ஹயபுசா சூப்பர் பைக் சுஸுகி இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது... விரைவில் அறிமுகமாகிறது

சூப்பர் பைக் பிரியர்கள் மத்தியில் ஆவலைத் தூண்டி இருக்கும் புதிய ஹயபுசா பைக் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், அறிமுகம் குறித்தும் உறுதியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 சுஸுகி ஹயபுசா இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது... விரைவில் அறிமுகம்!

உலக அளவில் மிகவும் பிரபலமான சூப்பர் பைக் மாடல்களில் ஒன்றாக சுஸுகி ஹயபுசா இருந்து வருகிறது. கடந்த இரு தசாப்தங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டபோது, அந்த காலத்தின் உலகின் அதிவேக தயாரிப்பு நிலை பைக் மாடல் என்ற பெருமை பெற்றதால், உலக அளவில் பெரிய அளவிலான ரசிக பட்டாளத்தையும், வாடிக்கையாளர் வட்டத்தையும் பெற்றது.

 சுஸுகி ஹயபுசா இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது... விரைவில் அறிமுகம்!

இந்த நிலையில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் சுஸுகி ஹயபுசா பைக் புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் நவீன தொழில்நுட்பங்களை கலந்து கட்டிய மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

 சுஸுகி ஹயபுசா இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது... விரைவில் அறிமுகம்!

கடந்த பிப்ரவரி மாதம் சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட இந்த புதிய தலைமுறை சுஸுகி ஹயபுசா பைக் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, சுஸுகி இந்தியா இணையதளப் பக்கத்தில் புதிய ஹயபுசா பைக் விற்பனைக்கு கொண்டு வருவதற்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

 சுஸுகி ஹயபுசா இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது... விரைவில் அறிமுகம்!

மேலும், இந்த மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதும் உறுதியாகி இருக்கிறது. இதனால், இந்த புதிய பைக்கை வாங்க இந்திய கோடீஸ்வர வாடிக்கையாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

 சுஸுகி ஹயபுசா இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது... விரைவில் அறிமுகம்!

புதிய சுஸுகி ஹயபுசா பைக்கில் முந்தைய மாடல்களைவிட மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவப்படி, டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், பழைய பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையிலேயே தோற்றமளிக்கிறது. 550 புதிய உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

 சுஸுகி ஹயபுசா இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது... விரைவில் அறிமுகம்!

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் அலங்காரம், வேறுபட்ட டிசைனில் ஏர் வென்ட் அமைப்பு ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

 சுஸுகி ஹயபுசா இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது... விரைவில் அறிமுகம்!

புதிய மாடலில் டிஜிட்டல் மற்றும் அனலாக் டயல்கள் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் மல்டி இன்ஃபர்மேஷன் திரை மூலமாக பல்வேறு தகவல்களை பெற முடியும்.

 சுஸுகி ஹயபுசா இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது... விரைவில் அறிமுகம்!

க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆக்டிவ் ஸ்பீடு லிமிட்டர், பை டைரக்ஷனல் குயிக் ஷிஃப்ட்டர், டிராக்ஷன் கன்ட்ரோல், ஆன்ட்டி லிஃப்ட் கன்ட்ரோல், எஞ்சின் பிரேக் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 6 ரைடிங் மோடுகள் ஆகிய தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன.

 சுஸுகி ஹயபுசா இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டது... விரைவில் அறிமுகம்!

புதிய சுஸுகி ஹயபுசா பைக்கில் 1,304சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பழைய மாடலைவிட எஞ்சின் சக்தி 10 பிஎச்பி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. குயிக் ஷிஃப்டர், ரைடு பை ஒயர் தொழில்நுட்பம் ஆகியவையும் உள்ளன.

Most Read Articles

English summary
The 2021 Suzuki Hayabusa will be launched in India in April 2021. Suzuki Motorcycle India has revealed on Twitter that the much-awaited next-gen Hayabusa will be launched in India later this month. The brand hasn't mentioned the exact date of the launch but has just said that the new Hayabusa is launching this month.
Story first published: Saturday, April 10, 2021, 16:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X