புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கின் வீடியோ, விபரங்கள் கசிந்தது!

புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னதாக, விளம்பர வீடியோ மற்றும் விபரங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கின் வீடியோ, விபரங்கள் கசிந்தது!

உலக அளவில் சூப்பர் பைக் பிரியர்களின் மனம் கவர்ந்த மாடலாக சுஸுகி ஹயபுசா இருந்து வருகிறது. கடந்த இரு தசாப்தங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டபோது, அந்த காலத்தின் உலகின் அதிவேக தயாரிப்பு நிலை மாடல் என்ற பெருமையை பெற்றது. அந்த நாள் முதல் சுஸுகி ஹயபுசாவுக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் இருந்து வருகிறது.

புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கின் வீடியோ, விபரங்கள் கசிந்தது!

எனினும், போட்டியாளர்களை ஒப்பிடுகையில் அதிக அப்டேட்டுகளை பெறவில்லை என்ற புகார் இருந்து வந்தது. இதனை போக்கும் விதத்தில், பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வரும் 5ந் தேதி புதிய ஹயபுசா பைக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ள நிலையில், இதற்காக தயாரிக்கப்பட்ட வீடியோ விளம்பரம் இணையதளங்களில் கசிந்துவிட்டன. இந்த வீடியோவின் மூலமாக, இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் சில முக்கிய விஷயங்களும் தெரிய வந்துள்ளது. பாரம்பரிய டிசைன் தாத்பரியங்களின் அடிப்படையில் பல புதிய டிசைன் மாற்றங்களுடன் வர இருக்கிறது.

புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கின் வீடியோ, விபரங்கள் கசிந்தது!

புதிய சுஸுகி ஹயபுசா பைக்கில் இதுவரை 1,340சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், புதிய மாடலில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1,450சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய எஞ்சின் மூலமாக, முந்தைய மாடல்களைவிட அதிக சக்திவாய்ந்த மாடலாக ஹயபுசா வருவது தெரிய வந்துள்ளது.

புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கின் வீடியோ, விபரங்கள் கசிந்தது!

மேலும், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு புதிதாக இடம்பெற்றிருக்கிறது. அனலாக் டாக்கோமீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர், இரண்டு டயல்களுக்கும் நடுவில் மல்டி இன்ஃபர்மேஷன் திரை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கின் வீடியோ, விபரங்கள் கசிந்தது!

புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கில் பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்ட்டர் வசதி, டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், வீலி கன்ட்ரோல் சிஸ்டம், கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 6 ஆக்சிஸ் இனர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட் ஆகியவை கொடுக்கப்பட உள்ளன.

புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கின் வீடியோ, விபரங்கள் கசிந்தது!

இந்த பைக்கின் முழுமையான விபரங்கள் வரும் 5ந் தேதி வெளியிடப்பட உள்ளது. சூப்பர் பைக் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக சுஸுகி ஹயபுசா தொடர்ந்து தன்னை தக்க வைத்துக் கொள்ளும் அனைத்து அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
2021 Suzuki Hayabusa video leaked online ahead of global premier.
Story first published: Wednesday, February 3, 2021, 13:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X