2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் கொண்டுவரப்படும் முக்கிய அப்கிரேட் இதுதான்!! ஸ்பை படம் வெளிவந்தது

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் கொண்டுவரப்படும் முக்கிய அப்கிரேட் இதுதான்!! ஸ்பை படம் வெளிவந்தது

ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒரு புதிய பைக்கை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ள ராயல் என்பீல்டு நிறுவனம் அதற்காக தீவிரமாக பணியாற்றி வருகிறது.

2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் கொண்டுவரப்படும் முக்கிய அப்கிரேட் இதுதான்!! ஸ்பை படம் வெளிவந்தது

இதன்படி முற்றிலும் புதிய மீட்டியோர் 350 பைக் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இந்த ஆண்டு துவக்கத்தில் புதிய தலைமுறை ஹிமாலயன் பைக் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் கொண்டுவரப்படும் முக்கிய அப்கிரேட் இதுதான்!! ஸ்பை படம் வெளிவந்தது

இவற்றிற்கு அடுத்து, அடுத்த புதிய பைக்காக அப்கிரேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கை அறிமுகப்படுத்த ராயல் என்பீல்டு நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய கிளாசிக் 350 பைக் கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது.

2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் கொண்டுவரப்படும் முக்கிய அப்கிரேட் இதுதான்!! ஸ்பை படம் வெளிவந்தது

இது தொடர்பாக வெளியாகி இருந்த படங்களின் மூலம், ராயல் என்பீல்டின் சிறந்த விற்பனை மாடலாக கிளாசிக் 350 பல வருடங்களாக விளங்குவதால், பைக்கின் தோற்றத்தில் எந்தவொரு மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்பதை அறிய முடிந்திருந்தது.

2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் கொண்டுவரப்படும் முக்கிய அப்கிரேட் இதுதான்!! ஸ்பை படம் வெளிவந்தது

ஆனால் முக்கிய அப்கிரேடாக பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் பயணத்திற்கான ட்ரிப்பர் நாவிகேஷன் வசதி கொண்டுவரப்படுகிறது. இதனை தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்களும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் கொண்டுவரப்படும் முக்கிய அப்கிரேட் இதுதான்!! ஸ்பை படம் வெளிவந்தது

ரஷ்லேன் செய்திதளம் மூலம் நமக்கு கிடைத்துள்ள இந்த படங்களில் புதிய கிளாசிக் 350 பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பகுதியில் புதியதாக சிறிய டிஜிட்டல் திரை ஒன்று பயண நாவிகேஷன் பேட் உடன் வழங்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் கொண்டுவரப்படும் முக்கிய அப்கிரேட் இதுதான்!! ஸ்பை படம் வெளிவந்தது

இந்த கூடுதல் டிஜிட்டல் திரை ஆனது அநேகமாக ஓடோமீட்டர் மற்றும் எரிபொருள் அளவு போன்ற அடிப்படை விபரங்களையும் காட்டும். மீட்டியோர் 350 பைக்கில் முதன்முறையாக அறிமுகமான ட்ரிப்பர் நாவிகேஷன் சிஸ்டம் புதிய ஹிமாலயனிலும் கொண்டுவரப்பட்டது.

2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் கொண்டுவரப்படும் முக்கிய அப்கிரேட் இதுதான்!! ஸ்பை படம் வெளிவந்தது

இவற்றை தொடர்ந்து ராயல் என்பீல்டின் அனைத்து தயாரிப்புகளிலும் விரைவில் வழங்கப்படவுள்ள இந்த புதிய வசதி ஆனது ஓட்டுனர் தனது ஸ்மார்ட்போனை ராயல் என்பீல்டு அப்ளிகேஷன் மூலமாக பைக்குடன் இணைக்கும்போது பயணத்திற்கு தேவையான வழிக்காட்டுதல்களை பைக்கின் டிஜிட்டல் பேடில் வழங்கும்.

2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் கொண்டுவரப்படும் முக்கிய அப்கிரேட் இதுதான்!! ஸ்பை படம் வெளிவந்தது

இதற்கு ராயல் என்பீல்டு அப்ளிகேஷனில் வழங்கப்படும் கூகுள் வரைபடத்தில் ஓட்டுனர் தான் செல்லவுள்ள இடத்தினை சுட்டிக்காட்ட வேண்டும். இவை தவிர்த்து புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கின் என்ஜின் உள்ளிட்டவற்றில் எந்த அப்கிரேடும் வழங்கப்பட போவதில்லை என்பதை ஏற்கனவே கூறிவிட்டோம்.

Most Read Articles

English summary
2021 Royal Enfield Classic 350 Instrument Cluster Spied, Gets Tripper Navigation.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X