அப்பாச்சி ஆர்டிஆர்160-இன் செயல்திறன்மிக்க வெர்சனை களமிறக்க தயாராகும் டிவிஎஸ்!! புதிய டீசர் வெளியீடு!

டிவிஎஸ் அப்பாச்சி 165 ரேஸ் பெர்ஃபார்மன்ஸ் பைக் தொடர்பான டீசர் வீடியோ ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அப்பாச்சி ஆர்டிஆர்160-இன் செயல்திறன்மிக்க வெர்சனை களமிறக்க தயாராகும் டிவிஎஸ்!! புதிய டீசர் வெளியீடு!

இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் டிவிஎஸ் நிறுவனம் அதன் அப்பாச்சி பைக்குகள் வரிசையில் புதிய செயல்திறன்மிக்க மோட்டார்சைக்கிளிற்கான காப்புரிமையை தாக்கல் செய்தது. அந்த காப்புரிமை தொடர்பான படத்தில் ‘டிவிஎஸ் அப்பாச்சி 165 ஆர்பி' என குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்பாச்சி ஆர்டிஆர்160-இன் செயல்திறன்மிக்க வெர்சனை களமிறக்க தயாராகும் டிவிஎஸ்!! புதிய டீசர் வெளியீடு!

இதில் ஆர்பி என்பது ரேஸ் பெர்ஃபார்மன்ஸ் என்பதன் சுருக்கம் என ஆகும். இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரின் மூலம் இந்த புதிய டிவிஎஸ் அப்பாச்சி பைக்கின் அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம். கீழுள்ள இந்த டீசர் வீடியோவில் பைக்கின் பெயரை தவிர்த்து வேறெதையும் காண முடியவில்லை.

வெறும் 14 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக உள்ள இந்த வீடியோவில், பந்தய களத்தில் பைக் ஒன்று வேகமாக இயங்குவது போன்று காட்டப்பட்டுள்ளது. ஆனால் பைக்கின் சத்தத்தை தவிர்த்து, தோற்றம் காண்பிக்கப்படவில்லை. இந்த வீடியோவின் மூலம், டிவிஎஸ் தயாரித்துவரும் இந்த புதிய அப்பாச்சி பைக்கானது பந்தய களத்திற்கு ஏற்ற செயல்திறன்மிக்க பைக் என்பது மட்டும் உறுதியாகிறது.

அப்பாச்சி ஆர்டிஆர்160-இன் செயல்திறன்மிக்க வெர்சனை களமிறக்க தயாராகும் டிவிஎஸ்!! புதிய டீசர் வெளியீடு!

தற்போதைக்கு 165சிசி-யில் இந்த அப்பாச்சி ரேஸ் பெர்ஃபார்மன்ஸ் பைக் வெளிவரவுள்ளதாக கூறப்பட்டாலும், எதிர்காலத்தில் மற்ற அப்பாச்சி மாடல்களிலும் செயல்திறன்மிக்க வெர்சன் கொண்டுவரப்படலாம். விற்பனையில் உள்ள ஆர்டிஆர்160 4வி பைக்கின் அடிப்படையில் புதிய அப்பாச்சி 165 ஆர்பி பைக் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

அப்பாச்சி ஆர்டிஆர்160-இன் செயல்திறன்மிக்க வெர்சனை களமிறக்க தயாராகும் டிவிஎஸ்!! புதிய டீசர் வெளியீடு!

இதனால் ஆர்டிஆர்160 4வி பைக்கில் பொருத்தப்படும் 159.7சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு என்ஜின் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டு இந்த புதிய ரேஸ் பெர்ஃபார்மன்ஸ் பைக்கில் பொருத்தப்படலாம். இந்த என்ஜின் தற்போதைக்கு அதிகப்பட்சமாக 17.63 பிஎச்பி மற்றும் 14.73 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

அப்பாச்சி ஆர்டிஆர்160-இன் செயல்திறன்மிக்க வெர்சனை களமிறக்க தயாராகும் டிவிஎஸ்!! புதிய டீசர் வெளியீடு!

