யப்பட்ட கிளாசிக் 350 உள்ளிட்டவை அடங்குகின்றன.

2021 ராயல்என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் மிக பெரிய அப்கிரேட் இதுதான்!! விரிவாக தெரிஞ்சிக்கோங்க!

இவற்றில் புதிய தலைமுறை கிளாசிக் 350 இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்படலாம். இருப்பினும் இப்போதே புதிய கிளாசிக் 350 பைக்குகளை சோதனை ஓட்டங்களில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுப்படுத்தி வருகிறது.

2021 ராயல்என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் மிக பெரிய அப்கிரேட் இதுதான்!! விரிவாக தெரிஞ்சிக்கோங்க!

இந்த சோதனை ஓட்டங்களின் ஸ்பை படங்களின் மூலம் 2021 கிளாசிக் 350-இல் கொண்டுவரப்படவுள்ள அப்கிரேட்கள் சிலவற்றை அறிய முடிந்திருந்தது. இந்த வகையில் தற்போது இந்த 2021 பைக்கில் வழங்கப்படவுள்ள மீட்டர் பேனல் புதிய வீடியோ ஒன்றில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவின் மூலம் கடந்த ஆண்டு இறுதியில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட அதே ட்ரிப்பர் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன் சிஸ்டத்தை புதிய கிளாசிக் 350 பைக்கும் பெற்றுவரவுள்ளதை உறுதிப்படுத்தி கொள்ள முடிகிறது.

2021 ராயல்என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் மிக பெரிய அப்கிரேட் இதுதான்!! விரிவாக தெரிஞ்சிக்கோங்க!

மீட்டியோர் 350 பைக்கிற்கு அடுத்து சமீபத்தில் வெளியான புதிய தலைமுறை ஹிமாலயனிலும் இந்த நாவிகேஷன் வசதி கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரிப்பர் நாவிகேஷன் அமைப்பில் ட்ரிப்பர் டயல் இடதுபக்க கீழ்பகுதியில் வழங்கப்படுகிறது.

2021 ராயல்என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் மிக பெரிய அப்கிரேட் இதுதான்!! விரிவாக தெரிஞ்சிக்கோங்க!

இது தவிர்த்து சிறிய டிஜிட்டல் திரை ஒன்றையும் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்த திரை ஆனது பயண தூரம் மற்றும் எரிபொருள் அளவு உள்ளிட்ட விபரங்களை காட்டுவதாக உள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரின் பெரும்பான்மையான பகுதிகளை அனலாக் வேகமானி ஆக்கிரமித்துள்ளது.

2021 ராயல்என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் மிக பெரிய அப்கிரேட் இதுதான்!! விரிவாக தெரிஞ்சிக்கோங்க!

இவற்றை தவிர்த்து புதிய கிளாசிக் 350 பைக் டார்க் இராணுவ-பச்சை நிறத்திலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்கிற மிக பெரிய தகவலையும் இந்த வீடியோ தெரியப்படுத்துகிறது. மீட்டியோர் 350-ஐ போன்று புதிய ஜே ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய கிளாசிக் 350 பைக் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்றுள்ளது.

2021 ராயல்என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் மிக பெரிய அப்கிரேட் இதுதான்!! விரிவாக தெரிஞ்சிக்கோங்க!

புதிய ப்ளாட்ஃபாரத்தினால் மீட்டியோர் 350 பைக்கில் வழங்கப்பட்டுள்ள 349சிசி சிங்கிள்-சிலிண்டர் காற்று-குளிர்விப்பான் எஸ்.ஒ.எச்.சி என்ஜின் தான் புதிய கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளிலும் வழங்கப்பட உள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 6100 ஆர்பிஎம்-இல் 20.2 பிஎச்பி மற்றும் 4000 ஆர்பிஎம்-இல் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

2021 ராயல்என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் மிக பெரிய அப்கிரேட் இதுதான்!! விரிவாக தெரிஞ்சிக்கோங்க!

இதனுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மீட்டியோர் 350 பைக்கில் மற்ற ராயல் என்பீல்டு பைக்குகளை காட்டிலும் மிகவும் மென்மையான பயணத்தை உணர முடிகிறது. அதேபோல் 2021 கிளாசிக் 350-யிலும் மென்மையான கிடைக்கும் என்பது உறுதி.

2021 ராயல்என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் மிக பெரிய அப்கிரேட் இதுதான்!! விரிவாக தெரிஞ்சிக்கோங்க!

ஏற்கனவே கூறியதுபோல், இந்த 2021ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.60 லட்சத்தில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

English summary
New Royal Enfield Classic 350 instrument cluster details leaked. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X