யமஹா ஆர்15 வி4 பைக்குகளின் டெலிவிரி துவங்கியது!! உலகிலேயே முதல் ஆளாக டெலிவிரி எடுத்தவர் இவர்தான்!

யமஹா ஆர்15, ஆர்15 எம் மோட்டார்சைக்கிளின் முதல் தொகுப்பு வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நமக்கு கிடைக்க பெற்றுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹா ஆர்15 வி4 பைக்குகளின் டெலிவிரி துவங்கியது!! உலகிலேயே முதல் ஆளாக டெலிவிரி எடுத்தவர் இவர்தான்!

இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் பிரபலமான ஆரம்ப-நிலை ஸ்போர்ட்ஸ் பைக்கான யமஹா ஆர்15-இன் புதிய வெர்சனாக ஆர்15 வி4 சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனுடன் ஆர்15 எம் பைக்கையும் யமஹா அறிமுகப்படுத்தியது.

யமஹா ஆர்15 வி4 பைக்குகளின் டெலிவிரி துவங்கியது!! உலகிலேயே முதல் ஆளாக டெலிவிரி எடுத்தவர் இவர்தான்!

இவை இரண்டும் ஏகப்பட்ட தோற்ற அப்கிரேட்களையும், செயல்பாட்டு அப்டேட்களையும் பெற்றுள்ளன. இதில் குறிப்பாக புதிய தலைமுறை ஆர்15 வி4 பைக்கில் சில காஸ்மெட்டிக் மேம்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இதன் தோற்றம், இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்பட்ட ஒய்.இசட்.எஃப்-ஆர்7 மோட்டார்சைக்கிளில் இருந்து கொண்டுவரப்பட்டது போன்று உள்ளது.

யமஹா ஆர்15 வி4 பைக்குகளின் டெலிவிரி துவங்கியது!! உலகிலேயே முதல் ஆளாக டெலிவிரி எடுத்தவர் இவர்தான்!

புதிய ஆர்15 வி4 பைக்கின் முன்பக்கம் ஆனது எல்இடி பிரோஜெக்டர் செட்-அப் உடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆர்15 வி3 பைக்கில் இரு-கண்கள் போன்ற டிசைனிலான எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மெட்டாலிக் சிவப்பு, டார்க் நைட் மற்றும் ரேசிங் நீலம் என்கிற மூன்று விதமான நிறத்தேர்வுகள் புதிய தலைமுறை ஆர்15 வி4 பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன.

யமஹா ஆர்15 வி4 பைக்குகளின் டெலிவிரி துவங்கியது!! உலகிலேயே முதல் ஆளாக டெலிவிரி எடுத்தவர் இவர்தான்!

ரூ.1.68 லட்சத்தில் இருந்து துவங்கும் இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.73 லட்சம் வரையில் உள்ளன. மறுப்பக்கம் சில்வர் நிறத்திலான ஆர்15 எம் பைக்கின் விலை ரூ.1.78 லட்சம். இவை தவிர்த்து ஆர்15 எம் மான்ஸ்டர் எடிசன் என்ற ஒன்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1.8 லட்சம். இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

யமஹா ஆர்15 வி4 பைக்குகளின் டெலிவிரி துவங்கியது!! உலகிலேயே முதல் ஆளாக டெலிவிரி எடுத்தவர் இவர்தான்!

இவை இரண்டின் டெலிவிரி பணிகள் தான் தற்போது நாடு முழுவதும் துவங்கப்பட்டுள்ளன. இந்த வகையில் புதிய ஆர்15 வி4 பைக்கை முதலாவதாக பெற்ற வாடிக்கையாளர்களுள் ஒருவர் ஃபர்ஹன் அகமது. இவரிடம் இதற்கு முன்னர் ஆர்15 வி3 பைக்கும் இருந்தது. ஆர்15 வி4 பைக் உலகிலேயே இந்தியாவில் தான் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 வி4 பைக்குகளின் டெலிவிரி துவங்கியது!! உலகிலேயே முதல் ஆளாக டெலிவிரி எடுத்தவர் இவர்தான்!

