பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கே சவால்விடும் தோற்றத்தில் 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!! விரைவில் அறிமுகம்

2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் புதிய டீசர் படம் அதன் அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கே சவால்விடும் தோற்றத்தில் 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!! விரைவில் அறிமுகம்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் இந்தியாவில் அப்டேட்டை பெற தயாராகி வருகிறது. இருப்பினும் இதன் அறிமுகம் குறித்த விபரங்களை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இதுவரையில் அறிவிக்கவில்லை.

பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கே சவால்விடும் தோற்றத்தில் 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!! விரைவில் அறிமுகம்

நமக்கு தெரிந்தவரையில் இதன் அறிமுகம் வரும் வாரங்களில் இருக்கலாம். 2021 அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிற்கு நிர்ணயிக்கப்பட உள்ள விலை மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கே சவால்விடும் தோற்றத்தில் 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!! விரைவில் அறிமுகம்

புதிய ஆர்ஆர்310 பைக்கில் கொண்டுவரப்படவுள்ள விலைகள் இதுவரையில் மறைமுகமாகவே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படம் பைக்கின் புதிய ஹெட்லேம்ப் அமைப்பை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கே சவால்விடும் தோற்றத்தில் 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!! விரைவில் அறிமுகம்

இதனுடன் புதியதாக சில அம்சங்களையும் புதிய நிறங்களையும் டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம். பிஎம்டபிள்யூவின் 310சிசி ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 312.2சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது.

பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கே சவால்விடும் தோற்றத்தில் 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!! விரைவில் அறிமுகம்

அதிகப்பட்சமாக 33.5 பிஎச்பி மற்றும் 27.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கே சவால்விடும் தோற்றத்தில் 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!! விரைவில் அறிமுகம்

அர்பன், மழை, ட்ராக் & ஸ்போர்ட் என்ற நான்கு விதமான ரைடிங் மோட்களை கொண்ட இந்த டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் ரைடு-பை-வயர் த்ரோட்டலை வழங்குகிறது. புதிய ஆர்ஆர்310 பைக்கில் முக்கிய மாற்றமாக மைக்லீன் பைலட் டயர்களுக்கு பதிலாக புதிய மைக்லீன் சாலை 5 டயர்கள் பொருத்தப்பட உள்ளன.

பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கே சவால்விடும் தோற்றத்தில் 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!! விரைவில் அறிமுகம்

2021 அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிலும் க்ளைட் த்ரூ தொழிற்நுட்பம் தொடரப்பட உள்ளது. இது பைக்கை எந்தவொரு த்ரோட்டலுக்கும் இடமளிக்காமல் பைக் இயங்க உதவியாக இருக்கிறது. இந்த தொழிற்நுட்பம் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மற்றும் ஆர்டிஆர் 160 4வி பைக்குகளிலும் வழங்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கே சவால்விடும் தோற்றத்தில் 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!! விரைவில் அறிமுகம்

தற்போதைய அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கில் இரட்டை ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், ஸ்டைலிஷான இருக்கைகள், பெட்ரோல் டேங்கில் மிக பெரிய எழுத்துகளுடன் ‘அப்பாச்சி' என்கிற கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கே சவால்விடும் தோற்றத்தில் 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!! விரைவில் அறிமுகம்

டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் என்ற பெயரில் 5.0 இன்ச்சில் வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் திரை இந்த பைக்கில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன், அழைப்புகள் மற்றும் அதன் விபரங்களை தங்களது ஸ்மார்ட்போனில் டிவிஎஸ் கனெக்ட் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து ப்ளூடூத் மூலமாக ஓட்டுனர் பெற முடியும்.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
2021 TVS Apache RR 310 Teased; Launching Soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X