யமஹா ஆர்15 பைக்கிற்கே டஃப் கொடுக்கக்கூடியதா புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்165 ஆர்பி? முழுமையான ஒப்பீடு!!

சமீபத்தில் டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கின் ரேஸ்-ஸ்பெக் வெர்சனை ஆர்டிஆர்165 ஆர்பி என்கிற பெயரில் அறிமுகப்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். ரூ.1.45 லட்சம் என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதுதான் டிவிஎஸ் நிறுவனத்தின் 'பந்தய செயல்படுதிறன் (RP)' பிராண்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ள முதல் பைக் ஆகும்.

யமஹா ஆர்15 பைக்கிற்கே டஃப் கொடுக்கக்கூடியதா புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்165 ஆர்பி? முழுமையான ஒப்பீடு!!

புதிய அப்பாச்சி ஆர்டிஆர்165 ஆர்பி ஆனது ஸ்பெஷல் எடிசன் மாடலாகும். அதாவது இது மொத்தமாகவே வெறும் 200 யூனிட்கள் மட்டுமே நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த 200 யூனிட்களையும் மிகுந்த பந்தய பைக் ஆர்வலர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது.

யமஹா ஆர்15 பைக்கிற்கே டஃப் கொடுக்கக்கூடியதா புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்165 ஆர்பி? முழுமையான ஒப்பீடு!!

டிவிஎஸ் நிறுவனத்தின் பந்தய மோட்டார்சைக்கிளிற்கு வழங்கப்படும் அதே இயந்திர பாகங்கள் தான் இந்த புதிய ஆர்டிஆர்165 ஆர்பி பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளன. பந்தய களத்தில் வைத்து உருவாக்கப்பட்ட இந்த முதல் டிவிஎஸ் ரேஸ்-ஸ்பெக் பைக்கானது டிவிஎஸ் ரேசிங் க்ரூப் சி ஜிபி165ஆர் என்கிற முழு பந்தய பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 பைக்கிற்கே டஃப் கொடுக்கக்கூடியதா புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்165 ஆர்பி? முழுமையான ஒப்பீடு!!

திருத்தியமைக்கப்பட்ட மெக்கானிக்கல் அமைப்புகளுடன், வழக்கமான ஆர்டிஆர்160 4வி பைக்கில் இருந்து வேறுப்படும் விதமாக புதுமையான பெயிண்ட் மற்றும் பாடி கிராஃபிக்ஸையும் புதிய ஆர்டிஆர்165 ஆர்பி பைக் பெற்றுள்ளது. இத்தகைய அப்டேட்களினால் தோற்றத்தில் வித்தியாசப்பட்டாலும், என்ஜின் ஆற்றல் அளவுகளிலும், மெக்கானிக்கல் பாகங்களிலும் யமஹா ஆர்15 வி4 பைக்கிற்கு நேரெதிர் போட்டி மாடலாக அப்பாச்சி 165 ஆர்பி பைக் விளங்குகிறது.

யமஹா ஆர்15 பைக்கிற்கே டஃப் கொடுக்கக்கூடியதா புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்165 ஆர்பி? முழுமையான ஒப்பீடு!!

யமஹாவின் சமீபத்திய அறிமுகமான ஆர்15 வி4 பைக்கில் 155சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-இல் 18.3 பிஎச்பி மற்றும் 7,500 ஆர்பிஎம்-இல் 14.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 பைக்கிற்கே டஃப் கொடுக்கக்கூடியதா புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்165 ஆர்பி? முழுமையான ஒப்பீடு!!

மறுப்பக்கம், அப்பாச்சி ஆர்டிஆர்165 ஆர்பி பைக்கில் 164.9சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது ஆர்15 வி4 பைக்கின் என்ஜினை காட்டிலும் 0.7 பிஎச்பி மற்றும் 0.1 என்எம் அதிகமாக 10,000 ஆர்பிஎம்-இல் 19 பிஎச்பி மற்றும் 8,750 ஆர்பிஎம்-இல் 14.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

யமஹா ஆர்15 பைக்கிற்கே டஃப் கொடுக்கக்கூடியதா புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்165 ஆர்பி? முழுமையான ஒப்பீடு!!