அப்படியென்றால், ஃபர்ஹன் அகமது இந்த பைக்கை உலகளவில் முதலாவதாக டெலிவிரி பெற்றவர் ஆவார். மற்ற அப்டேட்களாக இந்த யமஹா ஸ்போர்ட் பைக்கில் ரீடிசைனில் விஸர், செதுக்கப்பட்டது போன்றதான வடிவில் பெட்ரோல் டேங்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தமும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஆர்15 வி4 மற்றும் ஆர்15 எம் பைக்குகளின் புதுமையான சத்தத்தினை எம்.ஆர்.டி விலாக்ஸ் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள மேலுள்ள வீடியோவில் காணலாம். ஆனால் உண்மையில், இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புதிய யமஹா ஆர்14 வி4-இல் வழக்கமான 155சிசி, லிக்யூடு கூல்டு, எஸ்ஒஎச்சி என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 வி4 பைக்குகளின் டெலிவிரி துவங்கியது!! உலகிலேயே முதல் ஆளாக டெலிவிரி எடுத்தவர் இவர்தான்!

அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-இல் 18.6 பிஎஸ் மற்றும் 8,500 ஆர்பிஎம்-இல் 14.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கான்ஸ்டண்ட் மெஷ் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. என்ஜின் மட்டுமின்றி, வெவ்வேறான வால்வு செயல்பாடு ( விவிஏ) மற்றும் உதவி & ஸ்லிப்பர் க்ளட்ச் போன்ற சிறந்த செயல்படுதிறனிற்கு காரணமான தொழிற்நுட்பங்களும் அப்படியே தொடரப்பட்டுள்ளன.

யமஹா ஆர்15 வி4 பைக்குகளின் டெலிவிரி துவங்கியது!! உலகிலேயே முதல் ஆளாக டெலிவிரி எடுத்தவர் இவர்தான்!

யமஹா ஆர்15 பைக்குகளின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதன் க்ளட்ச்சை மென்மையாக அழுத்தலாம். இது ரைடரின் சோர்வை தவிர்க்கிறது. புதிய வெர்சன்-4இல் மேம்படுத்தப்பட்ட ரைட் டைனாமிக்ஸ் மற்றும் ஹேண்ட்லிங்கை ஓட்டுனர் எதிர்பார்க்கலாம். குறிப்பாக அதிவேகத்தில்.

யமஹா ஆர்15 வி4 பைக்குகளின் டெலிவிரி துவங்கியது!! உலகிலேயே முதல் ஆளாக டெலிவிரி எடுத்தவர் இவர்தான்!

ஃபர்ஹன் அகமது டெலிவிரி பெற்றுள்ள ஆர்15 எம் பைக்கின் முன்பக்க சஸ்பென்ஷன் டிராவல் தங்க நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் சஸ்பென்ஷனுக்கு மோனோக்ராஸ் உள்ளது. பிரேக்கிங் பணியை கவனிக்க முன் சக்கரத்தில் 282மிமீ-இல் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 220மிமீ-இல் டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளன.

யமஹா ஆர்15 வி4 பைக்குகளின் டெலிவிரி துவங்கியது!! உலகிலேயே முதல் ஆளாக டெலிவிரி எடுத்தவர் இவர்தான்!

இவற்றுடன் ட்யூவல்-சேனல் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் விரைவுமாற்றியும் புதிய தலைமுறை ஆர்15 வி4 பைக்கில் இடம் பெற்றுள்ளன. இவற்றை எல்லாம் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னதாகவே புதிய ஆர்15 பைக்கின் தோற்றம் எவர் ஒருவரையும் வசீகரித்துவிடும்.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha R15 V4, R15M First Batch Delivery Starts.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X