50கிலோ எடையுள்ள பொருளைகூட அசால்டா எடுத்து போகும்! 100கிமீ ரேஞ்ஜ் வழங்கும் ரோட்லார்க் கார்கோ இசைக்கிள் அறிமுகம்

நெக்ஸு நிறுவனம் 100கிமீ ரேஞ்ஜ் வழங்கக் கூடிய இ-சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

50கிலோ எடையுள்ள பொருளைகூட அசால்டா எடுத்து போகலாம்... 100கிமீ ரேஞ்ஜ் வழங்கும் ரோட்லார்க் கார்கோ இ-சைக்கிள் அறிமுகம்!

இந்தியாவை மையமாகக் கொண்டு மின்சார இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனமான நெக்ஸு. இந்நிறுவனம் புதிய ரோட்லார்க் கார்கோ எனும் இ-சைக்கிளை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. டெலிவரி துறைக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இ-சைக்கிள் இதுவாகும்.

50கிலோ எடையுள்ள பொருளைகூட அசால்டா எடுத்து போகலாம்... 100கிமீ ரேஞ்ஜ் வழங்கும் ரோட்லார்க் கார்கோ இ-சைக்கிள் அறிமுகம்!

இதற்கு இந்திய மதிப்பில் ரூ. 42 ஆயிரம் என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. டெலிவரி சேவையை மையப்படுத்தி அறிமுகம் வாகனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் இத்துறையில் வலுவாக கால் தடம் பதிக்கும் வகையில் புதுமுக இ-சைக்கிளை நெக்ஸு அறிமுகப்படுத்தியுள்ளது.

50கிலோ எடையுள்ள பொருளைகூட அசால்டா எடுத்து போகலாம்... 100கிமீ ரேஞ்ஜ் வழங்கும் ரோட்லார்க் கார்கோ இ-சைக்கிள் அறிமுகம்!

இச்சைக்கிளில் சுமார் 50 கிலோ வரை எடையுள்ள பொருட்களை ஏற்றி செல்லும் வகையில் கேரியர் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது உறுதியான உலோகத்தாலான சதுர வடிவிலான கேரியர் ஆகும். பொருட்களை அலுங்காமல், குலுங்காமல் எடுத்துச் செல்ல ஏதுவாக இது கொடுக்கப்பட்டிருக்கின்றது.

50கிலோ எடையுள்ள பொருளைகூட அசால்டா எடுத்து போகலாம்... 100கிமீ ரேஞ்ஜ் வழங்கும் ரோட்லார்க் கார்கோ இ-சைக்கிள் அறிமுகம்!

இ-சைக்கிளின் டாப் ஸ்பீடு மணிக்கு 25கிமீ ஆகும். இத்துடன், இரு பேட்டரி செட்-அப்பையும் நிறுவனம் வழங்கியுள்ளது. இதில், ஒன்று நிரந்தரமானது. மற்றொன்று, கழட்டி மாட்டும் தன்மையில் உள்ளது. ஆகையால், ஒற்றை பேட்டரியை தேவைக்கேற்ப கழட்டிச் சென்று சார்ஜ் செய்து கொள்ளலாம்.

50கிலோ எடையுள்ள பொருளைகூட அசால்டா எடுத்து போகலாம்... 100கிமீ ரேஞ்ஜ் வழங்கும் ரோட்லார்க் கார்கோ இ-சைக்கிள் அறிமுகம்!

இதன் கேரியரை நமது விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம் என நிறுவனம் கூறுகின்றது. ஆனால், வழக்கமாக வழங்கும் கேரியரானது ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற உணவு டெலிவரி மேன்கள் பயன்படுத்தும் சேட்டில் பேக்குகளை எளிதில் எடுத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

50கிலோ எடையுள்ள பொருளைகூட அசால்டா எடுத்து போகலாம்... 100கிமீ ரேஞ்ஜ் வழங்கும் ரோட்லார்க் கார்கோ இ-சைக்கிள் அறிமுகம்!

இந்த கேரியர் தவிர இ-சைக்கிளின் முன் பகுதியிலும் சிறிய கேரியர் சிறிய பார்சல்களைக் கையாளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இ-வணிகம் (ஆன்லைன் வர்த்தகம்) துறை நாட்டில் அதிவேகத்தில் வளர்ந்து வருகின்றது. அத்தியாவசியப் பொருட்கள் தொடங்கி அனைத்து விதமான பொருட்களையும் ஆன்லைன் ஷாப்புகள் வாயிலாகவே மக்கள் வாங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

50கிலோ எடையுள்ள பொருளைகூட அசால்டா எடுத்து போகலாம்... 100கிமீ ரேஞ்ஜ் வழங்கும் ரோட்லார்க் கார்கோ இ-சைக்கிள் அறிமுகம்!

இதன் காரணத்தினாலேயே இத்துறையை மையமாகக் கொண்டு நெக்ஸு ரோட்லார்க் கார்கோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இ-சைக்கிளில் 250வாட் 36வோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே மணிக்கு 25கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறனை இ-சைக்கிளுக்கு வழங்குகின்றது.

50கிலோ எடையுள்ள பொருளைகூட அசால்டா எடுத்து போகலாம்... 100கிமீ ரேஞ்ஜ் வழங்கும் ரோட்லார்க் கார்கோ இ-சைக்கிள் அறிமுகம்!

தொடர்ந்து, இதில் வழங்கப்பட்டிருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் மணிக்கு 100கிமீ வரை செல்லும். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 3 முதல் 4 மணி நேரங்கள் தேவைப்படும். இ-சைக்கிளில் இடம்பெற்றிருக்கும் இரு பேட்டரிகளையும் சார்ஜ் செய்ய இந்த நேரமே போதும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

50கிலோ எடையுள்ள பொருளைகூட அசால்டா எடுத்து போகலாம்... 100கிமீ ரேஞ்ஜ் வழங்கும் ரோட்லார்க் கார்கோ இ-சைக்கிள் அறிமுகம்!

மேலும், இ-சைக்கிளின் இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது சிறந்த பிரக்கிங் திறனை வழங்க உதவும். இத்துடன், செல்லும் வேகம், பேட்டரியின் அளவு மற்றும் பிற முக்கிய தகவல்களை அறிந்துக் கொள்வதற்கு ஏதுவாக சிறிய டிஜிட்டல் டிஸ்பிளே வழங்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

English summary
Nexzu Roadlark Cargo Electric Cycle Launched In India With 100KM Range. Read In Tamil.
Story first published: Sunday, May 23, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X