சஸ்பென்ஷனுக்கு ஆர்15 மாடலில் முன்பக்கத்தில் யுஎஸ்டி டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் இணைக்கப்பட்ட வகையை சார்ந்த மோனோக்ராஸும் கொடுக்கப்படுகின்றன. அதுவே ஆர்டிஆர்165 ஆர்பி பைக்கில் ஷோவா ட்யூன் செய்யப்பட்ட டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் முன்பக்கத்திலும், மோனோஷாக் பின்பக்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன.

யமஹா ஆர்15 பைக்கிற்கே டஃப் கொடுக்கக்கூடியதா புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்165 ஆர்பி? முழுமையான ஒப்பீடு!!

பிரேக்கிங் பணியினை கவனிக்க, ஆர்15 வி4 பைக்கில் 282மிமீ மற்றும் 220மிமீ-இல் டிஸ்க்குகள் முறையே முன் & பின் சக்கரத்திலும், ஆர்டிஆர் ஆர்பி மாடலில் 270மிமீ-இல் முன் டிஸ்க்கும், 240மிமீ-இல் பின்பக்க டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் ஆர்15 பைக்கில் இரட்டை-சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட, அப்பாச்சி ஆர்டிஆர்165 ஆர்பி பைக்கில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வசதியையே டிவிஎஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

யமஹா ஆர்15 பைக்கிற்கே டஃப் கொடுக்கக்கூடியதா புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்165 ஆர்பி? முழுமையான ஒப்பீடு!!

இருப்பினும் இவ்விரு பைக்குகளிலும் ஒரே மாதிரியாக 17 இன்ச்சில் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. அதேபோல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை இவை இரண்டும் பெறுகின்றன. ஆனால் ப்ளூடூத் இணைப்பு & யமஹா ஒய்-கனெக்ட் இணைப்பு வசதியினை ஆர்15 வி4 மாடல் மட்டுமே பெறுகிறது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்பி மாடலில் இவ்வாறான எத்தகைய இணைப்பு வசதியும் வழங்கப்படவில்லை.

யமஹா ஆர்15 பைக்கிற்கே டஃப் கொடுக்கக்கூடியதா புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்165 ஆர்பி? முழுமையான ஒப்பீடு!!

அதேபோல் தற்கால மாடர்ன் பைக்குகளில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்ட டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதியையும் யமஹா ஆர்15 வி4 பைக் மட்டுமே பெற்று வருகிறது. ஆர்டிஆர்165 ஆர்பி பைக்கில் டிவிஎஸ் நிறுவனம் டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதியினை வழங்கவில்லை. இருப்பினும் இவை இரண்டின் முன்பக்கத்திலும் எல்இடி ஹெட்லேம்ப்கள் பொருத்தப்படுகின்றன.

யமஹா ஆர்15 பைக்கிற்கே டஃப் கொடுக்கக்கூடியதா புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்165 ஆர்பி? முழுமையான ஒப்பீடு!!

புதிய அப்பாச்சி ஆர்டிஆர்165 ஆர்பி பைக்கின் சக்கரங்களில் யூரோக்ரிப்பின் பந்தய களத்திற்கு ஏற்ற ப்ரோடோர் க்யூ எஸ்ஆர் டயர்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் இந்த புதிய அப்பாச்சி பைக்கில் வழங்கப்பட்டுள்ள மற்ற முக்கிய அம்சங்கள் என்று பார்த்தால், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய க்ளட்ச் மற்றும் பிரேக் லிவர்களை சொல்லலாம்.

யமஹா ஆர்15 பைக்கிற்கே டஃப் கொடுக்கக்கூடியதா புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்165 ஆர்பி? முழுமையான ஒப்பீடு!!

ஆர்டிஆர்165 ஆர்பி-இன் மொத்த எடை 148 கிலோ ஆகும். இது ஸ்டாண்டர்ட் ஆர்டிஆர்160 4வி பைக்குடன் ஒப்பிடுகையில் 2 கிலோ அதிகமாகும். ஆர்டிஆர்165 ஆர்பி மாடலை தொடர்ந்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இத்தகைய ஆர்பி எடிசன்களை மேலும் சில அப்பாச்சி பைக்குகளிலும் எதிர்காலத்தில் வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

English summary
New tvs apache 165 rp makes more power than yamaha r15
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X