டிவிஎஸ் சொந்தமாக்கிய பிரிட்டிஷ் நார்டன் பிராண்டின் புதிய சூப்பர்பைக்!! வி4எஸ்வி என்ற பெயரில் வெளியீடு!

பிரபல பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் நார்டன் பிராண்டை கடந்த 2020ஆம் வருட துவக்கத்தில் நமது தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வாங்கியது. அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மோட்டார்சைக்கிள்கள் தயாரிப்பு பணிகளை இங்கிலாந்தில் இந்த ஆண்டு இறுதிக்குள், கட்டப்பட்டுவரும் புதிய தொழிற்சாலையில் துவங்கும் என கூறப்பட்டது.

டிவிஎஸ் சொந்தமாக்கிய பிரிட்டிஷ் நார்டன் பிராண்டின் புதிய சூப்பர்பைக்!! வி4எஸ்வி என்ற பெயரில் வெளியீடு!

யுகே-வில் கவுண்டிக்கு அருகே சோலிஹுல் என்கிற பகுதியில் கட்டமைக்கப்பட்டுவரும் இந்த தொழிற்சாலையில் புதிய நார்டன் மோட்டார்சைக்கிள்கள் தயாரிக்கப்பட உள்ளன. உலகின் மிக பழமையான மோட்டார்சைக்கிள் பிராண்ட்களுள் ஒன்றாக விளங்கும் நார்டனை 16 மில்லியன் பவுண்டிற்கு டிவிஎஸ் சொந்தமாக்கியது.

டிவிஎஸ் சொந்தமாக்கிய பிரிட்டிஷ் நார்டன் பிராண்டின் புதிய சூப்பர்பைக்!! வி4எஸ்வி என்ற பெயரில் வெளியீடு!

ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் டிவிஎஸ் நிறுவனம் இதுவரையில் மேற்கொண்டுள்ள மிக பெரிய கையகப்படுத்துதல் இதுவாகும். டிவிஎஸ் நிறுவனத்துடனான கூட்டணிக்கு பிறகு நார்டன் நிறுவனத்தின் செயல்பாடுகள் சூடுப்பிடிக்க ஆரம்பித்தன. புதிய பிராண்ட் பார்வையில் விநியோக சங்கிலியை பலப்படுத்தி வரும் நார்டன் அதேநேரம் புதியதாக சில மோட்டார்சைக்கிள்களையும் அறிமுகப்படுத்த தயாரகி வருகிறது.

டிவிஎஸ் சொந்தமாக்கிய பிரிட்டிஷ் நார்டன் பிராண்டின் புதிய சூப்பர்பைக்!! வி4எஸ்வி என்ற பெயரில் வெளியீடு!

இதற்கிடையில் நார்டன் வி4 பைக்குகளின் உரிமையாளர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சனைகள் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வி4எஸ்வி என்ற பெயரில் புதிய மோட்டார்சைக்கிளினை இந்த பிரிட்டிஷ் பைக் தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்துள்ளது. முந்தைய வி4எஸ்எஸ் மாடலுக்கு மாற்றாக கொண்டுவரப்படும் இது வி4எஸ்எஸ் பைக்கில் இருந்து சில பாகங்களை பெற்றுள்ளது.

டிவிஎஸ் சொந்தமாக்கிய பிரிட்டிஷ் நார்டன் பிராண்டின் புதிய சூப்பர்பைக்!! வி4எஸ்வி என்ற பெயரில் வெளியீடு!

கருப்பு நிறத்தில் முன்பக்க எதிர்காற்று தடுப்பு கண்ணாடிகள், சிவப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட அலாய் சக்கரங்கள், பருமனான பெட்ரோல் டேங்க், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட எக்ஸாஸ்ட் அமைப்பு, வலிமையான இருக்கைகள், இரட்டை ஹெட்லேம்ப் செட்அப் மற்றும் பின்பக்கத்தில் யூனியன் ஜாக் கொடியின் படம் உள்ளிட்டவற்றுடன் நார்டன் வி4எஸ்வி ஆனது முழுவதும் பேனல்களால் நிரப்பப்பட்ட மோட்டார்சைக்கிளாக உருவாக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் சொந்தமாக்கிய பிரிட்டிஷ் நார்டன் பிராண்டின் புதிய சூப்பர்பைக்!! வி4எஸ்வி என்ற பெயரில் வெளியீடு!

