16 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுஸுகி ஹயபுசா பைக்கிற்காக வெயிட் பண்ணீட்டு இருக்கீங்களா? செம ஹேப்பி நியூஸ்!

சுஸுகி ஹயபுசா பைக்கிற்காக காத்து கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

16 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுஸுகி ஹயபுசா பைக்கிற்காக வெயிட் பண்ணீட்டு இருக்கீங்களா? செம ஹேப்பி நியூஸ்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த புதிய ஹயபுசா சூப்பர் பைக்கை சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் கடந்த மாதம் இங்கு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட முதல் லாட் விற்பனையாகி விட்டது.

16 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுஸுகி ஹயபுசா பைக்கிற்காக வெயிட் பண்ணீட்டு இருக்கீங்களா? செம ஹேப்பி நியூஸ்!

எனவே புதிய ஹயபுசா பைக்கின் இரண்டாவது லாட்டை சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வரவுள்ளது. அனேகமாக நடப்பாண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் இரண்டாவது லாட் வரலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக கார்அண்டுபைக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

16 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுஸுகி ஹயபுசா பைக்கிற்காக வெயிட் பண்ணீட்டு இருக்கீங்களா? செம ஹேப்பி நியூஸ்!

மிகவும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதால், புதிய ஹயபுசா பைக்கின் இரண்டாவது லாட்டை சுஸுகி நிறுவனம் வெகு விரைவாகவே இந்தியாவிற்கு கொண்டு வரவுள்ளது. தற்போதைய நிலையில் 2021 சுஸுகி ஹயபுசா சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் 16.40 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், இந்தியா) என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

16 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுஸுகி ஹயபுசா பைக்கிற்காக வெயிட் பண்ணீட்டு இருக்கீங்களா? செம ஹேப்பி நியூஸ்!

எனினும் இரண்டாவது பேட்ஜ் இந்தியாவிற்கு வரும்போது விலை மாற்றியமைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 சுஸுகி ஹயபுசா மோட்டார்சைக்கிளானது, கருப்பு/கோல்டு, சில்வர்/சிகப்பு மற்றும் வெள்ளை/நீலம் என மொத்தம் மூன்று வண்ண தேர்வுகளில் கிடைக்கிறது. இதில், வெள்ளை/நீலம் வண்ண தேர்வைதான் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

16 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுஸுகி ஹயபுசா பைக்கிற்காக வெயிட் பண்ணீட்டு இருக்கீங்களா? செம ஹேப்பி நியூஸ்!

புதிய 2021 சுஸுகி ஹயபுசா மோட்டார்சைக்கிளின் டிசைனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய பைக்கில் தற்போது லிக்யூட்-கூல்டு, 1,340 சிசி, இன்லைன் நான்கு-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 9,700 ஆர்பிஎம்மில் 187.7 பிஎச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்மில் 150 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

16 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுஸுகி ஹயபுசா பைக்கிற்காக வெயிட் பண்ணீட்டு இருக்கீங்களா? செம ஹேப்பி நியூஸ்!

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்லிப் மற்றும் அஸிஸ்ட் கிளட்ச் ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. சுஸுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு கிடையாது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

16 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுஸுகி ஹயபுசா பைக்கிற்காக வெயிட் பண்ணீட்டு இருக்கீங்களா? செம ஹேப்பி நியூஸ்!

குறிப்பாக கவர்ச்சிகரமான விலை மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. எனினும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது, சுஸுகி நிறுவனம் வெறும் 101 ஹயபுசா மோட்டார்சைக்கிள்களை மட்டுமே கொண்டு வந்தது. அவை அனைத்துமே உடனடியாக விற்று தீர்ந்து விட்டன.

16 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுஸுகி ஹயபுசா பைக்கிற்காக வெயிட் பண்ணீட்டு இருக்கீங்களா? செம ஹேப்பி நியூஸ்!

எனவே கூடிய விரைவில் புதிய ஹயபுசா மோட்டார்சைக்கிளின் இரண்டாவது லாட்டை சுஸுகி நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டு வரவுள்ளது. புதிய சுஸுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள்களுக்காக காத்திருக்கும் இந்தியாவை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
New Suzuki Hayabusa Superbike Second Batch Delivery Timeline. Read in Tamil
Story first published: Monday, May 31, 2021, 23:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X