போட்டி போட்டு புக்கிங் செய்த இந்தியர்கள்... சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் முதல் லாட் விற்று தீர்ந்தது!

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஓரிரு நாட்களிலேயே முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து யூனிட்டுகளுக்கும் புக்கிங் செய்யப்பட்டுவிட்டது. இதனால், புக்கிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 போட்டி போட்டு புக்கிங் செய்த இந்தியர்கள்... சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் முதல் லாட் விற்று தீர்ந்தது!

உலக அளவில் மிகவும் பிரபலமான சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் அண்மையில் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடல் நேற்றுமுன்தினம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

 போட்டி போட்டு புக்கிங் செய்த இந்தியர்கள்... சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் முதல் லாட் விற்று தீர்ந்தது!

இந்த நிலையில், முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து சுஸுகி ஹயபுசா பைக்குகளுக்கும் இந்தியாவில் முன்பதிவு முடிந்துவிட்டதாக கார் அண்ட் பைக் தளத்தின் மூலமாக செய்தி வெளியாகி இருக்கிறது.

 போட்டி போட்டு புக்கிங் செய்த இந்தியர்கள்... சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் முதல் லாட் விற்று தீர்ந்தது!

முதல் லாட்டில் 101 சுஸுகி ஹயபுசா பைக்குகள் இந்தியாவுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இவை அனைத்திற்கும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துவிட்டனர். இதனால், புக்கிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 போட்டி போட்டு புக்கிங் செய்த இந்தியர்கள்... சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் முதல் லாட் விற்று தீர்ந்தது!

புதிய தலைமுறை சுஸுகி ஹயபுசா பைக் ரூ.16.40 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பழைய மாடலைவிட விலை ரூ.3 லட்சம் வரை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், இந்த பைக்கிற்கு பெரும் ரசிக பட்டாளம் கோடீஸ்வரர்கள் வட்டாரத்தில் உள்ளது.

 போட்டி போட்டு புக்கிங் செய்த இந்தியர்கள்... சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் முதல் லாட் விற்று தீர்ந்தது!

இதனை மெய்ப்பிக்கும் விதமாக, புக்கிங்கில் அசத்தி இருக்கிறது புதிய ஹயபுசா சூப்பர் பைக். இந்த பைக் 13 ஆண்டுகளுக்கு பின்னர் அப்டேட் செய்யப்பட்டு வந்தததும், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி இருந்தது.

 போட்டி போட்டு புக்கிங் செய்த இந்தியர்கள்... சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் முதல் லாட் விற்று தீர்ந்தது!

வடிவமைப்பில் சில முக்கிய மாற்றங்களுடன் சிறந்த ஏரோடைனமிக்ஸ் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் 4 சிலிண்டர்கள் கொண்ட 1,340 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

 போட்டி போட்டு புக்கிங் செய்த இந்தியர்கள்... சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் முதல் லாட் விற்று தீர்ந்தது!

பழைய மாடலைவிட பவர் 10 பிஎச்பி வரையிலும், டார்க் திறன் 5 நியூட்டன் மீட்டர் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. புதிய மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருப்பதால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த பைக் மணிக்கு 299 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 போட்டி போட்டு புக்கிங் செய்த இந்தியர்கள்... சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் முதல் லாட் விற்று தீர்ந்தது!

புதிய சுஸுகி ஹயபுசா பைக்கில் 6 ஆக்சிஸ் இனர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சுஸுகி இன்டெலிஜென்ட் ரைட் சிஸ்டம் தொழில்நுட்பத்துடன் 3 விதமான ரைடிங் மோடுகளில் இயக்கும் வாய்ப்பை வழங்குகிறது. ஆன்ட்டி லிஃப்ட் கன்ட்ரோல், எஞ்சின் பிரேக் கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

 போட்டி போட்டு புக்கிங் செய்த இந்தியர்கள்... சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் முதல் லாட் விற்று தீர்ந்தது!

புதிய சுஸுகி ஹயபுசா பைக்கின் டிசைன் பாரம்பரியத்தை பரைசாற்றும் வகையில் சிறிய மாறுதல்களுடன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எல்இடி ஹெட்லைட், இண்டிகேட்டர், பொசிஷன் விளக்குகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

Most Read Articles

English summary
According to report, New Suzuki Hayabusa First lot Sold Out In India.
Story first published: Wednesday, April 28, 2021, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X