இந்த என்ஜின் உடன் வழக்கம்போல் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனே இணைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்றாலும், கியர் விகிதங்களில் சில மாறுதல்கள் கொண்டுவரப்படலாம். அதேபோல் வாடிக்கையாளர்கள் தங்களது விரும்பத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து கொள்ளுவதற்கு ஏதுவாக சில புதிய தொகுப்புகள் இந்த ஆர்பி பைக்குடன் வழங்கப்படலாம்.

அப்பாச்சி ஆர்டிஆர்160-இன் செயல்திறன்மிக்க வெர்சனை களமிறக்க தயாராகும் டிவிஎஸ்!! புதிய டீசர் வெளியீடு!

இதே பாணியை இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் டிவிஎஸ் கையாண்டு இருந்தது. தோற்றத்தை பொறுத்தவரையில், வழக்கமான ஆர்டிஆர்160 4வி பைக்கில் இருந்து புதிய ஆர்டிஆர்165 ஆர்பி பைக்கினை சற்று வேறுப்படுத்தி காட்ட டிவிஎஸ் முயற்சிக்கலாம். செயல்திறன்மிக்க மாடல் என்பதால், பைக்கின் தோற்றமும் அதற்கேற்ப ஸ்போர்டியரானதாக வழங்கப்படும்.

அப்பாச்சி ஆர்டிஆர்160-இன் செயல்திறன்மிக்க வெர்சனை களமிறக்க தயாராகும் டிவிஎஸ்!! புதிய டீசர் வெளியீடு!

அதேபோல் சற்று தாழ்வான க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் மற்றும் சற்று பின்னோக்கி நகர்த்தப்பட்ட ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி உடன் பைக்கின் இயக்கவியல் பண்பும் பந்தய களத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ளது. என்ஜின் ஆற்றல் அதிகரிக்கப்பட்டால், அதற்கேற்ப பைக்கின் மெக்கானிக்கல் பாகங்களையும் அட்ஜெஸ்ட் செய்ய டிவிஎஸ் முயற்சிக்கலாம்.

அப்பாச்சி ஆர்டிஆர்160-இன் செயல்திறன்மிக்க வெர்சனை களமிறக்க தயாராகும் டிவிஎஸ்!! புதிய டீசர் வெளியீடு!

புதிய அப்பாச்சி ஆர்டிஆர்165 ஆர்பி பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ஷோவாவின் மோனோ-ஷாக்கும் சிறந்த ஹேண்ட்லிங்கிற்காகவும், அதிவேகத்தின் போது சிறந்த நிலைத்தன்மைக்காகவும் சற்று விரைப்பானதாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பாச்சி ஆர்டிஆர்160-இன் செயல்திறன்மிக்க வெர்சனை களமிறக்க தயாராகும் டிவிஎஸ்!! புதிய டீசர் வெளியீடு!

அதேபோல், ட்யூல்-சேனல் ஏபிஎஸ் உடன் இருசக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் என வலிமையான பிரேக்கிங் அமைப்பை இந்த பைக்கில் டிவிஎஸ் நிறுவனம் வழங்கலாம். இவை அனைத்தையும் ஒரு யூகமாகவே நாங்கள் கூறுகிறோம். அதிகாரப்பூர்வ விபரங்களுக்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்165 ஆர்பி பைக்கின் அறிமுகம் வரையில் காத்திருந்ததாக வேண்டும்.

அப்பாச்சி ஆர்டிஆர்160-இன் செயல்திறன்மிக்க வெர்சனை களமிறக்க தயாராகும் டிவிஎஸ்!! புதிய டீசர் வெளியீடு!

ஆனால் தற்போதைய ஆர்டிஆர்160 4வி பைக்கில் வழங்கப்படும் இதர அம்சங்களான, முழு-எல்இடி விளக்குகள், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எல்இடி டிஆர்எல்கள், க்ளைட் த்ரூ டிராஃபிக் தொழிற்நுட்பம், ஒன்-டச் ஸ்டார்ட் மற்றும் ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் என டிவிஎஸ் அழைக்கும் இணைப்பு வசதி உள்ளிட்டவற்றை அப்படியே இந்த புதிய செயல்திறன்மிக்க பைக்கில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Apache 165 RP Race Performance Teased Ahead Of Launch.
Story first published: Wednesday, December 22, 2021, 23:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X