Just In
- 57 min ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 58 min ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 1 hr ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 2 hrs ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- Movies
ரம்ஜான் நாளில் சிம்பு ரசிகர்களுக்கு ட்ரீட்.. ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிட்டது படக்குழு!
- Education
ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் NIT-யில் பேராசிரியர் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- News
எவரெஸ்ட் மலை சிகரத்தையும் விட்டு வைக்காத கொரோனா - மலையேற்ற வீரருக்கு தொற்று உறுதி
- Sports
ஹர்பஜன் காலில் விழுந்த சுரேஷ் ரெய்னா. களத்திலேயே நடந்த சம்பவம்.. சக வீரர்கள் திகைப்பு..காரணம் என்ன?
- Finance
900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை வாங்கிய முகேஷ் அம்பானி.. எங்கே தெரியுமா?
- Lifestyle
கொரோனா சோதனை முடிவு நெகட்டிவாக வந்தாலும் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத்துத்தானாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய ரெட்ரோ-ஸ்டைல் பைக்கை சோதித்து பார்க்கும் யமஹா!! ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற போகுது...
பஜாஜ் டோமினாருக்கு போட்டியாக வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 250 பைக் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த சில வருடங்களாக இந்திய சந்தையில் ரெட்ரோ கிளாசிக் தோற்றத்தை கொண்ட மோட்டார்சைக்கிள்கள் வேகமாக பிரபலமாகி வருகின்றன. இதன் காரணமாகவே ராயல் என்பீல்டு ஜாவா, பெனெல்லி மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இத்தகைய தோற்றத்தில் புதிய புதிய மோட்டார்சைக்கிள்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் உலகளவில் முன்னணி மோட்டார்சைக்கிள் பிராண்ட்டான யமஹா இந்த விஷயத்தில் எந்த ஆர்வத்தையும் காட்டாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது எக்ஸ்எஸ்ஆர் வரிசை பைக் மாடல் ஒன்றை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தி இருப்பதன் மூலம் இந்த ஜப்பானிய நிறுவனமும் இந்திய சந்தைக்காக சில திட்டங்களை வைத்துள்ளதை அறிய முடிகிறது.

அதேநேரம் சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள யமஹாவின் எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் வெளிவரலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. யமஹா ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் ஆனது யமஹா ஒய்இசட்எஃப் ஆர்15 வி3 மற்றும் அதன் நாக்டு வெர்சனான எம்டி15 பைக்குகளின் அதே ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்படுகிறது.

இதனால் எக்ஸ்.எஸ்.ஆர் 155 பைக் தான் அறிமுகமாகும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது எக்ஸ்எஸ்ஆர்250 சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டதால் இதே மோட்டார்சைக்கிள் தான் அறிமுகமாகும் என்றில்லை, இதே ஸ்டைலில் ரெட்ரோ மோட்டார்சைக்கிள் ஒன்றை யமஹா சற்று அதிகமான விலையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தலாம்.

ரஷ்லேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான ஸ்பை படங்களில் பைக்கில் எந்தவொரு லோகோவையும் பார்க்க முடியவில்லை. யமஹா எப்போதுமே அதன் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள மோட்டார்சைக்கிள்களை நெடுஞ்சாலைகளில் தான் சோதனை செய்யும்.

இந்த மோட்டார்சைக்கிளும் யமுனா விரைவு சாலையில் தான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பைக் முழுவதும் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இருப்பினும் இந்த சோதனை பைக்கின் தோற்றம் 2019ல் இந்தோனிஷியாவில் கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்ட எக்ஸ்எஸ்ஆர் 250 பைக்கை போல் உள்ளது.

எஃப்.இசட் பைக்குகளை போன்று இந்த சோதனை பைக்கிலும் அலாய் சக்கரங்கள், முன்பக்க சஸ்பென்ஷன் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் என்ஜின் அமைப்பும் ஒரே மாதிரியான தோற்றத்தில் தான் காட்சியளிக்கிறது.

எக்ஸ்எஸ்ஆர் 155 பைக்கை காட்டிலும் இந்த பைக்கில் கூடுதல் சவுகரியமானதாக, மிகவும் நீளமான இருக்கை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பெட்ரோல் டேங்கின் அளவும் பெரியதாக உள்ளது போல் தெரிகிறது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் டிஜிட்டல் தரத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையில் உள்ள எஃப்இசட்25 பைக்கின் அதே 250சிசி என்ஜின் புதிய எக்ஸ்எஸ்ஆர் 250 பைக்கில் பொருத்தப்படலாம். முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போவிலேயே யமஹாவின் எக்ஸ்எஸ்ஆர் பைக் மாடல் ஒன்று காட்சிப்படுத்தப்படும் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும் தற்போது சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், புதிய யமயா எக்ஸ்எஸ்ஆர் மோட்டார்சைக்கிள் ஒன்றை இன்னும் சில மாதங்களில் இந்திய சந்தையில் எதிர்பார்க்கலாம்.