ராயல் என்பீல்டின் புதிய 350சிசி பைக் பொது சாலையில் சோதனை!! ஹோண்டா சிபி350ஆர்எஸ்-இன் போட்டி மாடல்...

ஹோண்டாவின் சிபி350ஆர்எஸ் பைக்கிற்கு போட்டியாக வெளிவரவுள்ள ராயல் என்பீல்டு ஹண்டர் பைக் ஒன்று பொது சாலையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் என்பீல்டின் புதிய 350சிசி பைக் பொது சாலையில் சோதனை!! ஹோண்டா சிபி350ஆர்எஸ்-இன் போட்டி மாடல்...

அடுத்த 7 வருடங்களுக்கு 3 மாதத்திற்கு ஒரு பைக் என அறிமுகப்படுத்த ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே கூறியிருந்தோம். இதில் பிரபலமான கிளாசிக் 350 பைக்கின் புதிய ரோட்ஸ்டர் வெர்சனும் ஒன்று.

ராயல் என்பீல்டின் புதிய 350சிசி பைக் பொது சாலையில் சோதனை!! ஹோண்டா சிபி350ஆர்எஸ்-இன் போட்டி மாடல்...

நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி இந்த பைக்கின் பெயர் ஹண்டர் என அழைக்கப்படலாம். இந்த நிலையில் இந்த ரோட்ஸ்டர் பைக் மீண்டும் சோதனை ஓட்டத்தின்போது ரஷ்லேன் செய்திதளம் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய 350சிசி பைக் பொது சாலையில் சோதனை!! ஹோண்டா சிபி350ஆர்எஸ்-இன் போட்டி மாடல்...

ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம் என்பதுபோல் காட்சியளிக்கும் இந்த சோதனை ஹண்டர் பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் & பின்பக்கத்தை காட்டும் கண்ணாடி, கண்ணீர்த்துளி வடிவிலான டர்ன் சிக்னல் விளக்குகள், காம்பெக்ட் இருக்கை அமைப்பு, மேற்புறமாக வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் நறுக்கப்பட்ட பின்புற பகுதி உள்ளிட்டவை உள்ளன.

ராயல் என்பீல்டின் புதிய 350சிசி பைக் பொது சாலையில் சோதனை!! ஹோண்டா சிபி350ஆர்எஸ்-இன் போட்டி மாடல்...

இவற்றில் பெரும்பான்மையான பாகங்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்படலாம். அதேநேரம் ஒற்றை-நிறம் மற்றும் இரட்டை-நிறத்தேர்வுகளில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஹண்டர் 350 பைக்கில் ஓட்டுனர் இருக்கைக்கு சரியாக நேராக கீழ்பகுதியில் கால் வைக்கும் பகுதி வழங்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய 350சிசி பைக் பொது சாலையில் சோதனை!! ஹோண்டா சிபி350ஆர்எஸ்-இன் போட்டி மாடல்...

இதில் இருந்து இது ஒரு பக்கா ரோட்ஸ்டர் பைக் என்பது தெரிய வருகிறது. இதன் டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலில் வட்ட வடிவிலான ஸ்பீடோமீட்டர் மற்றும் செவ்வகம் வடிவிலான பல தகவல்களை வழங்கக்கூடிய திரை உள்ளிட்டவை உள்ளன.

ராயல் என்பீல்டின் புதிய 350சிசி பைக் பொது சாலையில் சோதனை!! ஹோண்டா சிபி350ஆர்எஸ்-இன் போட்டி மாடல்...

மீட்டியோர் 350 மற்றும் புதிய தலைமுறை ஹிமாலயன் பைக்குகளை போன்று இந்த பைக்கும் ட்ரிப்பர் நாவிகேஷன் வசதியினை பெறலாம். அதேபோல் மீட்டியோர் 350 பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 349சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை ஹண்டர் 350 பைக் பெறவுள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய 350சிசி பைக் பொது சாலையில் சோதனை!! ஹோண்டா சிபி350ஆர்எஸ்-இன் போட்டி மாடல்...

அதிகப்பட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த புதிய என்ஜினை பெறுவதன் மூலமாக கிளாசிக் 350 பைக்கை காட்டிலும் மென்மையான இயக்கத்தையும், மிகவும் குறைவான அதிர்வையும் புதிய ஹண்டர் பைக் வழங்கும் என கூறப்படுகிறது.

ராயல் என்பீல்டின் புதிய 350சிசி பைக் பொது சாலையில் சோதனை!! ஹோண்டா சிபி350ஆர்எஸ்-இன் போட்டி மாடல்...

மீட்டியோர் 350 பைக்கிற்கு அடுத்து ராயல் என்பீல்டின் புதிய மாடுலர் ஜே ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படவுள்ள ஹண்டர் 350 பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்பாக டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் இரட்டை ஷாக் அப்சார்களும், ப்ரேக்கிங் அமைப்பாக இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் இரட்டை-சேனல் ஏபிஎஸ் உடன் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Royal Enfield Hunter Spied In Chennai, Honda CB350RS Rival.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X