Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் பின்பக்கம் இப்படிதான் இருக்கும் போல!! செம்ம ஸ்டைலிஷாக இருக்கு...
புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் பின்பக்க எல்இடி விளக்குகள் புதிய ஸ்பை படங்களின் மூலம் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சென்னையை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனம் மீட்டியோர் 350 பைக்கின் மூலம் இந்தியாவில் அதீத வெற்றியை ருசித்து வருகிறது. இது வெறும் ஆரம்பம் தான்.
ஏனெனில் இந்த நிறுவனம் அடுத்ததாக புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கை அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருகிறது. ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு புதிய பைக்கை அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளதால் இதன் அறிமுகத்தை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

அதற்கு மத்தியில் புதிய கிளாசிக் 350 பைக்கின் சோதனை ஓட்டங்கள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முந்தைய ஸ்பை படங்களின் மூலம் பைக்கின் இயக்க சூழலை மேம்படுத்துவதற்காக காஸ்மெட்டிக் மாற்றங்களை அதிகளவில் வழங்காமல் கிளாசிக் 350 பைக்கின் ரெட்ரோ தோற்றத்தை தயாரிப்பு நிறுவனம் மேம்படுத்தியுள்ளது என்பதை அறிய முடிந்தது.

இதனால் தற்போதைய வட்ட வடிவிலான ஹலோஜன் ஹெட்லேம்ப்கள், கண்ணீர்த்துளி வடிவிலான பெட்ரோல் டேங்க், க்ரோம்-ஆல் சூழப்பட்ட பின்பக்க பார்க்க உதவும் கண்ணாடிகள், க்ரோம் தட்டு பொருத்தப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய்கள் மற்றும் பரந்த பின்பக்க ஃபெண்டர்கள் உள்ளிட்டவற்றின் தோற்றத்தில் பெரிய அளவில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் மோட்டார்பீம் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள ஸ்பை வீடியோவின் மூலம் பைக்கின் பின்பக்கத்தில் வழங்கப்படும் வட்ட வடிவிலான எல்இடி டெயில்லைட் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்களை தெளிவாக பார்க்க முடிகிறது.
இவ்வாறான டெயில்லைட் அமைப்பை கிளாசிக் 350 பைக் பெறுவது இதுவே முதல்முறையாகும். இதனுடன் இந்த புதிய 350சிசி பைக் ஹெட்லேம்பை சுற்றிலும் எல்இடி டிஆர்எல்-ஐயும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளவுப்பட்ட இருக்கைகள் புதியதாகவும், கூடுதல் சவுகரியத்திற்காக கூடுதல் குஷின் செய்யப்பட்டிருக்கும்.

பின்பக்கத்தில் பின் பயணிக்கான க்ராப் ரெயில் நன்கு உயரமானதாக வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் புதிய ஹேண்டில்பார் க்ரிப்கள், ஸ்விட்ச்கியர்கள் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் துணை-டிஜிட்டல் திரை உடன் புதிய கிளாசிக் 350 பைக் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய மீட்டியோர் 350-இல் அறிமுகமான பயணத்திற்கான நாவிகேஷன் சிஸ்டம் இனி வரும் ராயல் என்பீல்டின் தயாரிப்புகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த வகையில் இந்த வசதியினை புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கும் பெறலாம்.
இந்த நாவிகேஷன் சிஸ்டம் மட்டுமின்றி பெரும்பான்மையான பாகங்களை மீட்டியோர் 350-இல் இருந்து பெறவுள்ள புதிய கிளாசிக் 350 பைக் சிங்கிள் டவுண்ட்யுப் ஃப்ரேமிற்கு பதிலாக இரட்டை-க்ராடல் சேசிஸில் வெளிவரவுள்ளது.
சமீபத்திய மீட்டியோர் 350-இல் அறிமுகமான பயணத்திற்கான நாவிகேஷன் சிஸ்டம் இனி வரும் ராயல் என்பீல்டின் தயாரிப்புகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த வகையில் இந்த வசதியினை புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கும் பெறலாம்.

2021 கிளாசிக் 350 பைக்கில் முற்றிலும் புதிய 349சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படவுள்ளது. இந்த என்ஜின் தற்போதைய 346சிசி என்ஜினை காட்டிலும் 1 பிஎச்பி மற்றும் 1 என்எம் டார்க் திறன் அதிகமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும்.
இதனுடன் புதிய 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட உள்ளது. ஜாவா 42, பெனெல்லி இம்பெரீயல் மற்றும் ஹோண்டா ஹைனெஸ் 350 போட்டியாக விளங்கும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் புதிய தலைமுறை அப்கிரேடை வருகிற ஜூன் மாதத்தில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.