Just In
- 2 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 3 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 4 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 4 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
'கவலைப்படதீங்க.. கொரோனாவை கட்டுப்படுத்த எல்லா உதவிகளையும் நாங்க செய்கிறோம்'..சீனா அசத்தல் அறிவிப்பு
- Sports
அப்படியே நான் ஷாக்காயிட்டேன்... சாரி கேட்ட விராட் கோலி... என்ன இப்படி பண்ணிட்டாரு கிங் கோலி?
- Finance
ஓலாவின் பிரம்மாண்ட E-scooter திட்டம்.. 1 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்டுகள்.. ஜூலையில் அறிமுகம்..!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அலாய் சக்கரங்களுடன் தயாரிக்கப்படும் 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350!! புதியதாக ஏகப்பட்ட அப்கிரேட்கள்...
வழக்கத்திற்கு மாறாக அலாய் சக்கரங்கள் உடன் புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தண்டர்பேர்டு 350 பைக்கிற்கு மாற்றாக கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் கொண்டுவரப்பட்ட மீட்டியோர் 350 பைக்கிற்கு நல்லப்படியான வரவேற்பு அதன் அறிமுகத்தில் இருந்து கிடைத்து வருகிறது.

இதற்கு மிக முக்கிய காரணமாக மீட்டியோர் 350 பைக்கின் வடிவமைப்பிற்கு பயன்படுத்தப்பட்ட புதிய ஜே ப்ளாட்ஃபாரத்தை கூறலாம். இதனால் தான் இதே புதிய ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் புதிய தலைமுறை கிளாசிக் 350 மற்றும் ஹண்டர் 350 என சில 350சிசி பைக்குகளை அறிமுகப்படுத்த ராயல் என்பீல்டு நிறுவனம் தயாராகி வருகிறது.

இதில் முதலில் வரப்போவது இரண்டாம் தலைமுறை கிளாசிக் 350 பைக் ஆகும். புதிய ஜே ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படுவதினால் வழக்கமான ஒற்றை கீழ்நிலை சேசிஸிற்கு மாற்றாக இரட்டை தொட்டில் சட்டகத்திற்கு அப்கிரேடாக ராயல் என்பீல்டு நிறுவனம் நகர்ந்துள்ளது.

இதன் விளைவாக, புதிய கிளாசிக் 350 பைக்கின் ஹேண்ட்லிங் மேம்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த நிலையில் தான் தற்போது காடிவாடி செய்திதளம் மூலமாக புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கின் சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

இந்த படங்களை வைத்து பார்க்கும்போது வெளிப்புறத்தில் இந்த பைக், வட்ட வடிவிலான பின் இருக்கை, பின் இருக்கை பயணி பிடித்து கொள்வதற்கு பின்பக்கத்தில் புதிய பிடிப்பான்கள் மற்றும் க்ரோம் தொடுதல்களுடன் அப்டேட் செய்யப்பட்ட பின்பக்க ஹெட்லைட் & இண்டிகேட்டர் உள்ளிட்டவற்றுடன் சிறிய அளவிலான டிசைன் மாறுபாடுகளை பெற்றுள்ளதை அறிய முடிகிறது.

இவை எல்லாத்தையும் விட முக்கிய அப்கிரேட் ஆக இந்த சோதனை கிளாசிக் 350 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள அலாய் சக்கரங்களை சொல்லலாம். இவற்றுடன் ட்யுப்லெஸ் டயர்களும் கூடுதல் தேர்வாக வழங்கப்படலாம்.

அதேபோல் 300மிமீ முன் டிஸ்க்கும், 270மிமீ பின்பக்க டிஸ்க் ப்ரேக்கும் பொசிஷன் மாற்றப்பட்டுள்ளன. திருத்தியமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் கூகுளின் மூலம் செயல்படும் ட்ரிப்பர் நாவிகேஷன் சிஸ்டத்திற்கென தனியாக பேட்-ஐ கொண்டுள்ளது.

மீட்டியோர் 350 பைக்கின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ட்ரிப்பர் நாவிகேஷன் சிஸ்டம் அதன்பின் புதிய தலைமுறை ஹிமாலயனில் வழங்கப்பட்டது. 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் சற்று திருத்தம் செய்யப்பட்ட 349சிசி, சிங்கிள்-சிலிண்டர் காற்று-குளிர்விப்பான் என்ஜின் பொருத்தப்பட உள்ளது.

மீட்டியோர் 350 பைக்கிலும் வழங்கப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 19.2 எச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இதன் உடன் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.