Just In
- 3 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 4 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 5 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 5 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க.. புதிய வழிகளை யோசியுங்கள்.. பதுக்கினால் கடும் நடவடிக்கை.. மோடி பேச்சு
- Finance
இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..?!
- Sports
அதிரடி சிக்ஸ் அடுத்த பந்தில் அவுட்.. கேப்டனுக்கு எதிராக தமிழக வீரர் செய்த செயல்..போட்டியின் ட்விஸ்ட்
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ட்ரையம்ஃப் நிறுவனத்தின் விலை குறைவான புதிய ட்ரைடென்ட் 660 பைக் அறிமுகம்... முழு விபரம்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் 660 பைக் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ட்ரையம்ஃப் நிறுவனத்தின் விலை குறைவான தேர்வாக வந்திருக்கும் புதிய இந்த பைக்கின் பல முக்கிய விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் 660 பைக் நியோ-ரெட்ரோ ரோட்ஸ்டெர் என்ற பாரம்பரிய டிசைன் அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய நேக்கட் ரோட்ஸ்டெர் ரகத்திலான பைக் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. ட்ரையம்ஃப் நிறுவனத்தின் மிக குறைவான விலை கொண்ட ஆரம்ப ரக பிரிமீயம் பைக் மாடலாக வந்துள்ளது.

புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் பைக்கில் வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லைட், எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தனித்துவமான பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு, பாடி கலரிலேயே ஃபோர்க் புரொடெக்டர் மற்றும் ரேடியேட்டர் கவுல் அமைப்பும் இடம்பெற்றிருக்கின்றன. இதன் ரியர் வியூ மிரர்கள் கண்ணீர் துளியை நினைவூட்டும் வகையில் உள்ளன. பெட்ரோல் டேங்க் இரட்டை வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் 5 ஸ்போக் 17 அங்குல அலாய் சக்கரங்கள், மிச்செலின் 5 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 14 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. தரையிலிருந்து இருக்கை 805 மிமீ உயரம் கொண்டதாக இருக்கிறது. பின்புற வடிவமைப்பு மிக எளிமையாகவும், கச்சிதமாகவும் இருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் 660 பைக் க்றிஸ்டல் ஒயிட், சஃபையர் பிளாக், மேட் ஜெட் பிளாக்- சில்வர் ஐஸ் மற்றும் சில்வர் ஐஸ்-டயாப்லோ ரெட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் 660 பைக்கில் 3 சிலிண்டர்கள் கொண்ட 660சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 79.8 பிஎச்பி பவரையும், 64 என்எம் டார்க் திறனையும் வழங்கும். போட்டியாளரான கவாஸாகி இசட்650 பைக்கைவிட 13 எச்பி பவரை கூடுதலாக வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.

6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் வசதிகள் உள்ளன. பை டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர் வசதியும் இடம்பெற்றுள்ளது. இந்த பைக் 189 கிலோ எடை கொண்டது.

இந்த பைக்கில் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. மை ட்ரையம்ஃப் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் வந்துள்ளது. சுவிட்சபிள் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், இரண்டு ரைடிங் மோடுகள், ரைடு பை ஒயர் ஆகிய தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றுள்ளது.

முன்புறத்தில் 120 மிமீ டிராவல் கொண்ட 41 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 133.5 மிமீ டிராவல் கொண்ட மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் நிஸின் பிராண்டின் ட்வின் பாட் ஸ்லைடிங் காலிபர்களுடன் இயங்கும் இரண்டு 310 மிமீ டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் சிங்கிள் பிஸ்டன் காலிபர் கொண்ட 255 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது.

புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் 660 பைக்கிற்கு ரூ.6.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்ட நிலையில், டெலிவிரிப் பணிகள் உடனடியாக துவங்கப்படும் என்று தெரிகிறது. இந்த பைக்கிற்கு ரூ.9,999 மாதத் தவணை கொண்ட சிறப்பு கடன் திட்டத்தில் வாங்கும் வாய்ப்பும் இருக்கிறது.

இந்த பைக்கிற்கு 45 விதமான கூடுதல் ஆக்சஸெரீகள் கொடுக்கப்படுகின்றன. 2 ஆண்டுகளுக்கான வரம்பில்லாத வாரண்டி வழங்கப்படுகிறது. 16,000 கிமீ அல்லது 12 மாதங்கள் சர்வீஸ் இடைவெளியுடன் இந்த பைக் வந்துள்ளது.