அப்படிப்போடு... இந்த சுஸுகி பைக் மீண்டும் வருகிறதா?! 90ஸ் கிட்ஸின் ஃபேவரட் பைக்...

உலகளவில் பிரபலமாக இருந்த ஹயபுஸா மோட்டார்சைக்கிளை சுஸுகி நிறுவனம் மீண்டும் கொண்டுவரவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

அப்படிப்போடு... இந்த சுஸுகி பைக் மீண்டும் வருகிறதா?! 90ஸ் கிட்ஸின் ஃபேவரட் பைக்...

சுஸுகி ஹயபுஸா ஜிஎஸ்எக்ஸ்1300ஆர், இந்தி படம் ‘தூம்' மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமான மோட்டார்சைக்கிள். இருப்பினும் இதன் விற்பனை நிறுத்தப்பட்டு கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.

அப்படிப்போடு... இந்த சுஸுகி பைக் மீண்டும் வருகிறதா?! 90ஸ் கிட்ஸின் ஃபேவரட் பைக்...

ஐப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனம் காற்று இயக்கவியலுக்கு இணக்கமாக வடிவமைத்த மோட்டார்சைக்கிள்களுள் ஒன்று ஹயபுஸா எனலாம். இதில் பொருத்தப்பட்ட என்ஜின் அதிகப்பட்சமாக 200 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது.

அப்படிப்போடு... இந்த சுஸுகி பைக் மீண்டும் வருகிறதா?! 90ஸ் கிட்ஸின் ஃபேவரட் பைக்...

மாசு உமிழ்வு மற்றும் பாதுகாப்பில் கடுமையாக கொண்டுவரப்பட்ட விதிகள் இதன் விற்பனை நிறுத்தத்திற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியா தவிர்த்து சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனைக்கு கிடைக்கும் ஹயபுஸாவின் புதிய தலைமுறையை விற்பனைக்கு கொண்டுவர சுஸுகி திட்டமிட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் மூலம் பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மாற்றப்படவில்லை என்பதை அறிய முடிகிறது. ஆனால் கூடுதல் தகவல்களை வழங்கும் விதத்தில் இது அப்கிரேட் செய்யப்படலாம்.

அப்படிப்போடு... இந்த சுஸுகி பைக் மீண்டும் வருகிறதா?! 90ஸ் கிட்ஸின் ஃபேவரட் பைக்...

சுஸுகி ஹயபுஸா அடையாளமே அதன் அதிகப்பட்ச 300kmph வேகம்தான். இதனால் இதில் மாற்றம் இருக்காது. மேலும் புதிய தலைமுறை அப்கிரேடாக பைக்கின் தோற்றத்தில் சிறிய சிறிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதை இந்த டீசர் வீடியோவின் மூலம் ஓரளவிற்கு பார்க்க முடிகிறது.

அப்படிப்போடு... இந்த சுஸுகி பைக் மீண்டும் வருகிறதா?! 90ஸ் கிட்ஸின் ஃபேவரட் பைக்...

சுஸுகியின் தாயகமான ஜப்பான் உள்பட சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னதாக வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி உலகளவில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு புதிய தலைமுறை ஹயபுஸா காட்சிப்படுத்தப்படவுள்ளது.

அப்படிப்போடு... இந்த சுஸுகி பைக் மீண்டும் வருகிறதா?! 90ஸ் கிட்ஸின் ஃபேவரட் பைக்...

நம் நாட்டு சந்தைக்கு இந்த 2021ன் இறுதியில் புதிய சுஸுகி ஹயபுஸா பைக் விற்பனக்கு கொண்டுவரப்படவுள்ளன. புதிய மாசு உமிழ்வு விதிகளினால் 2021 ஹயபுஸாவில் யூரோ5/ பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்படலாம். இதனுடன் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படவுள்ளது.

Most Read Articles

English summary
Suzuki Breathes Life Back Into The Iconic Hayabusa
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X