வேகம்தான் குறைவு, ஆனா ரேஞ்ஜ் ரொம்ப அதிகம்... இரு இ-ஸ்கூட்டர்களை வெளியீடு செய்த ஷீமா எலெக்ட்ரிக்!

இந்திய நிறுவனமான ஷீமா எலெக்ட்ரிக் (Shema Electric) இரு புதுமுக மின்சார வாகனங்களை இவி இந்தியா எக்ஸ்போ 2021 (EV India Expo 2021)-இல் வெளியீடு செய்திருக்கின்றது. இவ்விரு இ-வாகனங்களின் சிறப்புகள் குறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வேகம்தான் குறைவு, ஆனா ரேஞ்ஜ் ரொம்ப அதிகம்... இரு இ-ஸ்கூட்டர்களை வெளியீடு செய்த ஷீமா எலெக்ட்ரிக்!

உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மையத்தில் இவி இந்தியா எக்ஸ்போ 2021 (EV India Expo 2021) எனும் பெயரில் மின் வாகனங்களுக்கான பிரத்யேக கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இங்கு முன்னணி மற்றும் ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனங்கள், அவற்றின் புதுமுக தயாரிப்புகளை காட்சிப்படுத்தி (வெளியீடு செய்து) வருகின்றன.

வேகம்தான் குறைவு, ஆனா ரேஞ்ஜ் ரொம்ப அதிகம்... இரு இ-ஸ்கூட்டர்களை வெளியீடு செய்த ஷீமா எலெக்ட்ரிக்!

அந்தவகையில், ஒடிசா மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஷீமா எலெக்ட்ரிக் (Shema Electric) மற்றும் சோலார் பிரைவேட் லிமிடெட் (Solar Private Limited) நிறுவனம், அதன் இரு புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியீடு செய்திருக்கின்றது. எஸ்இஎஸ் டஃப் (SES Tuff) மற்றும் எஸ்இஎஸ் ஹாப்பி (SES Hobby) ஆகிய இரண்டு மின்சார இருசக்கர வாகனங்களே இவி இந்தியா எக்ஸ்போ 2021 அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

வேகம்தான் குறைவு, ஆனா ரேஞ்ஜ் ரொம்ப அதிகம்... இரு இ-ஸ்கூட்டர்களை வெளியீடு செய்த ஷீமா எலெக்ட்ரிக்!

எஸ்இஎஸ் டஃப்

இதில், எஸ்இஎஸ் டஃப் உயர்-வேக ரக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமாகும். இது பிசினஸ்-டூ-பிசினஸ் (business to business) எனும் பிரிவை மையப்படுத்தி விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அதாவது, வர்த்தக பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இவ்வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், டெலிவரி போன்ற சேவையை மேற்கொண்டு வரும் நிறுவனங்களுக்கு மட்டுமே இவ்வாகனம் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது.

வேகம்தான் குறைவு, ஆனா ரேஞ்ஜ் ரொம்ப அதிகம்... இரு இ-ஸ்கூட்டர்களை வெளியீடு செய்த ஷீமா எலெக்ட்ரிக்!

இந்த இருசக்கர வாகனத்தின் உச்சபட்ச வேகம் மணிக்கு 60 கிமீ ஆகும். இதன் உச்ச ரேஞ்ஜ் திறன் 150 கிமீ என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதேபோல், இவ்வாகனம் அதிகபட்சமாக 150 கிலோ வரையில் சரக்குகளை ஏற்றி செல்லும் திறனைப் பெற்றிருக்கின்றது. இத்தகைய வசதிகளுடனேயே எஸ்இஎஸ் டஃப் இ-வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

வேகம்தான் குறைவு, ஆனா ரேஞ்ஜ் ரொம்ப அதிகம்... இரு இ-ஸ்கூட்டர்களை வெளியீடு செய்த ஷீமா எலெக்ட்ரிக்!

