கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ட்ரையம்ஃப் போனிவில் பைக் மாடல்கள் அறிமுகம்!

அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய ட்ரையம்ஃப் போனிவில் வரிசை பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த மாடல்கள் குறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ட்ரையம்ஃப் போனிவில் பைக் மாடல்கள் அறிமுகம்!

பாரம்பரிய டிசைனில் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட ட்ரையம்ஃப் போனிவில் பைக் மாடல்களுக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. இந்த நிலையில், பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் ட்ரையம்ஃப் போனிவில் வரிசை பைக் மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

 கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ட்ரையம்ஃப் போனிவில் பைக் மாடல்கள் அறிமுகம்!

ட்ரையம்ஃப் போனிவில் வரிசையில் ஸ்ட்ரீட் ட்வின், டி100, டி120, டி120 பிளாக், ஸ்பீடுமாஸ்டர் ஆகிய மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

 கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ட்ரையம்ஃப் போனிவில் பைக் மாடல்கள் அறிமுகம்!

இதில், புதிய போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் மாடலுக்கு ரூ.7.95 லட்சமும், டி100 மாடலுக்கு ரூ.9.29 லட்சமும், டி120 மற்றும் டி120 பிளாக் மாடல்களுக்கு ரூ.10.65 லட்சமும், ஸ்பீடுமாஸ்டர் மாடலுக்கு ரூ.11.75 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் மாடலின் கோல்டு லைன் என்ற ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு ரூ.8.25 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ட்ரையம்ஃப் போனிவில் பைக் மாடல்கள் அறிமுகம்!

2021 ட்ரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின்

புதிய ட்ரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் மாடலில் சொகுசான புதிய இருக்கை, புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், அலுமினியத்தாலான ஹெட்லைட் பிராக்கெட்டுகள், வார்ப்பு சக்கரங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால், பைக் புதுப்பொலிவுடன் கவர்கிறது. இந்த பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 900சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்ப்டடு இருக்கிறது. 64 பிஎச்பி பவரையும், 80 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரண்டு ரைடிங் மோடுகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சுவிட்சபிள் டிராக்ஷன் கன்ட்ரோல், முன்புறத்தில் பிரெம்போ பிரேக்குகள் ஆகியவை உள்ளன.

 கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ட்ரையம்ஃப் போனிவில் பைக் மாடல்கள் அறிமுகம்!

ஸ்ட்ரீட் ட்வின் கோல்டு லைன் எடிசன்

ஸ்ட்ரீட் பைக்கின் விசேஷ அம்சங்கள் கொண்ட கோல்டு லைன் ஸ்பெஷல் எடிசன் மாடலிலும் வந்துள்ளது. இதில், மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட சஃபையர் பிளாக் என்ற வண்ணத்தில் பெட்ரோல் டேங்கில் தங்க வண்ண கோடுகளுடன் கிடைக்கிறது. இந்த மாடலானது மொத்தமே 30 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். மெஷினில் மெருகேற்றப்பட்ட ஸ்போக்குகள் கொண்ட சக்கரங்கள், தங்க வண்ண அலங்காரத்தில் கிடைக்கிறது. விசேஷ லோகோவும் இதன் மதிப்பை கூட்டுகிறது.

 கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ட்ரையம்ஃப் போனிவில் பைக் மாடல்கள் அறிமுகம்!

2021 ட்ரையம்ஃப் போனிவில் டி100

இந்த மாடலின் எஞ்சின் கூடுதல் சக்திகொண்டதாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே 54 பிஎச்பி பவரையும், 77 என்எம் டார்க்கையும் வழங்கிய நிலையில், தற்போது 64 பிஎச்பி பவரையும், 80 என்எம் டார்க்கையும் வழங்கும் 900சிசி எஞ்சினுடன் வந்துள்ளது. முந்தைய மாடலைவிட எடை 4 கிலோ குறைந்துள்ளதால், ஓட்டுதல் தரமும் மேம்பட்ட உணர்வை தரும்.

 கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ட்ரையம்ஃப் போனிவில் பைக் மாடல்கள் அறிமுகம்!

இந்த பைக்கில் முன்புறத்தில் கேட்ரிட்ஜ் வகை ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. யுஎஸ்பி சார்ஜர், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் வசதிகள் உள்ளன. லூசர்ன் புளூ, ஃப்யூசன் ஒயிட், ஜெட் பிளாக், கார்னிவல் ரெட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

 கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ட்ரையம்ஃப் போனிவில் பைக் மாடல்கள் அறிமுகம்!

2021 ட்ரையம்ஃப் போனிவில் டி120

புதிய டி120 மாடலில் புதிய ட்ரைம்யஃப் லோக பெட்ரோல் டேங்கில் உள்ளது. ரியர் வியூ மிரர்கள், மட்கார்டு, இண்டிகேட்டர்கள், சைலென்சர், ஹெட்லைட், கைப்பிடிகளில் போதிய அளவு க்ரோம் பூச்சுடன் அலங்காரமாக இருக்கிறது. பழுப்பு வண்ண இருக்கை பொருத்தப்பட்டு இருக்கிறது.

 கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ட்ரையம்ஃப் போனிவில் பைக் மாடல்கள் அறிமுகம்!

2021 ட்ரையம்ஃப் போனிவில் டி120 பிளாக் எடிசன்

புதிய ட்ரையம்ஃப் போனிவில் டி120 பிளாக் எடிசனில் சக்கரங்கள், கிராப் ரெயில், எஞ்சின் கவர், ரியர் வியூ மிரர்கள், இண்டிகேட்டர், புகைப்போக்கி ஆகியவை கருப்பு வண்ணத்தில் உள்ளன.

 கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ட்ரையம்ஃப் போனிவில் பைக் மாடல்கள் அறிமுகம்!

இந்த இரண்டு மாடல்களிலும் 1,200சிசி ட்வின் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 79 பிஎச்பி பவரையும், 105 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பிஎஸ்4 மாடலைவிட இதன் டார்க் திறன் 1 என்எம் கூடி இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. முந்தைய மாடலைவிட 7 கிலோ எடை குறைந்துள்ளது. இலகு எடை கொண்ட அலுமினியத்தாலான ரிம்கள் மற்றும் எஞ்சின் பாகங்கள் எடை குறைக்க உதவியுள்ளன. இந்த பைக்கில் ரோடு, ரெயின் என்ற இரண்டு ரைடிங் மோடுகள், யுஎஸ்பி சார்ஜர், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. கருப்பு, சிவப்பு மற்றும் நீலம் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

 கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ட்ரையம்ஃப் போனிவில் பைக் மாடல்கள் அறிமுகம்!

2021 ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர்

இந்த பைக்கில் 1,200சிசி பேரலல் ட்வின் எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 77 பிஎச்பி பவரையும், 106 என்எம் டார்க்கையும் வழங்கும். ரைடு பை ஒயர் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. ரோடு மற்றும் ரெயின் என்ற ரைடிங் மோடுகளும் உள்ளன. முக்கிய மாற்றமாக முன்புறத்தில் கயபா சஸ்பென்ஷனுக்கு பதிலாக 47 மிமீ ஃபோர்க்குகள் கொண்ட ஷோவா சஸ்பென்ஷன் இடம்பெற்றுளளது. செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. ஜெட் பிளாக், ஃப்யூசன் ஒயிட், சஃபையர் பிளாக் மற்றும் ரெட் ஹோப்பர் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

Most Read Articles

English summary
Triumph has launched new Bonneville bike range in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X