அட்டகாசமான கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் அறிமுகம்!

கூடுதல் அம்சங்களுடன் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கவரும் அம்சங்களுடன் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் அறிமுகம்!

பட்ஜெட் பைக் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் இருந்து வருகிறது. குறைசொல்ல முடியாத வசீகரமான டிசைன், அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் எஞ்சினுடன் சரியான பட்ஜெட்டில் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய 2021 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கவரும் அம்சங்களுடன் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் அறிமுகம்!

இந்த பைக்கில் ஈக்கோத்ரஸ்ட் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் கொண்ட எஞ்சினுடன் வந்துள்ளது. இதனால், முந்தைய மாடலைவிட இந்த புதிய மாடல் 15 சதவீதம் வரை கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

கவரும் அம்சங்களுடன் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் அறிமுகம்!

இந்த பைக்கில் இருக்கும் 110சிசி ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சின் அதிகபட்சமாக 8.08 பிஎச்பி பவரையும், 8.70 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 90 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கவரும் அம்சங்களுடன் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் அறிமுகம்!

அடுத்து மிக முக்கிய அம்சமாக புதிய ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கில் முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக் வசதி ஆஃப்ஷனலாக கொடுக்கப்படுகிறது. இந்த பைக்கில் பெட்டல் டிஸ்க் பிரேக் முன்புறத்தில் கொடுக்கப்படுகிறது.

கவரும் அம்சங்களுடன் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் அறிமுகம்!

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் டிஸ்க் பிரேக் வேரியண்ட்டில் கருப்பு மற்றும் சிவப்பு என இரட்டை வண்ணத் தேர்வு கொடுக்கப்படுகிறது. இந்த வண்ணத் தேர்வு மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தை வழங்குகிறது.

கவரும் அம்சங்களுடன் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் அறிமுகம்!

அத்துடன், எல்இடி ஹெட்லைட் மற்றும் யுஎஸ்பி மொபைல் சார்ஜர் வசதி முக்கிய அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. இது நிச்சயம் பட்ஜெட் பைக் வாங்குவோரை வெகுவாக கவரும் அம்சங்களாக இருக்கும்.

கவரும் அம்சங்களுடன் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் அறிமுகம்!

இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் 5 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஷாக் அப்சார்பரும் உள்ளன. 17 அங்குல சக்கரங்கள் மற்றும் ட்யூப்லெஸ் டயர்களும் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளன.

கவரும் அம்சங்களுடன் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் அறிமுகம்!

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்கின் டிரம் பிரேக் மாடல் ரூ.65,865 விலையிலும், டிஸ்க் பிரேக் மாடல் ரூ.68,465 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். டிஸ்க் பிரேக் வசதி சேர்க்கப்பட்டு இருப்பது இந்த பைக்கின் பாதுகாப்பையும், மதிப்பையும் உயர்த்தும் விஷயமாக இருக்கிறது. டிரம் பிரேக் மாடலைவிட ரூ.2,600 மட்டுமே கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால், வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Motor has launched new Star City Plus bike with additional features in India.
Story first published: Tuesday, March 2, 2021, 11:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X