புதிய ட்ரையம்ஃப் டைகர் 850 ஸ்போரட் விற்பனைக்கு வந்தது... முதல்முறை டூரர் பைக் வாங்குவோருக்கு சூப்பர் சாய்ஸ்!

பிரிமீயம் டூரர் பைக் வாங்க விரும்புவோருக்கு ஏற்ற அம்சங்களுடன் புதிய ட்ரையம்ஃப் டைகர் 850 ஸ்போர்ட் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் விலை, சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 850 ஸ்போரட் விற்பனைக்கு வந்தது... முதல்முறை டூரர் பைக் வாங்குவோருக்கு சூப்பர் சாய்ஸ்!

இந்தியாவின் பிரிமீயம் வகை அட்வென்ச்சர் டூரர் பைக் சந்தையில் ட்ரையம்ஃப் நிறுவனத்தின் டைகர் பைக் மாடல் சிறந்த தேர்வாக உள்ளது. நீண்ட தூர பயணங்களுக்காக முதல்முறையாக பிரிமீயம் பைக் வாங்குவோருக்கு ஏற்ற அம்சங்களுடன் தனது டைகர் வரிசையில் விலை குறைவான தேர்வாக புதிய டூரர் வகை பைக் மாடலை இந்தியாவில் இன்று களமிறக்கி உள்ளது ட்ரையம்ஃப் நிறுவனம்.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 850 ஸ்போரட் விற்பனைக்கு வந்தது... முதல்முறை டூரர் பைக் வாங்குவோருக்கு சூப்பர் சாய்ஸ்!

டைகர் 850 ஸ்போர்ட் என்ற பெயரில் இந்த புதிய டூரர் மாடல் வந்துள்ளது. டைகர் வரிசையில் இது நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு அதிக சிறப்பம்சங்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. டைகர் 900 எக்ஸ்ஆர் பைக்கிற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 850 ஸ்போரட் விற்பனைக்கு வந்தது... முதல்முறை டூரர் பைக் வாங்குவோருக்கு சூப்பர் சாய்ஸ்!

ட்ரையம்ஃப் டைகர் 900 பைக்கில் இருந்த அதே 3 சிலிண்டர்கள் கொண்ட 888சிசி எஞ்சின்தான் புதிய டைகர் 850 ஸ்போர்ட் மாடலிலும் உள்ளது. ஆனால், பவர் மற்றும் டார்க் திறன் ரீ-மேப் செய்து சற்றே குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டைகர் 850 ஸ்போர்ட் பைக்கின் எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 82 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 850 ஸ்போரட் விற்பனைக்கு வந்தது... முதல்முறை டூரர் பைக் வாங்குவோருக்கு சூப்பர் சாய்ஸ்!

நகர்ப்புற சாலை மற்றும் நெடுஞ்சாலை என இரண்டு பயன்பாடுகளுக்கும் ஏற்ற வகையில் இதன் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. குறைவான வேகத்தில் சிறப்பான பவரை இதன் எஞ்சின் வழங்கும் என்பதால், நகர்ப்புறத்தில் எளிதாக ஓட்டுவதற்கான வாய்ப்பையும் வழங்கும்.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 850 ஸ்போரட் விற்பனைக்கு வந்தது... முதல்முறை டூரர் பைக் வாங்குவோருக்கு சூப்பர் சாய்ஸ்!

ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் தொழில்நுட்ப வசதிகளுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் சைலென்சர் சப்தம் மிக அலாதியாக இருக்கும் என ட்ரையம்ஃப் பெருமிதம் தெரிவிக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 850 ஸ்போரட் விற்பனைக்கு வந்தது... முதல்முறை டூரர் பைக் வாங்குவோருக்கு சூப்பர் சாய்ஸ்!

புதிய ட்ரையம்ஃப் டைகர் 850 ஸ்போர்ட் பைக்கில் புதிய சேஸீ, அதிக தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், சொகுசான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 850 ஸ்போரட் விற்பனைக்கு வந்தது... முதல்முறை டூரர் பைக் வாங்குவோருக்கு சூப்பர் சாய்ஸ்!

இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட்டுகள், 5 அங்குல டிஎஃப்டி கலர் டிஸ்ப்ளே கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ரோடு, ரெயின் என இரண்டு ரைடிங் மோடுகள், சுவிட்சபிள் டிராக்ஷன் கன்ட்ரோல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 850 ஸ்போரட் விற்பனைக்கு வந்தது... முதல்முறை டூரர் பைக் வாங்குவோருக்கு சூப்பர் சாய்ஸ்!

பிரெம்போ ஸ்டைல்மா 4 பிஸ்டன் காலிபர்களுடன் 320 மிமீ விட்டமுடைய இரண்டு டிஸ்க்குகள் கொண்ட முன்புற பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 255 மிமீ டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 850 ஸ்போரட் விற்பனைக்கு வந்தது... முதல்முறை டூரர் பைக் வாங்குவோருக்கு சூப்பர் சாய்ஸ்!

இந்த பைக்கில் முன்புறத்தில் 180 மிமீ டிராவல் கொண்ட 45 மிமீ மர்சோச்சி அப்சைடு டவுன் கேட்ரிட்ஜ் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் 170 மிமீ டிராவல் கொண்ட ப்ரீலோடு மேனுவல் அட்ஜெஸ்ட் வசதியுடன் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 850 ஸ்போரட் விற்பனைக்கு வந்தது... முதல்முறை டூரர் பைக் வாங்குவோருக்கு சூப்பர் சாய்ஸ்!

ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் ரூ.13.70 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் நிலையில், அதனை விட குறைவான விலை தேர்வாக இந்த மாடல் வந்துள்ளது. இந்த புதிய ட்ரையம்ஃப் டைகர் 850 ஸ்போர்ட் பைக்கிற்கு ரூ.11.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. இந்த பைக் க்ராஃபைட் டயாப்லோ ரெட் மற்றும் க்ராஃபைட் காஸ்பியன் புளூ என இரண்டு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

Most Read Articles

English summary
British premium bike manufacturer, Triumph has launched all new Tiger 850 Sport bike in India and starting at Rs.11.95 lakh (Ex-Showroom).
Story first published: Tuesday, February 9, 2021, 12:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X