கையால் வடிவமைக்கப்பட்ட அலுமினியம் ட்யூப் ஃப்ரேமில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய நார்டன் பைக்கில் சஸ்பென்ஷனிற்கு ப்ரெம்போ மோனோப்ளாக் காலிபர்களும், பின்பக்கத்தில் ஹோலின்ஸ் நிறுவனத்தின் செட்-அப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் செயல்படுதிறனிற்கு வழக்கமான வி4 என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது.

டிவிஎஸ் சொந்தமாக்கிய பிரிட்டிஷ் நார்டன் பிராண்டின் புதிய சூப்பர்பைக்!! வி4எஸ்வி என்ற பெயரில் வெளியீடு!

இருப்பினும் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் 185 பிஎச்பி ஆக கொண்டுவரப்பட்டுள்ளது. இது முன்பை காட்டிலும் 15 பிஎச்பி குறைவாகும். அதேபோல் என்ஜின் வழங்கும் டார்க் திறனும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை 10,000 ஆர்பிஎம்-இல் அதிகப்பட்ச டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் என்ஜின் ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

டிவிஎஸ் சொந்தமாக்கிய பிரிட்டிஷ் நார்டன் பிராண்டின் புதிய சூப்பர்பைக்!! வி4எஸ்வி என்ற பெயரில் வெளியீடு!

இவற்றுடன் 6-இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பின்பக்கத்தை பார்த்தவாறு பொருத்தப்பட்டுள்ள கேமிரா, சாவியில்லா என்ஜின் ஸ்டார்ட் அமைப்பு உள்ளிட்டவையும் புதிய நார்டன் வி4எஸ்வி பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. சிவப்பு & கருப்பு நிற பின்ஸ்ட்ரிப்கள் மற்றும் ஓஸ் சக்கரங்களை கொண்ட மேன்க்ஸ் சில்வர் மற்றும் பிஎஸ்டி சக்கரங்களுடன் கார்பன் ஃபைபர் தீம் என்ற இரு விதமான பெயிண்ட் தேர்வுகள் இந்த புதிய நார்டன் பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன.

டிவிஎஸ் சொந்தமாக்கிய பிரிட்டிஷ் நார்டன் பிராண்டின் புதிய சூப்பர்பைக்!! வி4எஸ்வி என்ற பெயரில் வெளியீடு!

இந்திய சந்தைக்கு இந்த பைக் கொண்டுவரப்படுமா என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் இவ்வாறான புதிய நார்டன் பைக்குகள் முதலாவதாக நன்கு பரீட்சையமான யுகே சந்தைகளிலும், அதன்பின் மற்ற ஐரோப்பிய நாட்டு சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே நார்டன் மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தையில் டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் சொந்தமாக்கிய பிரிட்டிஷ் நார்டன் பிராண்டின் புதிய சூப்பர்பைக்!! வி4எஸ்வி என்ற பெயரில் வெளியீடு!

இதற்கிடையில் கடந்த 2021 மே மாதத்தில் கமெண்டோ, அட்லாஸ், ஃபாஸ்ட்பேக் மற்றும் மேங்க்ஸ் என்ற நான்கு பெயர்களை நார்டன் நிறுவனம் பதிவு செய்து கொண்டுள்ளது. இதில் நார்டன் கமெண்டோ மாடல் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருந்துள்ளது. அப்போது இதில் பொருத்தப்பட்ட 961சிசி, இணையான-இரட்டை என்ஜின் அதிகப்பட்சமாக 80 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது.

டிவிஎஸ் சொந்தமாக்கிய பிரிட்டிஷ் நார்டன் பிராண்டின் புதிய சூப்பர்பைக்!! வி4எஸ்வி என்ற பெயரில் வெளியீடு!

பழமையான ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளின் தோற்றத்தில் வடிவமைக்கப்படும் நார்டன் அட்லாஸ் ஆனது இரட்டை-பயன்பாட்டு டயர்களுடன் ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற மோட்டார்சைக்கிளாக வடிவமைக்கப்பட உள்ளது. இதில் பொருத்தப்பட உள்ள என்ஜின் அதிகப்பட்சமாக 84 பிஎச்பி மற்றும் 64 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #நார்டன் #norton
English summary
Norton Motorcycles Unveil V4SV Superbike, Replacement to V4SS.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X