2021 சுஸுகி ஹயபுஸா பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! பைக் வேற லெவலுக்கு மாறிவிடும்!

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் அதன் சமீபத்திய அறிமுகமான ஹயபுஸா பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ள ஆக்ஸஸரீகளை பட்டியலிட்டுள்ளது. அவற்றை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 சுஸுகி ஹயபுஸா பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! பைக் வேற லெவலுக்கு மாறிவிடும்!

சுஸுகி நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2021 ஹயபுஸாவை உலகளவில் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியிட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் இந்த சூப்பர் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது.

2021 சுஸுகி ஹயபுஸா பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! பைக் வேற லெவலுக்கு மாறிவிடும்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கப்பட்டதால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட முதல் தொகுப்பு ஹயபுஸா பைக்குகள் முற்றிலுமாக விற்று தீர்ந்துள்ளதை நமது செய்திதளத்தில் கூட குறிப்பிட்டு இருந்தோம்.

2021 சுஸுகி ஹயபுஸா பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! பைக் வேற லெவலுக்கு மாறிவிடும்!

இதன் காரணமாக இரண்டாம் தொகுப்பிற்கான அறிவிப்பு வெளியாகும் வரையில் ஹயபுஸா பைக்குகளுக்கான முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தற்போது இந்த சூப்பர் பைக்கிற்கான அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.

2021 சுஸுகி ஹயபுஸா பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! பைக் வேற லெவலுக்கு மாறிவிடும்!

இந்த ஆக்ஸஸரீ லிஸ்ட்டில் அடங்கும் பின் இருக்கைக்கான தலையணை புதிய மூன்றாம் தலைமுறை ஹயபுஸாவை முன்பதிவு செய்த முதல் சில வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

2021 சுஸுகி ஹயபுஸா பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! பைக் வேற லெவலுக்கு மாறிவிடும்!

ஹயபுஸாவில் நிலையாகவே எதிர்காற்று தடுப்பு கண்ணாடி வழங்கப்படுகிறது. இருப்பினும் கூடுதல் ஆக்ஸஸரீகளில் இதனை காட்டிலும் 38மிமீ நீளமான விண்ட்ஸ்க்ரீன் சேர்க்கப்பட்டுள்ளது.

2021 சுஸுகி ஹயபுஸா பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! பைக் வேற லெவலுக்கு மாறிவிடும்!

இதனுடன் லக்கேஜ் எடுத்து செல்ல உதவியாக ஹூக், சக்கர டிகால்கள், பின்பக்கத்தை காட்டும் கண்ணாடியின் மூடிக்கான கார்பன் ஃபைபர் பேட்டர்ன் டிசைன் மற்றும் ஹயபுஸா லோகோ & சிவப்பு தையல்களுடன் இருக்கை கவர் உள்ளிட்டவையும் கூடுதல் தேர்வாக வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

2021 சுஸுகி ஹயபுஸா பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! பைக் வேற லெவலுக்கு மாறிவிடும்!

பெட்ரோல் டேங்க் பகுதியில் கீறல்களில் இருந்து பாதுகாக்கும் ஸ்டிக்கர்களுடன் டேங்க் பேட்களையும் ஆக்ஸஸரீயாக பெறலாம். இந்த ஆக்ஸஸரீகளுக்கான விலைகளை சுஸுகி நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை.

2021 சுஸுகி ஹயபுஸா பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! பைக் வேற லெவலுக்கு மாறிவிடும்!

இவற்றுடன் புதிய தலைமுறை ஹயபுஸா பைக்கிற்கான அடிப்படை உத்திரவாத காலத்தை நீட்டித்து கொள்ளும் வசதியையும் வாடிக்கையாளர்களுக்கு சுஸுகி வழங்கியுள்ளது. இதற்கும் கூடுதல் பணம் செலுத்த வேண்டும்.

2021 சுஸுகி ஹயபுஸா பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! பைக் வேற லெவலுக்கு மாறிவிடும்!

புதிய தலைமுறை ஹயபுஸா பைக்கில் 1,340சிசி, ஃப்யுல்-இன்ஜெக்டட், லிக்யுடு-கூல்டு, இன்லைன்-4 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9,700 ஆர்பிஎம்-இல் 187 பிஎச்பி மற்றும் 7,000 ஆர்பிஎம்-இல் 150 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Suzuki Motorcycle India lists down Hayabusa's optional accessories online.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X