இந்த வாகனத்தில் இரட்டை 60V, 30 Ah லித்தியம் பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த பேட்டரியை தனியாக கழட்டி எடுக்க முடியும். பேட்டரியை எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று சார்ஜ் செய்து கொள்ளும் விதமாக இவ்வசதி கொடுக்கப்பட்டிருக்கின்றது.

வேகம்தான் குறைவு, ஆனா ரேஞ்ஜ் ரொம்ப அதிகம்... இரு இ-ஸ்கூட்டர்களை வெளியீடு செய்த ஷீமா எலெக்ட்ரிக்!

எஸ்இஎஸ் ஹாப்பி

எஸ்இஎஸ் ஹாப்பி ஓர் ஸ்கூட்டர் ரக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமாகும். முன்னதாக கூறியதைப் போல் இது ஓர் குறைந்த வேக இயக்கம் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதன் உச்ச வேகமே மணிக்கு 25 கிமீ ஆகும். இந்த வேகத்திலேயே வேகத்திலேயே எஸ்இஎஸ் ஹாப்பி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சாலையில் இயங்கும்.

வேகம்தான் குறைவு, ஆனா ரேஞ்ஜ் ரொம்ப அதிகம்... இரு இ-ஸ்கூட்டர்களை வெளியீடு செய்த ஷீமா எலெக்ட்ரிக்!

இது மிக மிக குறைவான வேகம் என்பதனால் இந்த இ-ஸ்கூட்டரை சாலையில் வைத்து இயக்க பதிவு சான்றோ அல்லது ஓட்டுநர் உரிமமோ தேவையில்லை. அதேநேரத்தில், இந்த வாகனம் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

வேகம்தான் குறைவு, ஆனா ரேஞ்ஜ் ரொம்ப அதிகம்... இரு இ-ஸ்கூட்டர்களை வெளியீடு செய்த ஷீமா எலெக்ட்ரிக்!

இந்த மிக சிறந்த ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 60 V, 30 Ah பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுவும் கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி ஆகும். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் தேவைப்படும். இதை ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தில் வைத்து சார்ஜ் செய்தால் எவ்வளவு வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.

வேகம்தான் குறைவு, ஆனா ரேஞ்ஜ் ரொம்ப அதிகம்... இரு இ-ஸ்கூட்டர்களை வெளியீடு செய்த ஷீமா எலெக்ட்ரிக்!

இதேபோல் தற்போது வெளியீட்டைப் பெற்றிருக்கும் இரு இ-மின்சார வாகனங்களின் அறிமுகம் பற்றிய தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், மிக விரைவில் இந்த இ-வாகனங்கள் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தின்கீழ் தற்போது 75 விற்பனையகங்கள் 13 மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றது.

வேகம்தான் குறைவு, ஆனா ரேஞ்ஜ் ரொம்ப அதிகம்... இரு இ-ஸ்கூட்டர்களை வெளியீடு செய்த ஷீமா எலெக்ட்ரிக்!

ஒட்டுமொத்தமாக நிறுவனம் நான்கு விதமான மாடல்களை மின்சார வாகன சந்தையில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த நிலையிலேயே மிக விரைவில் இவற்றின் பட்டியல் கூடுதல் சில தேர்வுகளை இணைக்கும் வகையில் எஸ்இஎஸ் டஃப் மற்றும் எஸ்இஎஸ் ஹாப்பி ஆகிய இரு புதுமுகங்களை வெளியீடு செய்திருக்கின்றது.

வேகம்தான் குறைவு, ஆனா ரேஞ்ஜ் ரொம்ப அதிகம்... இரு இ-ஸ்கூட்டர்களை வெளியீடு செய்த ஷீமா எலெக்ட்ரிக்!

இதுமட்டுமின்றி 75 ஆக இருக்கும் விற்பனையகங்களை மேலும் பல மடங்கு உயர்த்தும் வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், புதிதாக ராஜஸ்தான், பஞ்சாப், ஹர்யானா, கேரளா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இன்னும் ஆறு மாதங்களில் புதிய விற்பனையகங்கள் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

English summary
Odisha based ev manufacturer shema electric unveils 2 e two Wheelers at ev india expo 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X