புதிய யமஹா ஆர்15எஸ் வி3 Vs ஆர்15 வி4 : விலை மட்டுமின்றி, இரண்டிற்கும் இடையே இவ்ளோ வித்தியாசங்கள் இருக்கா!!

சில வாரங்களுக்கு முன்பு யமஹா நிறுவனம் அதன் பிரபலமான மோட்டார்சைக்கிளான ஆர்15-இன் புதிய நான்காம் தலைமுறையை அறிமுகப்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆர்15 பைக்குகளுக்கு உலகளவில் இந்தியாவில் தான் அதிகப்படியான வரவேற்பு கிடைக்கிறது போல, ஏனெனில் ஆர்15 வி4 (வெர்சன் 4) மாடல் நம் நாட்டிலேயே முதலாவதாக களமிறக்கப்பட்டுள்ளது.

புதிய யமஹா ஆர்15எஸ் வி3 Vs ஆர்15 வி4: விலை மட்டுமின்றி, இரண்டிற்கும் இடையே இவ்ளோ வித்தியாசங்கள் இருக்கா!!

புதிய ஆர்15 வி4 பைக்கிற்கும் உண்மையில் இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் இந்தியாவில் மலிவான விலை கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக்குகளே அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என்பது ஊரறிந்த விஷயம். இதனை நன்கு புரிந்து வைத்துள்ள யமஹா நிறுவனம், இதன் காரணமாகவே ஆர்15எஸ் வி3 மோட்டார்சைக்கிளை சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது.

புதிய யமஹா ஆர்15எஸ் வி3 Vs ஆர்15 வி4: விலை மட்டுமின்றி, இரண்டிற்கும் இடையே இவ்ளோ வித்தியாசங்கள் இருக்கா!!

உலகளவில் மலிவான ஸ்போர்ட்ஸ் பைக்குகளுள் ஒன்றாக ஆர்15 விளங்குகிறது. இருப்பினும் அதனை காட்டிலும் மலிவான மாடலாக ஆர்15 எஸ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பெயரை வைத்தே கண்டுப்பிடித்திருப்பீர்கள், இது முந்தைய மூன்றாம் தலைமுறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று. ஆர்15 வி4 & ஆர்15 எஸ் இவை இரண்டிற்கிடையே உள்ள ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய யமஹா ஆர்15எஸ் வி3 Vs ஆர்15 வி4: விலை மட்டுமின்றி, இரண்டிற்கும் இடையே இவ்ளோ வித்தியாசங்கள் இருக்கா!!

டிசைன்

தோற்றத்தில் இரண்டும் பெரியளவில் வித்தியாசப்படுகின்றன. ஆர்15 என்கிற பெயர் மட்டும் இரண்டிலும் பொதுவானதாக இல்லையென்றால், இவை இரண்டையும் வெவ்வேறான பெயர்களில் கூட விற்பனை செய்யலாம். அந்த அளவிற்கு 3ஆம் தலைமுறையில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆர்15 எஸ் பைக்கில் இருந்து நான்காம் தலைமுறை ஆர்15 வி4 தோற்றத்தில் வேறுப்படுகிறது.

புதிய யமஹா ஆர்15எஸ் வி3 Vs ஆர்15 வி4: விலை மட்டுமின்றி, இரண்டிற்கும் இடையே இவ்ளோ வித்தியாசங்கள் இருக்கா!!

குறிப்பாக முன்பக்கத்தில் முந்தைய தலைமுறை ஆர்15 பைக்கில் இரட்டை-கண் போன்றதான ஸ்டைலில் இரட்டை-பீம் ஹெட்லேம்ப் அமைப்பு வழங்கப்பட்டது. ஆனால் புதிய நான்காம் வெர்சனில் அது ஒற்றை துண்டாக மாற்றப்பட்டுள்ளது. தோற்றத்தில் மற்றொரு முக்கிய வேறுப்பாடாக, ஆர்15 வி4-இல் பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு வழங்கப்பட, சமீபத்திய அறிமுகமான ஆர்15 எஸ் பைக்கில் ஒற்றை துண்டாக இருக்கை வழங்கப்பட்டுள்ளது.

புதிய யமஹா ஆர்15எஸ் வி3 Vs ஆர்15 வி4: விலை மட்டுமின்றி, இரண்டிற்கும் இடையே இவ்ளோ வித்தியாசங்கள் இருக்கா!!

இதன் விளைவாக ஆர்15 எஸ் சற்று மலிவான ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிள்களை போல் காட்சியளித்தாலும், வி4 மாடலை காட்டிலும் இதில் சவுகரியமான ரைடிங் சூழல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்15 எஸ் பைக்கிற்கு ஒரே ஒரு ரேசிங் நீலம் என்ற நிறத்தேர்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆர்15 வி4-இல் மொத்தம் 5 விதமான பெயிண்ட் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

புதிய யமஹா ஆர்15எஸ் வி3 Vs ஆர்15 வி4: விலை மட்டுமின்றி, இரண்டிற்கும் இடையே இவ்ளோ வித்தியாசங்கள் இருக்கா!!

