ஷோரூம்களை வந்தடைந்த புதிய யமஹா எஃப்.இசட்-எக்ஸ்!! டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

யமஹா எஃப்.இசட்-எக்ஸ் மோட்டார்சைக்கிளின் முதல் தொகுப்பு சில டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது. இதுகுறித்து நமக்கு கிடைத்துள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஷோரூம்களை வந்தடைந்த புதிய யமஹா எஃப்.இசட்-எக்ஸ்!! டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

இந்தியாவில் யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த வாரத்தில் அதன் புதிய எஃப்.இசட்-எக்ஸ் ரெட்ரோ ஸ்டைல் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியது. சர்வதேச சந்தைகளில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் எக்ஸ்.எஸ்.ஆர் மோட்டார்சைக்கிள்களின் தோற்றத்தால் கவரப்பட்டு இந்த புதிய பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

ஷோரூம்களை வந்தடைந்த புதிய யமஹா எஃப்.இசட்-எக்ஸ்!! டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

மேட் காப்பர், மேட் கருப்பு மற்றும் மெட்டாலிக் நீலம் என்ற மூன்று விதமான நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எஃப்.இசட்-எக்ஸ் மோட்டார்சைக்கிளின் முதல் தொகுப்பு தற்போது டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது.

Image Courtesy: MRD Vlogs

இது தொடர்பான வீடியோ எம்ஆர்டி விலாக்ஸ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. ஷோரூமிற்கு பைக் வந்துள்ளதால் சில ஷோரூம் நிர்வாகிகள் புதிய எஃப்.இசட்-எக்ஸ் மோட்டார்சைக்கிளை டெஸ்ட் ட்ரைவ் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஷோரூம்களை வந்தடைந்த புதிய யமஹா எஃப்.இசட்-எக்ஸ்!! டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

டெலிவிரிகள் வருகிற ஜூலை மாத துவக்கத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ளூடூத் இணைப்பு வசதி உடன், வசதி இல்லாமல் என இரு விதமான வேரியண்ட்களில் இந்த யமஹா பைக் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஷோரூம்களை வந்தடைந்த புதிய யமஹா எஃப்.இசட்-எக்ஸ்!! டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

இதில் ப்ளூடூத் வசதி உடனான எஃப்.இசட்-எக்ஸ் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,19,800 ஆகவும், ப்ளூடூத் வசதி இல்லாத வேரியண்ட்டின் விலை இதனை காட்டிலும் சற்று குறைவாக ரூ.1,16,800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஷோரூம்களை வந்தடைந்த புதிய யமஹா எஃப்.இசட்-எக்ஸ்!! டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

தற்போது நமக்கு கிடைத்துள்ள மேல் உள்ள வீடியோவில் புதிய எஃப்.இசட்-எக்ஸ் பைக்கை நெருக்கமாக பார்க்க முடிகிறது. ரெட்ரோ ஸ்டைலில் தோற்றத்தை கொண்ட இந்த யமஹா பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப், நீட்டிக்கப்பட்ட ஹேண்டில்பார்கள், படிக்கட்டு போன்றதான அமைப்பில் இருக்கை மற்றும் பின் இறுதிமுனையில் க்ராப் ரெயில் வழங்கப்பட்டுள்ளது.

ஷோரூம்களை வந்தடைந்த புதிய யமஹா எஃப்.இசட்-எக்ஸ்!! டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

இவற்றுடன் எல்சிடி க்ளஸ்ட்டர் மற்றும் மொபைல் போன் சார்ஜரையும் இந்த பைக்கில் நிலையாக யமஹா வழங்கியுள்ளது.பைக்கை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ள விளக்குகள் அனைத்தும் எல்இடி தரத்தில் உள்ளன. இதன் 17 இன்ச் அலாய் சக்கரங்களில் ட்யுப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஷோரூம்களை வந்தடைந்த புதிய யமஹா எஃப்.இசட்-எக்ஸ்!! டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

இவை போதாது என்போர்க்காக இருக்கை கவர், டேங்க் பேட், க்ரோம் கண்ணாடிகள் மற்றும் எல்இடி ப்ளிங்கர்ஸ் உள்ளிட்டவை அடங்கிய ஆக்ஸஸரீ தொகுப்பையும் யமஹா நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதாவது இவற்றையும் பெற கூடுதல் பணம் செலுத்த வேண்டி இருக்கும்.

ஷோரூம்களை வந்தடைந்த புதிய யமஹா எஃப்.இசட்-எக்ஸ்!! டெலிவிரி விரைவில் துவங்குகிறது!

தற்போதைய யமஹா எஃப்.இசட்-எஃப்.ஐ மோட்டார்சைக்கிளின் அதே 149சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் தான் புதிய எஃப்.இசட்-எக்ஸ் பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் அமைப்பை பெற்றுள்ள எஃப்.இசட்-எக்ஸ் பைக்கிற்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி மற்றும் சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகள் விற்பனையில் போட்டியாக உள்ளன.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha FZ-X First Batch Arrives At Dealer Showroom, Detailed Walkaround/
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X