என்ஜின் & மெக்கானிக்கல் பாகங்கள்

ஆர்15 வி4 & ஆர்15 எஸ் என இரு பைக்கிலும் வழக்கமான 155சிசி, சிங்கிள்-சிலிண்டர், எஸ்ஒஎச்சி, லிக்யுடு-கூல்டு என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் இரண்டிலும் சற்று வித்தியாசப்படுகிறது. நான்காம் தலைமுறை ஆர்15 பைக்கில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 18.4 பிஎஸ் மற்றும் 14.2 என்எம் டார்க் திறனை வரையிலான ஆற்றலை வழங்குகிறது.

புதிய யமஹா ஆர்15எஸ் வி3 Vs ஆர்15 வி4: விலை மட்டுமின்றி, இரண்டிற்கும் இடையே இவ்ளோ வித்தியாசங்கள் இருக்கா!!

அதுவே, ஆர்15 எஸ் பைக்கில் 10,000 ஆர்பிஎம்-இல் 18.6 பிஎஸ் மற்றும் 8,500 ஆர்பிஎம்-இல் 14.1 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடிய வகையில் இந்த என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் இருந்து மலிவான ஆர்15 பைக்கில் கூடுதல் என்ஜின் ஆற்றல் வழங்கப்பட்டுள்ளதை அறியலாம். ஏனெனில் ஆர்15 எஸ் பைக்கிற்கு மூன்றாம் தலைமுறையின் தோற்றம் மட்டுமின்றி, என்ஜினும் அப்படியே எந்த மாற்றமும் இன்றி வழங்கப்படுகிறது.

புதிய யமஹா ஆர்15எஸ் வி3 Vs ஆர்15 வி4: விலை மட்டுமின்றி, இரண்டிற்கும் இடையே இவ்ளோ வித்தியாசங்கள் இருக்கா!!

ஆனால் இவை இரண்டிலும் ஒரே மாதிரியாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் & ஸ்லிப்பர் க்ளட்ச் உதவி தான் என்ஜின் உடன் இணைக்கப்படுகிறது. VVA எனப்படும் வெவ்வேறான வால்வு செயல்பாட்டு தொழிற்நுட்பம் இந்த இரு ஆர்15 மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்த இரு பைக்குகள் ஒத்த டெல்டாபாக்ஸ் ஃப்ரேம் மற்றும் அலுமினியம் ஸ்விங்கார்ம் முதலியவற்றையே கொண்டுள்ளன. ஆனால் சஸ்பென்ஷனுக்கு ஆர்15 எஸ் பைக்கில் மிகவும் எளிமையான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய யமஹா ஆர்15எஸ் வி3 Vs ஆர்15 வி4: விலை மட்டுமின்றி, இரண்டிற்கும் இடையே இவ்ளோ வித்தியாசங்கள் இருக்கா!!

வசதிகள் & விலை

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், குறைவான விலையினை நிர்ணயிக்க வேண்டி ஆர்15 எஸ் டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் விரைவு கியர்மாற்றி உள்ளிட்ட அம்சங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆர்15 வி4 மோட்டார்சைக்கிளில் வழங்கப்படும் ப்ளூடூத் இணைப்பு வசதியையும் ஆர்15 எஸ் மாடல் இழந்துள்ளது.

புதிய யமஹா ஆர்15எஸ் வி3 Vs ஆர்15 வி4: விலை மட்டுமின்றி, இரண்டிற்கும் இடையே இவ்ளோ வித்தியாசங்கள் இருக்கா!!

இரண்டிலும் வழங்கப்படும் அம்சங்களாக, சைடு ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால் என்ஜின் ஆஃப்-ஆகும் வசதி, எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் ட்யுவல்-சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவற்றை சொல்லலாம். சமீபத்திய ஆர்15 எஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையினை யமஹா நிறுவனம் ரூ.1.57 லட்சத்தில் நிர்ணயித்துள்ளது. அதுவே ஆர்15 வி4 பைக்கின் விலை இதனை காட்டிலும் சுமார் ரூ.14,000 அதிகமாக ரூ.1.71 லட்சத்தில் இருந்து ரூ.1.83 லட்சம் வரையில் உள்ளன.

புதிய யமஹா ஆர்15எஸ் வி3 Vs ஆர்15 வி4: விலை மட்டுமின்றி, இரண்டிற்கும் இடையே இவ்ளோ வித்தியாசங்கள் இருக்கா!!

ரூ.1.83 லட்சத்தில் மோட்டோ ஜிபி உடையில் ஆர்15 வி4 பைக் கிடைக்கும். இது ஆர்15 எஸ் பைக்கை காட்டிலும் சுமார் ரூ.28,000 அளவில் விலைமிக்கதாக உள்ளது. ஆர்15 எஸ் மற்றும் ஆர்15 வி4 மோட்டார்சைக்கிள்கள் மட்டுமின்றி, ஆர்15 எம் பைக்கையும் இந்தியாவில் யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
New yamaha r15s v3 vs r15 v4 similarities and differences
Story first published: Saturday, November 20, 2021, 7:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X